Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 1st November 2022

Daily Current Affairs

தமிழக செய்தி

  • உள்ளாட்சி தினமான நவம்பர் 1-ல் கிராமசபை கூட்டம் நடத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ளது.
    • இதன் மூலம் கிராமசபை நடத்தப்படும் நாட்கள் நான்கிலிருந்து ஐந்தாக உயர்ந்துள்ளது.
    • குடியரசு தினம் (ஜன-26), மே தினம் (மே-1), சுதந்திர தினம் (ஆக-15), காந்தி ஜெயந்தி (அக்-2), உள்ளாட்சி தினம் (நவ-1)
  • 70% மானியத்தில் விவசாயிகளுக்கு சூரிய சக்தி பம்பு செட்டுகள் சூரிய சக்தி பம்பு செட்டுகள் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.
    • முதலமைச்சர் சூரிய சக்தி பம்பு செட்டுகள் சூரிய சக்தி பம்பு செட்டுகள் திட்டத்தின் கீழ் 40% மானியம் வழங்கப்படுகிறது.
    • மத்திய அரசின் பிரதம மந்திரி விவசாயிகள் ஆற்றல் மேம்பாட்டுத் திட்டத்தின் 30% மானியம் வழங்கப்படுகிறது.
    • 10 குதிரைத் திறன் வரையிலான பம்பு செட்டுகள் 70% மானியம் வழங்கப்படுகிறது
    • ஆதிதிராவிட பழங்குடியின வகுப்பின குறு விவசாயிகளுக்கு 90% மானியம் வழங்கப்படுகிறது.

தேசிய செய்தி

  • இந்தியாவின் முதல் பெண் பிரதமரான இந்திரா காந்தியின் 38-வது இறந்த தினம் அனுசரிக்கப்பட்டது.
  • சர்தார் வல்பாய் பட்டேல் பிறந்தநாளான அக்டோர்-31 தேசிய ஒற்றுமை தினம், மற்றும் தீவிரவாத ஒழிப்பு தினமாக கொண்டப்படுகிறது.
  • இந்தியாவின் முதல் எண்ம ரூபாய் (01.11.22) இன்று முதல் சோதனை அடிப்படையில் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக ரிசர்வங்கி அறிவிப்பு.
  • குஜராத் மோர்பே பகுதியில் மச் நதியில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட தொங்கு பாலம் அறுந்து விழுந்ததில் 134-ஆக பலி எண்ணிக்கை உயர்வு.
    • எஃகு கழிவுகளால் ஆன முதல் பாலம்குஜராத் (சூரத்)
    • இந்தியாவின் முதல் கேபிள் தங்கு ரயில் பாலம்ஜம்மு & காஷ்மீர்
    • உலகின் மிக நீளமான தொங்கு பாலம்துருக்கி
  • இந்தியாவின் 53 புலிகள் காப்பகமாக உத்திரபிரதேசத்தின் ராணிப்பூர் புலிகள் காப்பகம் (529.36 ச.கி.மீ) அறிவிப்பு.
  • சமீபத்தில் நீலக்கொடி அந்தஸ்து இந்தியாவின் லட்சத்தீவிலுளுள்ள மினிக்காய் துண்டிகடற்கரை, கடமந்து கடற்கரை ஆகியவற்றிற்கு வழங்கப்பட்டுள்ளது.

உலக செய்தி

  • சீனா சொந்தமாக நிறுவுகின்ற தியாங்காங் விண்வெளி நிலையதிற்கு இரண்டாவது ஆய்வுக் கலத்தை ஷாங் மாரக்-5பி ஒய் 4 ராக்கெட் மூலம் அனுப்பியுள்ளது.
    • முதல் ஆய்வு விண்கலமான வெண்டியனை கடந்த ஜுலையில் செலுத்தியுள்ளது.
  • பிரேசிலின் புதிய அதிபராகிறார் லூலா டி சில்வா.

விளையாட்டு செய்தி

  • தமிழ்நாட்டைச் சேரந்த முத்துச்சாமி ஸ்பெயினில் நடைபெற்ற ஜூனியர் உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
  • இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் & சிராக் ஷெட்டி இணை பிரெஞ்ச் ஓபன் பாட்மிட்டன் போட்டியில் ஆடவர் பிரிவில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளனர்.
    • 2022-ம் ஆண்டுக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டியில் சாத்விக் சாய்ராஜ் & சிராக் ஷெட்டி இணை வெண்கலப் பதக்கம் வென்றிருந்தது.
  • நெதர்லாந்து நாட்டினைச் சார்ந்த மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் F1 கார் பந்தயத்தில் ஒரே சீசனில் அதிக வெற்றிகளைப் பெற்ற வீரர் (23 போட்டிகளில் 14 வெற்றி) என்ற புதிய சாதனையைப் படைத்துள்ளார்.

Leave a Comment