Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 1st February 2023

Daily Current Affairs

Here we have updated 1st February 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

தமிழகச் செய்தி

  • தூத்துக்குடி துறைமுகத்திற்கான நிலக்கரி இறக்கும் இயந்திரங்களின் செயல்பாடுகளை தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார்.

தேசிய செய்தி

  • முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு பிரிட்டனின் வாழ்நாள் சாதனை விருது அறவிப்பு.
    • பிரிட்டனில் உள்ள பல்கலைக் கழங்களில் பயின்ற இந்திய மாணவர்களின் சாதனைகளை கெளரவிக்கும் விதமாக, இந்திய-பிரிடடன் சாதனையாளர்கள் விருதை தேசிய இந்திய மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் சங்கம் பிரிட்டன் (NISA UK) இந்தியாவில் உள்ள பிரிட்டிஷ் கவுன்சில், பிரிட்டனின் சர்வதேச வர்த்தக் துறை உள்ளிட்டவை இணைந்து வழங்குகின்றன.
  • நாடு சுதந்திர நூற்றாண்டைக் கொண்டாவுள்ள நிலையில் அடுத்த 25 ஆண்டுகளில் தற்சார்பு சக்தியாக மாற வேண்டும் என குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தெரிவித்துள்ளார்.
  • மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை 2022-23ம் ஆண்டு பட்ஜெட் மதிப்பீட்டில் 59.8% கடந்த டிசம்பர் இறுதியில் எட்டியது.
    • அரசின் வருவாய்க்கும், செலவினத்திற்கும் இடையிலான வித்தியாசமான நிதிப்பற்றாக்குறை நடப்பு நிதியாண்டில் 16.61 லட்சம் கோடியாக (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.4%) இருக்கும் என்ற பட்ஜெட் மதிப்பீட்டில் இருந்தது.
  • 2023-24 நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 6 முதல் 6.8%மாக இருக்கும் என்று மத்திய அரசின் பொருளாதார அறிக்கையில் தெரிவிக்கப்பட்டள்ளது.
  • தேசிய கல்விக் கொள்கை அடுத்து ஒன்றரை ஆண்டுகளுக்குள் அமல்படுத்தப்பட உள்ளது என மத்திய உயர்கல்வித் துறைச் செயலார் கே.சஞ்சய் மூர்த்தி தெரவித்துள்ளார்.
  • பிராஜக்ட் 39A என்ற பெயரில் “இந்தியாவின் மரண தண்டனை : ஆண்டு புள்ளி விவரங்கள் 2022” ஆய்வறிக்கையின்படி 2022-ன் படி 165 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது என அறிக்கை தெரிவிக்கிறது.
  • க்யூஆர்கோடு, ஹேலாகிராம் உள்ளிட்ட 3வகையான பாதுகாப்பு அம்சங்களுடன் வாக்காளர் அட்டை புதிதாக விண்ணப்பிப்போருக்கு வழங்கப்பட உள்ளது.
  • பிப்ரவரி 2-3வரை அசாமின் குவஹாத்தியில் “ஜி20ன் முதல் நிலையான நிதி செயற்குழு கூட்டம்” நடைபெறுகிறது.
  • புதுதில்லியில் உள்ள தேசிய மகளிர் ஆணையம் தனது 31வது நிறுவன தினத்தை கொண்டாடுகிறது.
    • கருப்பொருள் : “சஷக்த் நாரி சஷக்த் பாரத்”
    • தேசிய மகளிர் ஆணையம் உருவாக்கப்பட்ட நாள் : 31 ஜனவரி 1992
    • தேசிய மகளிர் ஆணைய சட்டம் – 1990
  • ஆந்திரப் பிரதேசத்தின் புதிய தலைநகரமாக விசாகப்பட்டினம் மாற்றப்பட்டள்ளது.
    • ஆந்திரா 2014-ல் ஜீன் மாதம் ஆந்திரம், தெலுங்கானா மாநிலமாக பிரிக்கப்பட்டபின் ஆந்திர மாநிலத்தின் தலைநகராக அமராவதி அறிவிக்கப்பட்டது.

முக்கிய தினம்

  • இந்திய கடலோர காவல்படை தினம்.

Jan 29-30 Current Affairs | Jan 31 Current Affairs

Leave a Comment