Daily Current Affairs
Here we have updated 01-02nd January 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competative exams like TNPSC, TRB and Police Exams.
தமிழக செய்தி
- ஜனவரி 01 முதல் மதுரை, ராமேஸ்வரம், திருவண்ணாமலை கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் அறிமுகம்.
- தமிழக அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு.
- 34%மாக இருந்த அகவிலைப்படி 38%மாக அதிகரித்துள்ளது.
- “நலம் 365” என்ற யூ-டியூப் சேனல் தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறைக்கென பிரத்தேயமாக தொடங்கப்பட்டுள்ளது.
- இஸ்ரோ ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்த இருவழி தகவல் பரிமாற்ற கருவியை விசைப்படகுகளில் பொருத்தும் திட்டத்தினை தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார்.
- தமிழக போக்குவரத்து சார்பில் அரசு பணிமனைகள் இல்லாத இடத்திற்காக நடமாடும் பணிமனைகள் (Mobile Workshop) தொடங்கப்பட்டுள்து.
தேசிய செய்தி
- NIA சார்பில் இதுவரை இல்லாத வகையில் 2022-ம் ஆண்டில் 72 பயங்கரவாத வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள.
- NIA – தேசிய புலனாய்வு முகமை
- ஆரம்பிக்கப்பட்ட வருடம் – 2008
- இதன் கிளை அலுவலகங்கள் தற்போது 18ஆக உயரந்துள்ளது. அடுத்த ஆண்டில் 24ஆக உயர உள்ளது.
- ஜனவரி 1 முதல் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் (NFSA) கீழ் உள்ள 81.35கோடி பயனாளிகளுக்கு ஆண்டு முழுவதும் இலவச உணவு தானியங்கள் விநியோகிக்கப்பட உள்ளது.
- தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் – 2013
- விண்வெளிது்துறையில் வளர்ச்சி அடைந்த நாடுகளுடன் போட்டியிட்டு வரும் இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவுக்கு 2023-ம் ஆண்டு பெரும் சவாலாக கருதப்படுகிறது.
- இவ்வாண்டில் சூரியன், சந்திரனை ஆய்வு செய்ய செயற்கைகோளை அனுப்புகிறது.
- மேலும் விண்வெளிக்கு மனிதனை அனுப்பி மீண்டும் அழைத்து வரும் சுகன்யான் விண்கலத்தை சோதனை நடத்தும் திட்டத்தையும் இஸ்ரோ செயல்படுத்த உள்ளது.
- ஜனவரி 3-7 வரை 108வது இந்திய அறிவியல் மாநாடு மகாராஷ்டிரா மாநிலம் நாகபுரியில் நடைபெற உள்ளது.
- “பெண்களின் முன்னேற்றத்துடன் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தின் வளர்ச்சி” என்ற தலைப்பில் பிரதமர் உரையாற்ற உள்ளார்.
- 1914-முதல் இம்மாநாடு நடைபெற்று வருகிறது.
- “2021-ல் இந்தியாவில் நிகழ்ந்த சாலை விபத்துகள்” அறிக்கையில் கைபேசி பயண்படுத்தி வாகனம் ஓட்டிலயில் 1,040 பேர் பலிய என மத்திய அரசு அறிவிப்பு.
- ஒடிசா மாநிலத்தின் பர்கார்வில் உலகின் மிகப்பெரிய திறந்தவெளி நிகழ்ச்சியான தனு யாத்திரை நடைபெறுகிறது.
உலக செய்தி
- ஐ.நா. தடையை மீறி 3 ஏவுகணைகளை ஏவி வடகொரியா சோதனை செய்துள்ளது.
முக்கிய தினம்
- உலகளாவிய குடும்ப தினம் (ஜனவரி 1)