Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 03rd December 2022

Daily Current Affairs

Here we have updated 03rd December 2022 current affairs notes. This notes will helpful for those who are preparing competative exams like TNPSC, TRB and Police Exams.

தமிழக செய்தி

  • கோயில்களின் புனிதம், தூய்மையைக் காக்கும் விதமாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் கைபேசிக்கு தடை விதித்து உயர்நீதி மன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
  • தமிழ்நாட்டின் முதன்மை கணக்காய்வுத் தலைவராக சி.நெடுஞ்செழியன் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • நியூசிலாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் வலுதூக்கும் போட்டியில் குடியாத்தம் அருகிலுள்ள சீவூர் கிராமத்தைச் சேரந்த ஆசிய வலுதூக்கு வீரர் சி.மூர்த்தி 4 பதக்கங்கள் வென்றார்

தேசிய செய்தி

  • கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையின் புதிய செயலாளராக சஞ்சய் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • பஞ்சாப் நேஷனல் வங்கியின் செயல் இயக்குநராக M.பரமசிவம் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • சென்னையில் மத்திய பாதுகாப்புதுறை செயலாளர் கிரிதர் அரமனே முதல் கடலோரப் பாதுகாப்பு மாநாட்டினை துவங்கி வைத்தார்.
    • இந்தியா, மாலத்தீவு, இலங்கை, மொரிசீயல் 4 நாடுகள் கலந்து கொண்டன.
  • ஸ்பிக் நிறுவனமானது நாட்டிலே முதன் முறையாக “ஒரே நாடு ஒரே உரம்” என்ற திட்டத்தின் கீழ் “பாரத் யூரியா” விற்பனையை தொடங்கியுள்ளது.
  • 2022ம் ஆண்டில் வெளிநாடுகளில் இருந்து தாயகத்திற்கு அதிக பணம் அனுப்புவதில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளதென உலக வங்கி அறிக்கை தெரிவித்துள்ளது.
  • இந்தியா, வங்கதேசத்தின் அண்டைப் பகுதிகளுக்கு இடையேயான கலாச்சார உறவுகளை கொண்டாடும்சில்ஹெட்-சில்சார் திருவிழா” அசாமின் பராக் பள்ளதாக்கில் நடைபெறுகிறது.
    • இவ்விழாவினை வடக்கு பிராந்திய மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி மற்றும் வங்கதேச வெளியுறவு அமைசர் A.K. அப்துல் மொமன் டிசம்பர் 2-ல் தொடங்கி வைத்தார்.
  • “ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு” வரிசையில் கீழ் “ஒரு மாவட்டம் ஒரு விளையாட்டு” திட்டத்தினை உத்திரபிரதேசம் முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தார்.
  • நவம்பர் 29 முதல் டிசம்பர்1 வரை நடைபெற்ற உலகாளாவிய வங்கி உச்சிமாநாட்டில் “Banker’s Bank of the Year Award – 2022” ஐ கனரா வங்கி பெற்றுள்ளது.

உலக செய்தி

  • 2022-ம் ஆண்டுக்கான “மிஸ் எர்த்” போட்டியில் தென் கொரியாவின் “மீனா சூ சோய்” முதலிடம் பிடித்துள்ளார்.
    • 2வது இடம் – ஷெரீதான் மோர்ட்லொக் (மிஸ் எர்த் எயார்) ஆஸ்திரேலியா
    • 3வது இடம் – நதீன் அயூப் மிஸ் (எர்த் வோட்டர்) பாலஸ்தீனியம்

விளையாட்டு செய்தி

  • டிசம்பர் 5 முதல் டிசம்பர் 17 வரை பார்வையற்றோருக்கான மூன்றாவது T20 உலகோப்பை போட்டி இந்தியாவின் 9 நகரங்களில் நடைபெற உள்ளது.

முக்கிய தினம்

  • பன்னாட்டு மாற்றுத் திறனாளிகள் நாள் (டிசம்பர் 3)
    • கருப்பொருள் : “Transformative solutions for inclusive development: the role of innovation in fueling an accessible and equitable world.”
    • 1981ஐ உலக மாற்றுதிறானிகள் ஆண்டாக ஐ.நா சபை அறிவித்தது.
    • 1992 முதல் டிசம்பர் 3-யை மாற்றுத்தினாளிகள் நாளாக அறிவித்ததன் காரணமாக ஆண்டுதோறும் பன்னாட்டு மாற்றுத் திறனாளிகள் நாள் அனுசரிக்கப்படுகிறது.

Dec 01 – Current Affairs  | Dec 02 – Current Affairs 

Leave a Comment