Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 01st December 2022

Daily Current Affairs

Here we have updated 01st December 2022 current affairs notes. This notes will helpful for those who are preparing competative exams like TNPSC, TRB and Police Exams.

தமிழக செய்தி

  • முன்னாள் அமைச்சர் க.அன்பழகன் பெயரில் சிறப்பாக செயல்படும் பள்ளிகளுக்கு விருதுகள் வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்
    • முன்னாள் அமைச்சரும் பேராசிரியருமான க.அன்பழகனின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு “பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம்” என்ற திட்டத்தினை வெளியிட்டுள்ளார்.
    • இத்திட்டத்தின் படி பள்ளிக்கல்வித் துறையில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தபடும் எனவும் அறிவித்துள்ளார்.

தேசிய செய்தி

  • உத்ரகாண்ட் மாநிலத்தில் 18வது இந்திய-அமெரிக்க ராணுவ கூட்டுப் பயிற்சி நடைபெறுகிறது.
    • அமைதியை நிலைநாட்டுதல், மற்றும் பேரிடர் மீட்பு நடவடிக்கைகள் தொடர்பான பயிற்சிகளை இரு நாட்டு இராணுவத்தினரும் மேற்கொண்டு வருகின்றன.
  • விளையாட்டுத்துறையில் சிறப்பாக பங்களித்த வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் விருகள் வழங்கினார்.
  • மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது (1நபர்)
    • சரத்கமல் (டென்னீஸ் வீரர்)
  • அர்ஜுனா விருது (25 நபர்கள்)
    • பிரக்யானந்தா (தமிழக செஸ் வீரர்)
    • இளவேனில் வளரின் (தமிழக துப்பாக்கி சுடுதல் வீரர்)
    • ஜெர்லின் அனிகா (டெஃப்லிமிக்ஸ் – பாட்மின்டன்)
  • துரோணாச்சாரியர் விருது (7நபர்கள்)
    • ஜீவன்ஜோத் (வில்வித்தை)
    • முகமது அலி கமார் (குத்துச்சண்டை)
    • சுமாத் சித்தார் சிருர் (பாரா துப்பாக்கி சுடுதல்
    • சுஜீத் மான் (மல்யுத்தம்)
    • தினேஷ் ஜவஹர் லாட் (கிரிக்கெட்) – வாழ்நாள்  சாதனையார் விருது
    • மிமல் பிரஃபுல்லா கோஷ் (கால்பந்து) – வாழ்நாள்  சாதனையார் விருது
    • ராஜ்சிங் (மல்யுத்தம்) – வாழ்நாள்  சாதனையார் விருது
  • தியான்சந்த் வாழ்நாள்  சாதனையார் விருது (4நபர்கள்)
    • அஸ்வினி அக்குஞ்சி (தடகளம்)
    • தரம்வீர் சிங் (ஹாக்கி)
    • சுரேஷ் (கபடி)
    • நிர் பகதூர் குருங் (பாரா தடகளம்)
  • டென்ஸிங் நார்கே சாக விருது (3நபர்கள்)
    • நைனா தகத் (மலையேற்றம்)
    • சுபம் தனஞ்ஜெய் வன்மலை (நீண்ட தூரம் நீச்சல்)
    • குனவர் பவானி சம்யால் (வாழ்நாள் சாதனையார் விருது)
  • ராஷ்ட்ரீய கேல் புரோதசாஹன் புரஸ்கார் விருது (3நபர்கள்)
    • டிரான்ஸ்டேடியா என்டர்பிரைஸ் பிரைவேட் லிமிடெட்
    • கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆஃப் இண்டஸ்ட்ரியல் டெக்னாலஜி
    • லடாக் ஸ்கீ & ஸ்னோபோர்டு அசோசியேஷன்
  • மெளலானா அபுல் கலாம் ஆசாத் விருது (1)
    • குருநானக் தேவ் பல்கலைக்கழகம் (அமிருதசரஸ்)
  • நவம்பர் 30-ல் சென்னையில் இந்திய கடலோரக் காவல்படை தலைமை இயக்குநர் வி.எஸ்.பதானியாவால் இந்தியக் கடலோர காவல் படை கிழக்கு பிராந்திய ரோந்து பணியில் புதிய இலகுரக ஹெலிக்காப்டர் (ALH-MK3) வசதியுடன் கூடிய 840 என்ற புதிய படைப்பிரிவினை தொடங்கி வைத்தார்
  • மகப்பேறு இறப்பு விதிதத்தில் (MMR) ஒரு லட்சத்திற்கு 130 (2014-2016)லிருந்து 97ஆக (2018-2020) குறைந்துள்ளது
    • MMR- Maternal Mortality Ratio
  • ராஜஸ்தானின் 1முதல் 8 வகுப்பு வரையிலான அரசு பள்ளி குழந்தைகளுக்கு இலவச பள்ளிச்சீருடைகள் மற்றும் பால் வழங்கும் “முக்யமந்திரி பால் கோபால் யோஜனா மற்றும் முக்ய மந்திரி சீருடை யோஜனா” திட்டத்தினை அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் தொடங்கி வைத்தார்.
  • புனேவினை சேர்ந்து மைலாப் டிஸ்கவரி சொலுயூசன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் காசநோய் & மல்டிட்ரக் எதிர்ப்பு காசநோயை கண்டறியும் கருவியை Patho Detect MTP RIF & INH மருந்து எதிர்ப்பு கருவி என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளது.
  • ரூத் ஜான் பால் கோயாலா, பிராச்சி ரத்தோர் ஆகிய இரு திருநங்கைகள் தெலுங்கானாவில் முதல் முறையாக ஹைதரபாத்தின உஸ்மானியா பொதுமருத்துவனையில் மருத்துவ அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளன..

உலக செய்தி

  • ஐரோப்பாவின் ஆராய்ச்சியாளர்கள் 48,500 ஆண்டுகளுக்கு முன் உள்ள 12 ஜாம்பி வைரஸ்களை செப்பியாவில் உள்ள் பனிப்பாறைகளுக்கு அடியில் கண்டறிந்துள்ளன.

முக்கிய தினம்

  • இந்திய எல்லை பாதுகாப்பு படை எழுச்சி தினம் (டிசம்பர் 1)
    • 1965 டிசம்பர் 1-ல் இந்தியாவின் எல்லை பாதுகாப்பு படை உருவாக்கபட்டது.
  • உலக எய்ட்ஸ் தினம்
    • கருப்பொருள் : EQUALIZE

Nov 29 – Current Affairs | Nov 30 – Current Affairs

Leave a Comment