Daily Current Affairs
Here we have updated 2nd April 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
தமிழகச் செய்தி
- ஏப்ரல் 1 முதல் இணையவழி ஒப்பந்தப்புள்ளி கட்டயமாக்கும் நடைமுறை நடைமுறைக்கு வந்தது.
- புதிய விதிப்படி ஒப்பந்தப்புள்ளி நடவடிக்கை இனி http://tntenders.gov.in என்ற இணைய தளத்தின் மூலம் மட்டுமே மேற்கொள்ள முடியும்
- தமிழகத்தில் “உங்கள் தொகுதியில் முதல்வர்” திட்டப் பணிகள் ரூ.1,093 கோடியில் மேற்கொள்ளப்படும் என்று பொதுப்பணித்துறை அமைசர் ஏ.வ.வேலு அறிவித்துள்ளார்.
- கேரள மாநிலம், கோட்டயம் அருகே வைக்கத்தில் நடைபெற்ற வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.
- டி.கே.மாதவனும், தந்தை பெரியார் ஈவெராவும் இணைந்து நடத்திய வெற்றிப் போராட்டம் தான் வைக்கம் பேராட்டம் ஆகும்.
- 1924 மார்ச் 30ம் தேதி தடையை மீறி தெருவுக்குள் நுழையக்கூடிய சத்தியாகிரகப் பேராட்டம் தொடங்கப்பட்டது
- 1925-ம் ஆண்டு நவம்.23-ல் முடிவுக்கு வந்தது.
- 141 நாட்கள் வைக்கம் பேராட்டத்துக்காக பெரியார் தன்னை ஒப்படைத்துக் கொண்டார்
- பெரியார் கைது செய்யப்பட்டு முதல் முதலாக சிறை வைக்கப்பட்டிருந்த அருவிக்குட்டி கிராமத்தில் பெரியார் நினைவிடம் உருவாக்க முயற்சிக்கப்படுகிறது.
- ஏப்ரல் 18ல் உலக மரபு நாள் கொண்டாடப்படுவதையொட்டி தஞ்சாவூர் பல்கலைக் கழகம், சென்னை மரபிடங்களின் நண்பர்கள் அமைப்பு சார்பில் கட்டுரை, சொற்பொழிவு போட்டிகள் நடத்தப்படுகின்றன.
தேசிய செய்தி
- ஏப்ரல் 1ல் போபால்-தில்லி இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை மோடி தொடங்கி வைத்தார்.
- நாட்டில் தொடங்கப்பட்பட்ட 11வது வந்தே பாரத் ரயில் சேவை இதுவாகும்.
- ஜிஎஸ்டி நடைமுறைப்படுத்தப்பட்டதில் இருந்து, கடந்த ஏப்ரலில் எப்போது இல்லாத அளவாக ரூ.1.68லட்சம் கோடி அளவுக்கு ஜிஎஸ்டி வசூலானது. அதற்கு அடுத்தப்படியாக மார்ச் மாதம் ரூ.1,60,122 கோடி ஜிஎஸ்டி வசூலாகி உள்ளது.
- GST – Goods and Services Tax
- அறிமுகப்படுத்தப்ட்ட ஆண்டு – 01.07.2017 (129 சட்டத்திருத்தம்)
- மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களால் விதிக்கப்படும் பல்வேறு வரிகளுக்கு பதிலாக ஒற்றை வரியாக அறிமுகப்படுத்தப்படுகிறது.
- இந்தியாவின் ராணுவத் தளவாடங்கள் ஏற்றுமதி இதுவரை இல்லாத வகையில் கடந்த 2022-23ம் நிதியாண்டில் ரூ.15,920 கோடியாக அதிகரித்துள்ளது.
- இந்தியா-மலேசியா இடையே இனி ரூபாயில் வர்த்தகம் செய்யலாம் என சனிக்கிழமை (ஏப்ரல் 1) வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- பிரிட்டன், ரஷியா, ஜெர்மெனி, சிங்கப்பூர், இலங்கை, ஃபிஜி, போஸ்ட்வானா, கயானா, இஸ்ரேல், கென்யா, மோரீஷஸ், மியான்மர், நியூசிலாந்து, ஓமன், செஷல்ஸ், தான்சானியா, உகாண்டா, மலேசியா உட்பட 18 நாடுகளுடன் இந்தியா ரூபாயில் வர்த்தகம் மேற்கொள்கிறது.
- மார்ச் 30 முதல் ஏப்ரல் 1 வரை மத்திய பிரதேச மாநிலம், போபாலில் முப்படைகளின் உயர்நிலை தளபதிகள் பங்கேற்ற மாநாடு நடைபெற்றது.
- கருப்பொருள் : தயார்நிலை, புத்தெழுச்சி, காலத்துக்கேற்ற செயல்பாடு
- முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் செளஹான் பல்வேறு விவாவதங்களுக்கு விளக்கமளித்துள்ளார்
- மத்திய அரசின் காப்பீட்டுத் திட்டங்கள் குறித்து மக்களிடையே கூடுதல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் அனைத்து மாவட்டங்களிலும் கிராம அளவில் 3 மாதங்களுக்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
- பிரதமரின் ஜீவன் ஜோதி காப்பீட்டுத் திட்டம் (PMJJBY) – 09.05.2015
- பிரதமரின் விபத்து (சுரக்ஸா) காப்பீட்டுத் திட்டம் – 08.05.2015
விளையாட்டுச் செய்தி
- ஏப்ரல் 1-ல் பெங்களூரில் நடைபெற்ற ஐடிஎஃப் மைசூரு ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சசிகுமார் முகுந்த்/விஷ்ணு வர்தன் இணை சாம்பியன் பட்டம் வென்றது.
முக்கிய தினம்
- உலக மனவிறுக்கநோய் விழிப்புணர்வு தினம் (World Autism Awareness Day)
- Theme : “Transforming the narrative: Contributions at home, at work, in the arts and in policymaking”