Daily Current Affairs
Here we have updated 4th April 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
தமிழகச் செய்தி
- அகில இந்திய சமூகநீதி கூட்டம் சார்பில் சமூகநீதி பேராட்டத்தை முன்னோக்கி எடுத்துச் செல்லுதல் மற்றும் சமூக நீதி இயக்கத்தின் தேசிய திட்டதில் இணைவது என்கிற தலைப்பின் கீழ் முதல் தேசிய இணைய மாநாடு தில்லியல் நடைபெற்றது.
தேசிய செய்தி
- ஏப்ரல் 3-ல் தில்லியில் சிபிஐ (CBI) வைர விழா கொண்டாட்டத்தை பிரதமர் மோடி துவங்கி வைத்தார்.
- CBI – Central Bureau of Investigation
- உருவாக்கம் – 1963
- தலைமையம் – புதுதில்லி
- தலைவர் – ரிஷிகுமார் சுக்லா (02.02.2019-லிருந்து)
- தில்லியில் கொண்டாட்டப்பட்ட சிபிஐ (CBI) வைர விழா-வில் பிரதமர் மோடியால் விருதுகள் வழங்கப்பட்டன.
- சென்னை சிபிஐ சிறப்பு குற்றப் பிரிவின் கூடுதல் கண்காணிப்பாளர் டி.பி. அனந்த கிருஷ்ணன் – சிபிஐயின் சிறந்த புலனாய்வு அதிகாரிகளுக்கான தங்க பதக்க விருது
- சிபிஐ லஞ்ச ஊழல் தடுப்பு பிரிவின் ஓய்வு பெற்ற கண்காணிப்பாளர் சையத் பசுல்லா – சிறந்த சேவைக்கான குடியரசுத்தலைவர் காவல் பதக்க விருது
- கலை ஆர்வலர் கிரண் நாடாருக்கு பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருதான “செவாலியே விருது” வழங்கப்பட்டுள்ளது.
- பிரான்ஸ் தூதரான இமானுவல் லெனைன் அந்த விருதை கிரண் நாடாரிடம் வழங்கினார்.
- உலகில் முதன் முறையாக “காண்ட்ரோஸ்டீரிம் பர்ப்யூரியம்” என்னும் தாவர பூஞ்சை நோயால் கொல்கத்தாவை சேர்ந்த தாவர நுண்ணியிர் நிபுணர் பாதிப்படைந்துள்ளார்.
- பல்லுயிர் தன்மை குறித்து பார்வையாளர்களிடையே விழிப்புணர்வை அதிகரிக்க எரவிகுளம் தேசிய பூங்காவில் “இந்தியாவின் முதல் பெர்னாரியம்“ அமைக்கப்பட்டுள்ளது.
- ரிசர்வ் வங்கியின் செயல் இயக்குநராக நீரஜ் நிகாம் நியமிக்கபட்டுள்ளார்.
விளையாட்டுச் செய்தி
- மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி ஆடவர் ஒற்றையர் பிரிவில் ரஷிய வீரர் டேனில் மெத்வதேவ் முதன் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
- மகளிர் இரட்டையர் பிரிவில் அமெரிக்காவின் ஜெஸிக்கா பெகுலா-கோகோ கவுஃப் இணை முதன் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றனர்.
முக்கிய தினம்
- மகாவீரர் ஜெயந்தி
- சமண சமயத்தின் 24வது தீர்த்தங்கரர் (இறுதித் தீர்த்தங்கரர்)
- இயற்பெயர் – வர்த்தமானர்
- காலம் – கி.மு 599-527
- பிறந்த இடம் – குண்டா, வைசாலி, பீகார் மாநிலம்.
- மனோன்மணீயம் சுந்தரனார் 168வது பிறந்த தினம்
- சர்வதேச சுரங்க விழிப்புணர்வு தினம்