Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 1st April 2023

Daily Current Affairs

Here we have updated 1st April 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

தமிழகச் செய்தி

  • வேலைவாய்ப்பு காரணமாக தமிழகத்துக்கு இடம்பெயர்ந்து வரும் பிற மாநிலத் தொழிலாளர்களின் குழந்தைகள் தங்கள் தாய்மொழியுடன் தமிழை தங்கு தடையின்றி பேசவும், எழுதவும் “தமிழ் மொழி கற்போம்” என்ற புதிய திட்டம் தொடங்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
    • புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் கற்போர் மையங்களுக்கு மாநில எழுத்தறிவு விருது ரூ.11லட்சம் மதீப்பீட்டில் வழங்கப்படும்.
  • சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் தயாரிக்கப்படும் மண்பாண்ட கைவினைப் பொருள்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
    • நவம்பர் 30-ஆம் தேதி மானாமதுரை மண்பாண்டப் பொருள்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்படுவதாக மத்திய அரசிதழில் அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வருவதற்கு 4 மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்பது சட்ட விதியாகும். கடந்த மார்ச் 30-ஆம் தேதியுடன் 4 மாதங்கள் முடிவடையும் நிலையில் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
    • இதுவரை தமிழகத்தில் 56 பொருள்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    • புவிசார் குறியீடு பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் பெறக்கூடிய நிலையில் உள்ளது.
    • ஓரிடத்தில் விளையக்கூடிய பொருள்கள் அல்லது தயாரிக்கக்கூடிய பொருள்களின் தரம் அந்த இடத்தில் காலநிலை, புவியியல் பகுதி, தனித்துவ தன்மை ஆகியவற்றின் அடைப்படையில் புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது.
    • இதற்காக உருவாக்கப்பட்ட இந்தியாவின் “பொருள்கள் புவிசார் குறியீடுகள் (பதிவு மற்றும் பாதுகாப்பு) சட்டம் 1999 என்ற சட்டம் 2003-ம் ஆண்டு செப்டம்பர் 15-முதல் நடைமுறையில் இருந்துவருகிறது.
      இந்த குறியீடு 10 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும். அதன் பின்பு புதிப்பித்து கொள்ளலாம்.
    • உலகில் முதன் முறையாக டார்ஜிலிங் தேயிலைக்கு புவிசார் குறியீடு (2004) வழங்கப்பட்டது

தேசிய செய்தி

  • மார்ச் 31-ல் வெளியிட்டுள்ள வெளிநாட்டு வர்த்தக கொள்கையில் 2030-ம் ஆண்டுக்குள் நாட்டின் ஏற்றுமதியை சுமார் ரூ.160 கோடியாக அதிகரிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    • பொருள்களின் ஏற்றுமதி மதிப்பை சுமார் ரூ.80லட்சம் கோடியாகவும், சேவைகள் ஏற்றுமதி மதிப்பை சுமார் ரூ.80 லட்சம் கோடியாகவும் அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
  • கேரளத்தை சேர்ந்த மலையாள பெண் எழுத்தாளர் சாரா தாமஸ்(88) காலமானார்.
    • இவர் கேரள சாகித்திய அகாதமி விருதை இருமுறை பெற்றுள்ளார்
    • 1979ல் “நர்மடிபுடவா” என்ற படைப்பிற்காகவும், 2010 – மலையாள இலக்கியத்திற்கு ஆற்றிய ஒட்டுமொத்த பங்களிப்பிற்காகவும் வழங்கப்பட்டது.
  • ஏப்ரல் 3 முதல் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவதற்கான தேர்தல் நிதிப் பத்திரங்களின் விற்பனை தொடங்க உள்ளது.
    • அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதை முறைப்படுத்தும் தேர்தல் நிதிப் பத்திரங்கள் 2018-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
  • மார்ச் 31-ல் ஆஸ்கர் விருது வென்ற “தி எலிஃப்ன்ட் விஸ்பரர்ஸ்” ஆவண குறும்படத்தின் தயாரிப்பாளர் குனீத் மோங்கோ, இயக்குநர் கார்த்திக் கோன்சால்வஸ் ஆகியோர் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை சந்தித்தினர்.
    • 12.03.20023-ல் அமெரிக்காவில் “95வது ஆஸ்கர் விழா” நடைபெற்றது.
  • 2022-23ம் நிதியாண்டில் இபிஎஃப் வட்டியை 8.15%மாக அதிகரிக்க மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.
  • ஆயுதங்களைக் கண்டறியும் அதிநவீன “சுவாதி” ரேடார் அமைப்பை பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனம் தயாரித்து வருகிறது.

Mar 28-29 Current Affairs  |  Mar 30-31 Current Affairs

Leave a Comment