Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 3rd March 2023

Daily Current Affairs

Here we have updated 3rd March 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

தமிழகச் செய்தி

  • மார்ச் 3-ல் தமிழகத்தின் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் (எஸ்எம்சி) நடைபெற உள்ளது.
  • மார்ச் 2-ல் இந்திய பொருளாதார வர்த்தக அமைப்பு சார்பில் கிண்டியில் தொடங்கப்பட்டுள்ள இந்திய செமாக் வர்த்தக குழு அமைப்பின் தொடக்க விழா மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது.
    • இதில் நாடுகளுக்கு இடையேயான வர்த்தகத்தின் எதிர்கால திட்டங்கள் குறித்து தகவல்கள் அடங்கிய “ஜி20” என்ற புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது
  • சென்னை மாநகராட்சியில் பூங்கா பராமரிப்பு இணைய ஒப்பந்தம் மூலம் மருத்துவ பணியாளர்களை நியமிப்பதற்கு பதிலாக தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கம் மூலம் நியமிக்கபட வேண்டும் என சென்னை நகர மாமனற் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
    • மஞ்சள் பை திட்டம் களிர் சுய உதவிக்குழு மூலமாக செயல்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • மஞ்சள் பை திட்டம் – 23.12.2021
  • சென்னை மாநகராட்சிக்கு நிர்பயா நிதி ரூ.137.7கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • மத்திய கணக்குக் குழுமத்தின் தணிக்கை ஆய்வில் 2019-ல் ஒதுக்கப்பட்டுள்ள ரூ.282.28 கோடியில் நிர்பயா நிதியில் ரூ.137.7 கோடி சென்னை மாநகராட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது
  • புழல் மகளிர்  சிறப்புச் சிறையில் கைத்தொழில் பயிற்சி முடித்த கைதிகளுக்கு தமிழக சிறைத்துறை டிஜிபி அமரேஷ் பூசாரி சான்றிதழ்கள் வழங்கினார்
  • அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ.364.43கோடி நிதியை தமிழக அரசு விடுவிப்பு.
    • அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009ல் இயற்றப்பட்டது.
    • இந்திய அரசியலமைப்பு சட்டம் 86வது சட்டத்திருத்தத்தின் கீழ் சட்டவிதி 21-A அடிப்படையில் இச்சட்டம் 01.04.2010-ல் நடைமுறைபடுத்தப்பட்டது.
    • இத்திட்டத்தின் கீழ் எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பவரை கட்டணமின்றி இலவசமாக படிக்கலாம். தனியார் பள்ளிக்கூடங்களில் 25% இடங்களில் ஏழைக் குழந்தைகள் சேர்க்கப்படுவர்.

தேசிய செய்தி

  • தேர்தல் ஆணையர்களை நியமிக்க பிரதமர், மக்களவை எதிர் கட்சித் தலைவர், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோரைக் கொண்ட பரிந்துரைக் குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
    • தேர்தல் ஆணையரை நியமனம் செய்ய அரசமைப்பு சட்டத்தின் 324-வது பிரிவின் கீழ் நாடாளுமன்றம் சட்டம் இயற்ற வேண்டும்.
    • தலைமைத் தேர்தல் ஆணையரையும், மற்ற தேர்தல் ஆணையரையும் குடியரசுத் தலைவரே தொடர்ந்து நியமிப்பார். அதே வேளையில் ஆணையர் நியமனத்துக்கான பரிந்துரைக் குழுவில் பிரதம், எதிர்க்கட்சித் தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இடம் பெறுவர்.
    • மக்களவை எதிர்கட்சித் தலைவர் பதவி காலியாக இருக்கும் பட்சத்தில் எதிர்கட்சியில் அதிக இடங்களை கொண்ட கட்சியின் தலைவர் குழுவில் இடம் பெறுவார்.
    • மத்திய கனரக தொழில் துறைச் செயலாளராக இருந்த அருண் கோயல் கடந்த ஆண்டு நவம்பர் 18-ம் தேதி விருப்ப ஓய்வு பெற்றார். அதற்கு அடுத்த நாளே அவர் தேர்தல் ஆணையராக மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ளார். 2025 பிப்ரவரியில் தற்போதைய தலைமைத் தேர்தல் ஆணைய தலைவர் ராஜீவ் குமார் பணி ஒய்வு பெற்றபின் அருண்கோயல் பதவியேற்க உள்ளார்.
  • ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தின் தலால்-ஹைமானா பகுதியில் “வெள்ளைத் தங்கமான லித்தியம் தாது” இருப்பதாக இந்திய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    • லித்தியம் அதிகம் காணப்படும் பகுதி – பொலீவியா, அர்ஜென்டீனா, சிலி
    • சீனாவில் 70% லித்தியம் சுத்திகரிப்பு நடைபெறுவதால் சீனா உலகின் சுத்திகரிப்பு மையமாக  விளங்குகிறது.
    • லித்தியம் சுத்திகரிக்க அதிகளவு தண்ணீர் தேவைப்படுகிறது.
    • உலகில் 80மில்லியன் டன் லித்தியம் இருப்பு உள்ளது
  • நாகலாந்தின் திமாப்பூர்-3 பேரவை தொகுதியில் முதன் முறையாக இரு பெண் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்..
    • ஹெக்கானி ஜக்லாவ் (திமாப்பூர்-3) – என்டிபிபி கட்சி.
    • சல்ஹெளட்டனேவோ (மேற்கு அங்காமி-8) – என்டிபிபி கட்சி.
  • அதானி குழுமம்-ஹிண்டன்பர்க் விவகாரத்தை ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எம்.சாப்ரே(68) தலைமையில் 6 பேர் கொண்ட நிபுணர் குழுவை உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது.
  • உலகிலுள்ள தலைவர்களில் மிகவும் விருப்பத்துக்குரிய தலைவராக பிரதமர் மோடி விளங்குவதாக இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி புகழந்துள்ளார்.
    • நிகழாண்டு இந்தியா-இத்தாலி இரு தரப்பு உறவுகள் தொடங்கி 75வது ஆண்டுகள் ஆகிறது.
    • இந்தியா, இத்தாலி இரு நாடுகளிலுள்ள புத்தாக நிறுவனங்கள், முதலீட்டாளர்கள், தொழில் முனைவோர் உள்ளிட்டோரை இணைக்கும் “புத்தாக்க நிறுவனங்களுக்கான பாலம் (ஸ்டார்ட் அப் பிரிட்ஜ்) ஏற்படுத்தப்பட உள்ளது.
  • உலக வங்கி தலைவர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய வம்சாவளியிரான அஜய் பங்காவுக்கு இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது

