Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 04-05th December 2022

Daily Current Affairs

Here we have updated 04-05th December 2022 current affairs notes. This notes will helpful for those who are preparing competative exams like TNPSC, TRB and Police Exams.

தமிழக செய்தி

  • மாற்றுத் திறனாளிக்கான ஓய்வூதியம் 1000லிருந்து 1500-ஆக உயர்த்தப்பட்டது.
  • “நான் முதல்வன்” திட்டத்தின் மூலமாக மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கி திறன் பயிற்சி அளிக்கும் திட்டத்தினை தமிழக முதல்வர தொடங்கி வைத்தார்.
  • தமிழகத்தில் புதிதாக உருவாக்கபட்ட காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை, தென்காசி, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு நடமாடும் சிகிச்சை  பிரிவு வாகனங்களை முதல்வர் தொடங்கி வைத்தார்.
  • மாற்றுத்திறனாளிகளின் நலன்களுக்காக சிறந்த சேவை புரிந்தோருக்கு தமிழக முதல்வரால் விருதுகள் வழங்கப்பட்டன.
    • சிறந்த சமூகப் பணியாளர் விருது – ஜெயந்தி உதயகுமார் (மயிலாடுதுறை மாவட்டம்)
    • சிறந்த ஆசிரியர் விருது – ம.கவிதா (தேனி மாவட்டம்)
    • சிறந்த நிறுவனத்துக்கான விருது – இன்டேக்ட் சிறப்பு பள்ளி அறக்கட்டளை (திருச்சி மாவட்டம்)
  • சிறந்த கற்பித்தல் பணி
    • வி.ஜேம்ஸ் ஆல்பர்ட் (சென்னை மயிலாப்பூர் சி.எஸ்.ஐ காது கேளாதோர் பள்ளி)
    • கொ.மார்க்ரெட் (சென்னை சிறுமலர் பள்ளி)
    • சித்ரா (காஞ்சிபுரம் இளம் சிறார்களுக்கான இலவச ஆரம்பநிலை பயிற்சி மையம்0
    • ஜோதி (கோவை வித்தியா விகாஸினி பள்ளி)
  • போலீசார் POCSO வழக்குகளில் குற்றவாளிகளை கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (S.P.) நிலையில் உள்ள அதிகாரிகளிடம் அனுமதி வாங்க வேண்டும் என தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.
    • POCSO – The Protection of Children from Sexual Offenses (Act, 2012)
    • தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் (DGP) – சி.சைலேந்திரபாபு
  • மகாகவி பாரதியார் பிறந்த நாளை முன்னிட்டு டிசம்பர் 11ல் தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தினமணியின் “மகாகவி பாரதியார் விருது”ஐ ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு வழங்க உள்ளார்.
    • மகாகவி பாரதியார் குறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு அரிய தகவல்களைத் திரட்டி வெளிட்டு வருகிறார்.
  • பொதுச்சுகாதார மற்றும் நோய் தடுப்புக்கென பிரத்யேகத் துறையின்100 ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு டிசம்பர்-5ல் மாமல்லபுரத்தில் “பன்னாட்டு சுகாதார மாநாடு” தொடங்குகிறது.
    • பொது சுகாதாரத் துறை 1992-ல் தொடங்கப்பட்டது.

தேசிய செய்தி

  • குஜராத் சட்டப்பேரவை 2வது கட்ட தேர்தல் 93 தொகுதிகளில் நடைபெறுகிறது.
  • ஜி-20 உயரதிகாரிகள் கூட்டம் டிசம்பர்-4ல் தொடங்கியது.
    • ஜி-20கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ள நிலையில் இக்கூட்டம் நடைபெறுகிறது
  • இந்திய ரயில்வே மேலாண்மைப் பணித்தேர்வை (IRMSE) 2023-ம் ஆண்டு முதல் மத்திய பணியாளர் தேர்வாணையம் (UPSC) நடத்த உள்ளது.
  • டிசம்பர் 3-ல் போபால் விஷவாயு பேரழிவு 38வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
    • மத்திய பிரதேசம் போபாலில் 1984-ல் இப்பேரழிவு நடைபெற்றது.
  • இந்தியாவின் உயரிய விருதான “பத்மபூஷன்” விருது கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சைக்கு வழங்கப்பட்டது.
  • பிரதமரின் வய வந்தனா யோஜனா (BMVVY) திட்டம் 2023 மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • இத்திட்டம் 2017-ல் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தால் தொடங்கப்பட்டது.
  • டிசம்பர் 3-5வரை உயரி அறிவியல் மற்றும் ரசாயன தொழில் நுட்ப சர்வதேச மாநாடு ஜம்மு-வில் நடைபெறுகிறது.
  • பசுமைக்குடில் விவசாயம் வாயிலாக சிறு விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டதற்காக தெலுங்கானாவைச் சேர்ந்த புத்தாக்க நிறுவனமான “கேத்தி நிறுவனத்துக்கு “எர்த்ஷாட் பரிசு” வழங்கப்பட்டுள்ளது.
    •  “எர்த்ஷாட் பரிசு” பிரிட்டன் இளவரசால் நிறுவப்பட்டது.

உலக செய்தி

  • ஈரான் புதிய அணுமின் நிலையத்தை கட்டத் துவங்கியுள்ளது.

முக்கிய தினம்

  • உலக மண் தினம் (டிசம்பர் 5)
    • கருப்பொருள் : “Soils: Where Food Begins”

Dec 01 – Current Affairs  | Dec 02 – Current Affairs 

Leave a Comment