Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 4th March 2023

Daily Current Affairs

Here we have updated 4th March 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

தமிழகச் செய்தி

 • விசைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 750 யூனிட் இலவச மின்சாரம் 1,000 யூனிட்டாக அதிகரிதுள்ளது தமிழக அரசு.
 • புகையிலைப் பொருள்களான குட்கா, பான் மசாலா உள்ளிட்ட பொருள்களுக்கு தமிழகத்தில் இப்போது தடையில்லை.
  • 2006-ல் இயற்றப்பட்ட உணவுப் பாதுகாப்பு, தரச்சட்டம்-தின் கீழ் தமிழகத்தில் புகையிலைப் பொருள்களுக்கு தடைவிதித்து உணவுப் பாதுகாப்புத்துறை ஆணையர் 2018-ம் ஆண்டு உத்தரவிட்டார். மேலும் ஆண்டுதோறும் அத்துறையால் அறிவிப்பாணையும் வெளியிட்டு வந்துள்ள நிலையில் இத்தீரப்பு வெளியானது.
 • அனைத்து வகை புதிய தொழில் நுட்பங்களும் தாய்மொழியில் இருக்க வேண்டுமென அண்ணா பல்கலை கழக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் வற்புறுத்தினார் .
 • சென்னை நாயகி கலாசார கோட்டுபுரம் கலாச்சார சங்கத்தின் 26வது ஆண்டு இசை, நடனம், நாடகத்திருவிழா நடைபெறுகிறது.
  • மிருதங்க வித்வான் தில்லையாடி மாரியப்பாவுக்கு சிறந்த கலைஞருக்கான “நாயகி விருது” வழங்கப்பட்டது.
 • நிர்பயா திட்டத்தின் கீழ் பெருங்குடியில் ரூ.71 லட்சத்தில் தெரு விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
  • நிர்பையா நிதி (Nirbhaya Fund) என்பது 2013ல் நிதிநிலை அறிக்கையில் இந்திய அரசால் அறிவிக்கப்பட்ட து.
 • புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சொந்த மாநிலங்களில் வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் மேதாபட்கர் தெரிவித்துள்ளார்.
  • மலைப்பிரதேசங்களில் வாழும் மக்கள் அங்குள்ள பூர்வகுடிகளாக இருக்க வனப் பாதுகாப்பு சட்டம் அனுமதிக்கிறது என்பதையும் தெரிவித்துள்ளார்.
  • வனப் பாதுகாப்பு சட்டம் – 1972
 • வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை 65%பேர் இணைத்துள்ளனர் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்
  • சென்னை மாவட்டத்தில் 31.83% பேர் மட்டுமே ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.
 • வெப்ப அலைகளையும், புதிய நோய்களையும் எதிர்கொள்ள தயராக வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
  • தமிழ்நாடு பசுமை இயக்கம் (24.09.2022) மூலம் மாநிலத்தின் காடுகளின் பரப்பளவை 21%லிருந்து 31%மாக அடுத்த பத்தாண்டுகளுக்குள் உயர்த்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
  • 2070க்குள் இந்தியா கார்பன் சமநிலையை அடையும் இலக்கிற்கு முன்பாக தமிழ்நாடு கார்பன் சமநிலை அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 • மார்ச்-3ல் சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 5பேர் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கபட்டுள்ளனர்.
  • இதேபாேல் அலகாபாத், மும்பை, தில்லி உயர்நீதிமன்றங்களின் கூடுதல் நீதிபதிகள் 15பேர் நிரந்தர நீதிபதியாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

தேசிய செய்தி

 • இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை தகர்க்கும் பொருட்டு இந்தியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து “க்வாட்” அமைப்பு-னை உருவாக்கியுள்ளது.
 • இந்தியாவிற்கு உலக வங்கி ரூ.8,200 கோடி கடன் அளித்துள்ளது.
 • தஞ்சாவூர் ஒவியங்கள், மைசூர் சில்க் பட்டுப்புடவை, காங்ரா தேயிலை உள்ளபட 429 பொருள்களுக்கு இதுவரை புவிசார் குறியீடு (GI) அந்தஸ்து வழங்கப்பட்டிருக்கிறது என்ற மத்திய வணிக மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
  • மத்திய அமைச்கத்தின் கீழ் இயங்கும் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுக்கான (டிபிஐஐடி) துறை தனது 2022-23ஆண்டறிக்கையில் இத்தகவலை தெரிவித்துள்ளது.
  • வெளிநாடுகளைச் சேர்ந்த 31 பொருட்களுக்கு புவிசார்குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
  • ஓரிடத்தில் விளையக்கூடிய பொருள்கள் அல்லது தயாரிக்கக்கூடிய பொருள்களின் தரம் அந்த இடத்தில் காலநிலை, புவியியல் பகுதி, தனித்துவ தன்மை ஆகியவற்றின் அடைப்படையில் புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது.
  • இதற்காக உருவாக்கப்பட்ட இந்தியாவின் “பொருள்கள் புவிசார் குறியீடுகள் (பதிவு மற்றும் பாதுகாப்பு) சட்டம் 1999 என்ற சட்டம் 2003-ம் ஆண்டு செப்டம்பர் 15-முதல் நடைமுறையில் இருந்துவருகிறது.
  • இந்த குறியீடு 10 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும். அதன் பின்பு புதிப்பித்து கொள்ளலாம்.
 • ஏப்ரல் 1 முதல் இந்தியாவில் ஹால்மார்க் அடையாள எண் பதிக்காத தங்க நடைகள், கலைப் பொருகள்களை விற்பனை செய்ய மத்திய அரசு தடை விதிக்கிறது.
  • ஹால்மார்க குறியீடு பதிப்பு 2021-ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்து வருகிறது.
 • ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டீகின் பல்கலைக்கழகம் குஜராத்தின் உள்ள கிஃப்ட் நகரத்தில் தனது கிளை வளாகத்தை அமைக்கிறது..
  • இதன் மூலம் இந்தியாவில் கல்வி வளாகத்தை அமைக்கும் முதல் பல்கலைக்கழகமாக டீகின் திகழ உள்ளது.
  • டீகின் பல்கலைக்கழகம் உலக பல்கலைக்கழக பட்டியலில் 266-வது இடத்திலும், புதிய பல்கலைக் கழகங்களின் பட்டியிலில் 50வது இடத்திலும் உள்ளது.
  • வெளிநாட்டு பல்கலைக் கழகங்கள் இந்தியாவில் கல்வி வளாகங்களை அமைப்பதற்கான விதிமுறைகளை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வகுக்கிறது
  • யுஜிசி – 1956
  • தலைமையிடம் – புது தில்லி

உலகச் செய்தி

 • அமெரிக்கா, ரஷியா, ஐக்கிய அரபு அமீரக நாடுகளைச் சேர்ந்த 4 விண்வெளி வீரர்களுடன் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் (SpaceX) சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது

Mar 02 Current Affairs  |  Mar 03 Current Affairs

Leave a Comment