Daily Current Affairs
Here we have updated 02nd March 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
தமிழகச் செய்தி
- ரூ.225 கோடியில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி, வெளிநாட்டுச் சுற்றுலாவுடன் மூன்று ஆண்டுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்யப்படும் புதிய திட்டங்களை தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
- உயர்கல்வி பயிலும் ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு கல்விச்செலவு ரூ.50,000 வரை உயர்த்தி அளிக்கப்படுகிறது
- மாணவர்களுக்காக தமிழக அரசு செயல்படுத்தும் திட்டங்கள்
- நான் முதல்வன் திட்டம் (2022 மார்ச் 1)
- மாணவ, மாணவிகளை முதன்யானவர்களாக உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கம்
- புதுமைப்பெண் திட்டம் (2022 செப்டம்பர் 5)
- உயர்கல்வியை மாணவியர் அனைவரும் பெற வேண்டும் என்பதற்காக மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டம்.
- இடஒதுக்கீடு
- அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் தொழிற்கல்வியில் பயில 7.5% இட ஒதுக்கீடு
- காலை உணவுத் திட்டம் (2022 செப்டம்பர் 15)
- அரசு பள்ளி மாணவர்கள் பசிப் பிணியை போக்க காலை உணவு வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
- நான் முதல்வன் திட்டம் (2022 மார்ச் 1)
- சென்னையில் பரவி வரும் காய்ச்சல் இன்ஃப்ளூயன்ஸா-ஏ வகை வைரல் தொற்று என்பது பொது சுகாதராத் துறையின் ஆய்வு முடிவுகளில் தெரிய வந்துள்ளது.
- இன்ஃப்ளூயன்ஸா-ஏ வகை தொற்று 50%பேருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
- மேலும் நுரையீரல் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆர்எஸ்வி வைரஸ் தொற்றும் பரலாக உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஆர்எஸ்வி வைரஸ் தாக்க பாதிப்பு 37.5%பேருக்கு இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
- ஒருங்கிணைந்த நகர்ப்புற குளிரூட்டும் திட்டத்தை உருவாக்க டென்டமார்க் இளவரசர் ஃப்ரெட்ரிக் இளவரசி மேரி ஆகியோர் முன்னிலையில் ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்துடன் (UNEP) தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளது.
- ஒருங்கிணைந்த நகர்ப்புற குளிரூட்டும் திட்டம் – Comperhensive Urban Cooling Programme
- பூமியில் வெப்பமாதலை குறைக்க மேற்கொள்ளும் வழிமுறைகளையும், விழிப்புணர்ச்சியையும் அறிய உதவுகிறது.
- UNEP – United Nations Environment Programme
- சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குப்பை சேகரிப்பவர்களை தொழில் முனைவோர்களாக ஆக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
- மாநகராட்சி சார்பில் மத்திய அரசின் சமூக நீதி மற்றம் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் “தேசிய சஃபாய் கரம்சாரி நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்துடன் இணைந்து இடத்திட்டம் செயல்படுத்துகிறது.
- தமிழகத்தில் 20-30 வயது உள்ள பெண்களுக்கும், தாய்மார்களுக்கும் குடற்புழு மாத்திரை வழங்கப்படுகிறது.
- சுமார் 2.60 கோடிக்கும் மேற்பட்டோருக்கு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- 19 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, சிறார்ருக்கு “அல்பெண்டசோல்” என்ற குடற்புழுநீக்க மாத்திரை வழங்கப்படும்.
- குடற்புழு நீக்கத்தால் இரத்த சோகை பாதிப்பு நீங்குவதுடன் உடல் ஆரோக்கியம், வலிமை மேம்படும்.
- குடற்புழு நீக்க தினம் : பிப்ரவரி-10, ஆகஸ்ட்-10
- உலக புற்றுநோய் தினத்தினைமுன்னிட்டு சென்னை பள்ளிக்கரனையில் டாக்டர் காமாட்சி மருத்துவமனை சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடத்தப்பட்டது.
- உலக புற்றுநோய் தினம் – பிப்ரவரி – 4
- கருப்பொருள் : Close the Care Gap
தேசிய செய்தி
- பிப்ரவரி மாதத்தில் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாய் ரூ.1,49,577 கோடி என்று மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.
- 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாத வருவாயுடன் (1.33 லட்சம் கோடி) ஒப்பிடுகையில் 12% அதிகம்.
- ஜிஎஸ்டி மாதாந்திர வருமானம் ரூ.1.40 லட்சம் கோடியை கடப்பது 13வது முறை
- அதிகபட்சமாக – 2022 ஏப்ரல் (1.68 லட்சம் கோடி)
- அதற்கு அடுத்தாற்போல – 2023 ஜனவரி (1.58 லட்சம் கோடி)
- மார்ச் 1-ல் ஹரியானா மாநிலம் குருகிராமில் ஜி20 நாடுகள் கூட்டமைப்பின் ஊழல் எதிர்ப்பு பணிக்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது.
- இந்திய விமானப்படைக்கு ரூ.6,828 கோடியில் 70 ஹெச்டிடி-40 ரக பயிற்சி போர் விமானங்களை வாங்குவதற்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- இந்த ரக விமானங்களை “ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் (ஹெச்ஏஎஸ்) நிறுவனம் தயாரிக்கிறது.
- ஹெச்டிடி 40 – Hindustan Trubo Trainer-40
- இந்திய கடற்படைக்கு ரூ.3,108.09 கோடியில் 3 பயிற்சி போர்க் கப்பல்களை வடிவமைத்து கட்டமைத்து தருவதற்கு லார்ச் அண்டு டூப்ரோ (எல் அண்டு டி) நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- இந்தியாவின் முதல் மின்சார விரைவு சாலை டெல்லி-ஜெய்ப்பூர் இடையே அமைகிறது.
- டெல்லி-மும்பை விரைவுச் சாலையின் ஒரு பகுதியாக அமைகிறது.
- சூரிய ஒளியால் கிடைக்கும் மின்சாரத்தின் உதவியால் வாகனங்கள் இயங்க உள்ளன
- சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு 26 சாலைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
- சென்னை – பெங்களூரு நகரின் இடையிலும் விரைவுச் சாலையிலும் அமைய வாய்ப்புள்ளது.
உலகச் செய்தி
- நைஜீரிய அதிபராக போலோ டினபு தேர்வானார்.
விளையாட்டுச் செய்தி
- தடை செய்யப்பட்ட ஊசியை பயன்படுத்தியதற்காக இந்திய தடகள வீராங்கனை ஐஸ்வர்யா பாபுவுக்கு (மும்முறை தாண்டுதல்) தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு 4 ஆண்டுகள் தடை விதித்துள்ளது.