Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 03rd January 2023

Daily Current Affairs

Here we have updated 03rd January 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competative exams like TNPSC, TRB and Police Exams.

தமிழக செய்தி

  • காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள ரூ.1,000கோடி நிதி திரட்டும் முயற்சியை தமிழக அரசு தொடங்கியுள்ளது..
  • சாலை விதிகளை மீறும் விவரங்களை பதிவு செய்ய மாநகர ரோந்து போலீஸாருக்காக “இ-பிட்” என்ற செயலி சேலத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
    • இ-பிட் ரோந்து பட்டியிலில் 1,100 இடங்கள் இடம் பெற்றுள்ன.

தேசிய செய்தி

  • நாட்டின் பணமதிப்பு இழப்பீட்டிற்கு பிறகு ரூபாய் நோட்டுகளின் மதிப்பு 83% அதிகரித்துள்ளது.
    • பண மதிப்பிழப்பு செயல்படுத்தப்பட்ட ஆண்டு – 2016
  • நாட்டின் பணமதிப்பு இழப்பீட்டிற்கு பிறகும் கள்ள ரூபாய் நோட்டுகளின் புழக்கம் அதிகரித்துள்ளது என தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) தெரிவித்துள்ளது.
    • 2016-ம் ஆண்டு பணமதிப்பு இழப்பிற்கு பிறகு ரூ.245.33 கோடி மதிப்பிலான கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
    • பறிமுதல் செய்யப்பட்ட கள்ள நோட்டுகளின் மதிப்பு
      • 2016 – ரூ.15.29 கோடி
      • 2017 – ரூ.55.71 கோடி
      • 2018 – ரூ.26.35 கோடி
      • 2019 – ரூ.34.79 கோடி
      • 2020- ரூ.92.17 கோடி
      • 2021 – ரூ.20.39 கோடி
    • தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) – 1986
  • ஜனவரி 13-ல் உலகின் நீளமான சொகுசு நதி வழி சொகுசு கப்பல் சேவையான “கங்காவிலாஸ்”-யை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
    • இது பயணம் செய்யும் தூரத்தினை வைத்து கணக்கிடப்படுகிறது.
    • உத்திர பிரதேசம் வாரணாசி முதல் அஸ்ஸாம், திப்ருநகர் வரையிலான 4000கி.மீ தூரத்திற்கு பயணம் செய்ய உள்ளது.
    • கங்கை, பிரம்மபுத்திரா உட்பட்ட 27 நகரங்களில் 50 நாட்கள் பயணம் செய்கிறது.
  • கொல்கத்தா நகரின் ஹூக்ளி ஆற்றில் நீருக்குள் பயணிக்கும் இந்தியாவின் முதல் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது.
  • ஜனவரி 1ல் இந்தியாவும், பாகிஸ்தானும் போரின் போது அணுசக்தி மையங்களின் மீதான தாக்குதலை தவிர்க்கும் விதத்தில் தங்கள் நாட்டின் அணுசக்தி மையங்களின் பட்டியலை பகிர்ந்து கொண்டன.
    • இவ்வொப்பந்தம் 31.12.1988 ஏற்பட்டது.
    • முதன் முதலில் 1992 இப்பட்டியலை பகிர்ந்து கொண்டன.
  • கடந்த டிசம்பரில் இந்தியாவின் வேலையின்மை 8.30%மாக உயர்ந்துள்ளது.
    • நகர்புறங்களில் 8.96%லிருந்து 10.09%மாக உயர்ந்துள்ளது.
    • நகர்புறங்களில் 7.55%லிருந்து 7.44%மாக உயர்ந்துள்ளது.
    • ஹரியானாவில 37.4%வும், ராஜஸ்தானில் 28.5%மாக  வேலையின்மை உள்ளது.
  • அஜய்குமார் ஸ்ரீஸ்தவா இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயலதிகாரியாக நியமிக்கப்பட்டள்ளார்.
  • 2024-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மக்கள் மருந்தம் 10,000-ஆக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
    • மக்கள் மருந்து திட்டம் – 2008ல் கொண்டு வரப்பட்டது.
  • லும்பி-புரோவேக் மருந்தின் உற்பத்தியை அதிகரிக்க மகாராஷ்டிராவி்ன் புனே கால்நடை உயிரியில் பொருள்கள் மையத்துடன் மத்தியஅரசு ஒப்பந்தம் செய்தள்ளது.
    • கால்நடைகளுக்கு ஏற்படும் லும்பி ஸ்கின் (தோல் கழலை) நோயினை தடுக்கும் வகையில் செலுத்தப்படுகிறது.

உலகச் செய்தி

  • 2023-ம் ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐ.நா.சபை அறிவித்துள்ளது.
    • முன்பு 2018-ஐ தேசிய சிறுதானிய ஆண்டாக மத்திய அரசு கடைபிடித்திருந்து குறிப்பிடத்தக்கது.
  • இஸ்ரேல் நாட்டின் பிரதமராக பெஞ்சமின் நெதன்யாகு 6 முறையாக பொறுப்பேற்றுள்ளார்.

விளையாட்டு செய்தி

  • BCCI 2022-ம் ஆண்டுக்கான சிறந்த விரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
    • டி20 போட்டி
      • சிறந்த பேட்ஸ்மேன் – சூர்யகுமார் யாதவ்
      • சிறந்த பெளலர் – புவனேஷ்குமார்
    • ஒருநாள் போட்டி
      • சிறந்த பேட்ஸ்மேன் – ஸ்ரேயர்ஸ் அய்யர்
      • சிறந்த பெளலர் – முகமது சிராஜ்
    • டெஸ்ட் போட்டி
      • சிறந்த பேட்ஸ்மேன் – ரிஷப் பந்த்
      • சிறந்த பெளலர் – ஜஸ்பிரீத் பும்ரா

முக்கிய தினம்

  • உலக உள்முக சிந்தனை தினம்
  • உலக மனம்-உடல் ஆராக்கிய தினம்

Dec 30 Current Affairs | Jan 01 – 02 Current Affairs

Leave a Comment