Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 02nd December 2022

Daily Current Affairs

Here we have updated 02nd December 2022 current affairs notes. This notes will helpful for those who are preparing competative exams like TNPSC, TRB and Police Exams.

தமிழக செய்தி

  • டிசம்பர் 2-ல் சாகித்திய அகாதமி விருது பெற்ற கி.ராஜநாரயணன் (கி.ரா) மணிமண்டபத்தினை தமிழக முதல்வர் திறந்து வைக்கிறார்
    • தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ரூ.150.70 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது.
    • கி.ரா. – கரிசல் இலக்கியத்தின் தந்தை
    • கோபால்லபுரத்து மக்கள் நாவலூக்கா சாகித்திய அகாதெமி விருது (1991) பெற்றவர்.
  • ஹுண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து துவங்கப்பட்ட சுகாதாரம் மற்றும் சாலை போக்குவரத்து விழிப்புணர்வு குறித்த “மிஷன் சென்னை” என்ற திட்டத்திற்கான வாகனத்தை போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் துவங்கி வைத்தார்.
  • ஜனவரி 15-18 வரை சென்னையில் முதன் முறையாக “சர்வதேச புத்தக கண்காட்சி” நடைபெற உள்ளது.
  • 338 ஏக்கர் பரப்பில் ரூ.300 கோடி மதிப்பில் செங்கல்பட்டு மாவட்டம் கடம்பூரில் தாவரவியல் பூங்கா அமைக்கப்பட உள்ளது.
    • இத்திட்டம் 2022-தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவிக்கபட்ட திட்டம் ஆகும்.
    • லண்டனில் உள்ள கீயு பூங்கா போன்று அமைக்கப்பட உள்ளது.

தேசிய செய்தி

  • குஜராத் முதற்கட்ட தேர்தலில் 89 தொகுதிகளில் 61% வாக்குகள் பதவிவாகியுள்ளன.
  • நவம்பர் மாதத்திற்காGST (சரக்கு-சேவை வரி) 1.46 லட்சம் வசூலாகியுள்ளது என மத்திய நிதி அமைச்சகர் தெரிவித்துள்ளது.
    • இது 2021-டிசம்பர் மாதத்தினை விட 11% அதிகரித்துள்ளது.
    • ஜஎஸ்டி வசூல் 9வது மாதமாக 1.40 லட்சம் கோடியை தாண்டியுள்ளது.
  • டிசம்பர் 1-ல் உலகின் வலிமை மிக்க G-20 தலைமைப் பொறுப்பினை இந்தியா அதிகாரப்பூர்வமாக ஏற்றது
  • ஜம்மு & காஷ்மீர் மாநிலம் உதம்பூரின் மண்டலை கிராமத்தில் இந்தியாவின் மிகப்பெரிய சர்வதேச யோகா மையம் அமைக்கப்பட உள்ளது.
  • டிசம்பர் 1-ல் விமான நிலையங்களில் முகத்தோற்றம் மூலம் அடையாளம் காணும் “டிஜி யாத்திரா” வசதியை சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய எம்.சிந்தியா தொடங்கி வைத்தார்.
    • இவ்வசதி டெல்லி, பெங்களூர், வாராணாசி விமான நிலையத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
  • குஜராத்த்தில் உள்ள மினி ஆப்பிரிக்கா மக்களுக்கு  குடியுரிமை அளிக்கப்பபட்டதால் முதல்முறையாக தேர்தலில் வாக்களித்துள்ளன.
  • இந்தியாவில் மிகப்பெரிய உலோக பூங்காக்களில் ஒன்றாக ஜார்சுகுடாவில் வேதாந்தா அலுமினிய பூங்கா அமைக்கப்பட உள்ளது. ஒடிசா முதல்வர் இதற்கு அடிக்கல் நாட்டினார்.
  • டிசம்பர் 1-ல் நாகலாந்து மாநிலத்தின் 60வது மாநில தினம் கொண்டாப்பட்டது.
    • 1963-ல் டிசம்பர் 1-ல் 16வது மாநிலமாக உருவானது.
    • இவ்விழாவில் நாகலாந்து முதல்வர் காவல்துறையின் SAHYOG திட்டத்தினை தொடங்கி வைத்தார்.
  • 2022-23 நிதி ஆண்டில் இரண்டாவது காலாண்டில் (ஜூலை-செப்டம்பர்) பொருளாதார வளர்ச்சி 6.3%மாக குறைந்துள்ளது.

விளையாட்டு செய்தி

  • பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தஸ்டெபானிஃப்ராபார்ட்”வை ஆடவர் உலக கோப்பை போட்டியின் முதல் பெண் நடுவராக FIFA அறிவித்துள்ளது.

முக்கிய தினம்

  • தேசிய மாசு கட்டுப்பாட்டு தினம் (டிசம்பர் 2)
  • உலக கணினி எழுத்தறிவு தினம் (டிசம்பர் 2)

Nov 30 – Current Affairs | Dec 01 – Current Affairs

Leave a Comment