உலகச் செய்தி

  • ஜெர்மனி மக்கள் தொகையில் 23%பேர் புலம் பெயர்ந்தோர் ஆவர்.
    • 1950ஆம் ஆண்டு முதல் புலம் பெயர்ந்து அந்த நாட்டுக்கு வந்தவர்கள் அல்லது புலம்பெயர்ந்தவர்களின் குழந்தைகள் என ஜெர்மனி மத்திய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
    • முதன் முறையாக குடியுரிமை அடிப்படையில் மட்டுமன்றி, புலம் பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் நாட்டின் மக்கள் தொகையை புள்ளியியல் அலுவகம் தெரிவித்துள்ளது.
    • ஜெர்மனி மக்கள் தொகை – 8.30 கோடி பேர்
    • புலம் பெயர்ந்து ஜெர்மனியில் குடியேறியவர்கள் – 1.89கோடி பேர்
  • அமெரிக்கா, ரஷியா, ஐக்கிய அரபு அமீரக நாடுகளைச் சேர்ந்த 4 விண்வெளி வீரர்களை, எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் (SpaceX) சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பியுள்ளது.

விளையாட்டுச் செய்தி

  • கர்நாடாகத்தின் பன்னிஹாட்டியில் நடைபெற்று வரும் இந்திய தளடகளத்தின் ஜிம்ப்ஸ் போட்டியில் தமிழக வீரர் ஜெவின் ஆல்ட்ரீன் நீளம் தாண்டலில் 8.42மீ குதித்து சாதனையுடன் தங்கம் வென்றார்.
  • மார்ச் 15-26 வரை புதுதில்லி இந்திராகாந்தி விளையாட்டு வளாகத்தில் சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனம் (ஐபிஎஃப்) இந்திய குத்துச் சண்டை சம்மேளனம் (பிஎஃப்ஐ) சார்பில் உலகக் கோப்பை குத்துச்சண்டை சாம்பியன் போட்டி நடைபெற உள்ளது.
    • இந்தியா சார்பில் 12பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
    • 75கிலோ பிரிவில் பங்கேற்கும் ஒலிம்பிக் வீராங்களை லவ்லினா ஏற்கனவே உலக சாம்பியன் ஷிப்பில் 2 வெண்கலம் வென்றுள்ளார்
    • 3வது முறையாக இந்தியாவில் நடைபெறவுள்ள இப்போட்டியில் 74 நாடுகளிலிருந்து 150பேர் கலந்து கொள்கின்றனர்.
  • அபுதாபியில் நடைபெற்ற ஆசிய செஸ் கூட்டமைப்பு மாநாட்டில் டி.குகேஷ் ஆசிய செஸ் கூட்டமைப்பின் 2022 சிறந்த வீரர் விருதினை பெற்றுள்ளார்.
    • 2022 ஆகஸ்ட்டில் மாமல்லபுரத்தில் நடைபெற்ற செஸ்  ஒலிம்பியாட் போட்டியில் 9/11 கணக்கில்  தங்கப்பதக்கம் வென்றார்.
    • சிறப்பாக செயல்படும் கூட்டமைப்பு விருதி – இந்திய செஸ் கூட்டமைப்பு
    • செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்த உதவிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆண்டின் சிறந்த மனிதர் விருது வழங்கப்பட்டுள்ளது.

Mar 01 Current Affairs  |  Mar 02 Current Affairs

Leave a Comment