Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 01st March 2023

Daily Current Affairs

Here we have updated 01st March 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

தமிழகச் செய்தி

 • பிப்ரவரி 28-ல் “ஏற்றமிகு ஏழு திட்டங்கள்” தமிழக முதல்வரால் துவக்கி வைக்கபட்டது.
  • ஏற்றமிகு ஏழு திட்டம் என்பது வெவ்வேறு துறைகளில் ஒரே நேரத்தில் துறை சார்ந்த திட்டங்களை அறிவித்தல்
 • ஏற்றமிகு ஏழு திட்டங்களில் அமைந்துள்ள சிறப்பு அம்சங்கள்
  1. ரூ.1,136 கோடி மதிப்பீல் 44 புதிய மருத்துவனைகளின் கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல்
  2. ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள், தாய்மார்களுக்கு சிறப்பு ஊட்டச்சத்து அளிக்கும் திட்டம்.
  3. திருநங்கையர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.1,000லிருந்து ரூ.1,500ஆக உயர்வு
  4. மாநகராட்சி-நகராட்சிப் பகுதிகளில் முதல்வரின் காலை உணவுத்திட்டம்
  5. இறந்த தூய்மைப் பணியாளர் குடும்பத்தினரை அடையாளம் கண்டு அவர்கள் தொழில் தொடங்க ஆலோசனை வழங்க வகை செய்யும் புரிந்துணர்வு ஒப்பந்தம்
  6. மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் இலவச வீட்டுமனைப் பட்டா
  7. கருணை அடிப்படையில் 192பேருக்கு பணி நியமன உத்தரவு
 • கட்டணமில்லா பேருந்து பயணம்,  மகளிருக்கான உரிமைத் தொகை திட்டம் ஆகியன சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் என தமிழக முதல்வர் கூறியுள்ளார்.
  • கட்டணமில்லா பேருந்து பயணம் – 08.05.2021

தேசிய செய்தி

 • ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சார்பில் பயன்பாட்டு காலம் முடிந்த வாகனங்களை அழிக்கும் மையம்-த்தினை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி திறந்து வைத்தார்
  • இதன் மூலும் ரூ.40,000 கோடி கூடுதல் ஜிஎஸ்டி வருவாய் கிடைக்க கூடும்.
  • நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மோட்டார் வாகன உற்பத்தி துறையின் பங்களிப்பு 7.1%மாக உள்ளது
 • நவீன தொழில் நுட்பங்களின் பயன்பாடு இந்தியாவை 2047-ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த நாடாக மாற்றும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
  • ஒரே நாடு, ஓரே குடும்ப அட்டை (2018), ஜன் தன் வங்கிக் கணக்கு, ஆதார் எண்-அறிதிறன் பேசி இணைப்பு உள்ளிட்டவை வாயிலாக எழைகள் பலனடைய தொழில்நுட்பம் உதவி வருவதாக தெரிவித்துள்ளார்.
  • கர்மயோகி” திட்டத்தின் மூலம் மத்திய அரசு பணியாளர்களுக்கு பயிற்சி வழங்கும் திட்டம் மேம்படுத்த வேண்டும்.
 • 2022-23ஆம் நிதியாண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான 3வது காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி (ஒட்டுமொத்த உற்பத்தி-ஜிடிபி) 4.4%மாக குறைந்துள்ளது என தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ) தெரிவித்துள்ளது.
  • 2வது காலாண்டு – 6.3%
  • 2021ல் 3வது காலாண்டு – 11.2%
 • 2022-23 ஆம் நிதியாண்டுக்கான நிதிப்பற்றாக்குறை இலக்கானது ஜனவரியில் 67.8% எட்டியுள்ளது என்று கணக்குகள் கட்டுப்பாட்டு இயக்குநரகம் (சிஜிஏ) தெரிவித்துள்ளது.
  • நிதிப்பற்றாக்குறை என்பது அரசின் செலவிற்கும் வருவாய்க்கும் இடையேயான வேறுபாடு ஆகும்.

விளையாட்டுச் செய்தி

 • 2022-ம் ஆண்டிற்கான சிறந்த வீரராக அர்ஜென்டினா வீரர் லயோனல் மெஸ்ஸி, சிறந்த வீராங்கனையாக அலெக்ஸியா புடெலாஸ் ஆகியோரை கால்பந்து சங்ககளுக்கான சர்வதேச சம்மேளனம் (ஃபிபா) அறிவித்துள்ளது.
  • மெஸ்ஸி 7வது முறை இவ்விருதினை பெற்றுள்ளார். மேலும் சிறந்த லெவன் பட்டியிலில் 16வது முறையாக இடம் பெற்று புதிய சாதனை படைத்துள்ளார்
  • தேசிய அணிக்காக 100 ஆட்டங்களில் பங்கேற்ற வீராங்களை என்ற பெருமை பெற்றுள்ளார்.
  • சிறந்த பயிற்சியாளராக அர்ஜென்டீனாவின் லயோனல் ஸ்கலோனி, மகளிர் அணி சிறந்த பயிற்சியாளராக சரினா வெய்மன்  ஆகியோர் தேர்வானார்கள்.
  • சிறந்த மாற்றுத்திறனாளி வீரராக போலந்தின் மார்சின் அலெக்ஸி தேர்வானார்.
 • மகாராஷ்டிராவில் நடைபெற்ற 84வது சீனியர் தேசிய பாட்மின்டன் போட்டியில் ஆடவர் பிரிவில் மிதுன் மஞ்சுநாத், மகளிர் பிரிவில் அனுபமா உபாத்யாய சாம்பியன் பட்டம் வென்றனர்.
 • மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் நடைபெற்ற மகளிருக்கான தேசிய வாலிபால் போட்டியில் தமிழ்நாடு மகளிர் காவலர் அணி 2வது இடம் பெற்றுள்ளது.

Feb 26-27 Current Affairs  |  Feb 28 Current Affairs

Leave a Comment