Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 04th January 2023

Daily Current Affairs

Here we have updated 04th January 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competative exams like TNPSC, TRB and Police Exams.

தமிழக செய்தி

  • தமிழகத்தில் இணையவழி மோசடிகளின் வரிசையில் “பாஸ் ஸ்கேம்” என்னும் புதிய வகை மோசடி முக்கிய பிரமுகர்களை அச்சுறுத்தி வருகிறது.
  • தமிழகத்தில் 2022-ம் ஆண்டு இயல்பை விட 23% அதிகமாக மழை பெய்துள்ளது.
    • மழையின் அளவு – 1,132 மி.மீ
  • கல்வி நிறுனங்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்க தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது..

தேசிய செய்தி

  • நாட்டில் அறிவியல் வளர்ச்சியின் நோக்கம், தற்சார்பு இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்.
  • இந்தியாவுக்கு 2வது கட்டமாக 12 சிவிங்கி புலிகள் (சீட்டா) கொண்டு வரப்பபட உள்ளன.
    • இந்தியாவில் அழிந்து போன இனமாக 1952-ல் சிவிங்கி புலிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • 2022 செப்டம்பரில் நமீபியாவில்  இருந்து 8 சிவிங்கிப் புலிகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
  • ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள ஆளுநர் மாளிகையில் “பொலிவுறு நகரம்” (ஸ்மார்ட் சிட்டி) திட்டத்தின்கீழ் உருவாக்கப்ட்ட அரசியலமைப்பு சட்டப் பூங்காவினை இந்திய குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு திறந்து வைத்துள்ளார்
    • இதுவரை அரசியலமைப்பு சட்டத்தில் 105 சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதின் அரசியலமைப்பு சட்டம் ஓர் உயிர்ப்புள்ள ஆவணமாக திகழ்கிறது என தெரிவித்துள்ளார்.
  • சிபிஜ உட்பட விசாரணை அமைப்புகளின் தகவல்களை தெரிந்து கொள்ள அமலாக்கத்துறை சீடோஸ் என்ற புதிய மென்பொருளினை உருவாக்கி வருகிறது.
  • ஆயுர்வேதத்தில் ஆராய்ச்சி மேம்பாட்டை அதிகரிக்கஸ்மார்ட்” திட்டத்தினை இந்திய மருத்துவக் கல்விக்கான தேசிய ஆணையம் (NCISM) மற்றும் ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சில் (CCRAS) ஆகிய இரு நிறுவனங்கள் தொடங்கியுள்ளன.

விளையாட்டு செய்தி

  • கொல்கத்தாவினை சேர்ந்த கொளஸ்தவ் சாட்டர்ஜி  59வது MPL தேசிய சீனியர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வென்றதன் மூலம் இந்தியாவின் 78வது கிராண்ட் மாஸ்டராக உருவெடுத்துள்ளார்.
    • இவர் இச்சாதனையை 19வது வயதில் படைத்துள்ளார்.

Jan 01 – 02 Current Affairs | Jan 03 Current Affairs

Leave a Comment