Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 3rd April 2023

Daily Current Affairs

Here we have updated 3rd April 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

தமிழகச் செய்தி

 • தென் மாநில முதல்வர்கள் பங்கேற்கும் தென் மண்டல கவுன்சில் கூட்டத்தை தமிழகத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • 1957-ஆம் ஆண்டிலிருந்து தென் மண்டல கவுன்சில் கூட்டம் நடைபெற்று வருகிறது.
  • இறுதியாக கடந்த 1991-ஆம் ஆண்டு நவம்பர்  10-ஆம் தேதி சென்னையில் நடத்தப்பட்டது.
  • ஆறாவது முறையாக தமிழகத்தில் தென் மண்டல கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது.
  • இது தென் மண்டல கவுன்சில் கூட்டம் நடைபெற்ற இடங்கள்
   1. 1957- மெட்ராஸ்
   2. 1958, 1967 – உதகை
   3. 1978 – மெட்ராஸ்
   4. 1992 – சென்னை
 • ஏப்ரல் 3-ல் அகில இந்திய சமூகநீதி கூட்டமைப்பு சார்பில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் முதல் தேசிய இணைய மாநாடு நடைபெறுகிறது.
 • உலக ஆட்டிஸ்சம் தினத்தையொட்டி (ஏப்ரல்-2) போரூர் ஸ்ரீ ராமச்சந்திர மருத்துவமனையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும், மனித சங்கிலி மற்றும் பேரணி நடைபெற்றது.
 • ஏப்ரல் 8-ல் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சென்னை-கோவை இடையிலான “வந்தே பாரத்” ரயில் திட்டத்தை துவக்கி வைக்க உள்ளார்.
 • ஏப்ரல் 2-ல் திருச்சி வரகனேரியில் விடுதலை போராட்ட வீரர் வ.வே.சுப்பிரமணிய ஐயரின் 143-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
  • இவரை வரகனேரி சிங்கம் என அழைப்பர்.
 • 2023 செப்டம்பர் மாதத்தில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழகத்தில் அயல்நாட்டுத் தமிழ் கல்வித்துறை சார்பில்இலங்கை மலையக இலக்கியம்-200″ பன்னாட்டு மாநாடு நடைபெற உள்ளது.

தேசிய செய்தி

 • ஏப்ரல் 2-ல் கர்நாடகத்தின் சித்துதுர்கா பகுதியில் மறு பயன்பாட்டு ராக்கெட் (ஆர்எல்வி எல்இஎக்ஸ் – RLV LEX) வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது.
  •  செயற்கைக்கோள்களை ஏவப் பயன்படும் ராக்கெட்டுகளை மறு பயன்பாடு செய்யும் வகையில் மீண்டும் பூமிக்கு கொண்டு வருவதற்கான சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி-மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ), இந்திய விமானப்படை ஆகியவற்றுடன் இணைந்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) வெற்றிகரமாக மேற்கொண்டது.
 • தமிழ் மொழி, கலாச்சாரம் குறித்து ஆய்வு மேற்கொள்ள அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகம், இந்தியா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது.
  • கடந்த மார்ச் 29-இல் ஹூஸ்டன் பல்கலைகழகத்தில் இந்திய கலாச்சார உறவுகள் கவுன்சிலின் (ஐசிசிஆர்) இந்திய ஆய்வுகள் இருக்கையை நிறுவ, ஐசிசிஆருடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

உலகச் செய்தி

 • நேட்டோ (NATO) அமைப்பின் 31வது உறுப்பு நாடாக பின்லாந்து இணைந்துள்ளது.
  • பின்லாந்து நேட்டோ அமைப்பில் இணைய துருக்கி ஒப்புதல் அளித்துள்ளது.
  • NATO – வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு
  • உருவாக்கம் – 04.04.1949
  • இது ஒரு இராணுவ கூட்டணி
  • தலைமையகம் – பெல்ஜியம், பிரசல்ஸ்
 • அமெரிக்க வெளியுறவு அமைச்கத்தின் துணை அமைச்சர் பொறுப்பில் ரிச்சர்ட் வர்மா என்ற இந்திய அமெரிக்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

விளையாட்டுச் செய்தி

 • ஏப்ரல் 2-ல் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களில் ஒருவரான சலீம் துரானி (88) காலமானர்
 • ஐடிஎஃப் மைசூரு ஓபன் டென்னிஸ் போட்டி ஆடவர் ஒற்றையர் பிரிவில் பிரிட்டனைச் சேர்ந்த லோப்ஹேகன் ஆஸ்திரேலிய வீரர் பிளேக்கை வீழ்த்தி சாம்பியன்பட்டம் வென்றார்.
 • ஸ்பெயனின் மாட்ரிட் மாஸ்டர்ஸ் பாட்மின்டன் போட்டி மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் முன்னாள் உலக சாம்பியன் பி.வி. சிந்து இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.
  • இந்தோனிசியாவின் கிரகோரியா மாரிஸ்கோ துன்ஜுங்கும், பி.வி. சிந்தும் மோதினர்.
 • மியாமி ஓபன் டபிள்யுடிஏ 1000 டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் பெட்ரோ குவிட்டோவா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
  • ஆடவர் இரட்டையர் பிரிவில் சாண்டியோகோ கோன்ஸ்லஸ்-ரோகர் இணை வென்றது.

April 1 Current Affairs  |  April 2 Current Affairs

Leave a Comment