Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 05th January 2023

Daily Current Affairs

Here we have updated 05th January 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competative exams like TNPSC, TRB and Police Exams.

தமிழக செய்தி

  • தமிழகத்தில் ரூ.15,610 கோடி மதிப்பிலான 8 புதிய தொழில் திட்டங்களுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • ஜனவரி 6-ல் நந்தம் YMCA மைதானத்தில் பபாசி சார்பில் முதல் முறையாக ஆயிரம் அரங்குகளுடன் நடைபெறும் 46வது சென்னை புத்தகக் கண்காட்சியை தமிழக முதல் தொடங்கி வைக்கிறார்.
    • இவ்விழாவில் கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி விருது பெறுவோர்கள்.
      1. தேவிபாரதி – நாவல்
      2. சந்திரா தங்கராஜ் – சிறுகதை
      3. தேவதேவன் – கவிதை
      4. சி.மோகன் – மொழிபெயர்ப்பு
      5. பிரளயன் – நாடகம்
      6. பா.ரா.சுப்பிரமணியன் – உரைநடை
  • ஜனவரி 13-ல் சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா நடைபெற உள்ளது.
  • சிற்பி அறக்கட்டையின் 26வது ஆண்டு விருது வழங்கும் விழாவில் கலைஞாயிறு விருது” ஓவியரான “மணியம் செல்வன்”-கு வழங்கப்பட்டது.
  • தென் மண்டலம் சார்பில் நடைபெறும் வடகிழக்கு பிராந்திய கலாச்சார திருவிழாவான “ஆக்டேவ்” சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது.

தேசிய செய்தி

  • உலகின் மிக உயரமான போர் முனையான சியாச்சினில் முதல் முறையாக சிவா சௌகான் என்ற முதல் பெண் ராணுவ அதிகாரி பணியமர்த்தப்பட்டுள்ளார்.
  • ஜனவரி 4ல் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ரூ.19,744 கோடி மதிப்பிலான தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டள்ளது.
    • கரியமில் வாயு வெளியேற்றத்தை குறைக்கும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
    • அடுத்த 5 ஆண்டுகளில் 5 மில்லியன் மெட்ரிக் டன் பசுமை ஹைட்ரஜன் வாயுவினை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • இந்தியாவில் ராணுவ வீரர்கள் எல்லை பகுதிக்கு விரைவாக செல்ல அருணாச்சல பிரதேத்தில் சியோம் நதி மீது கட்டப்பட்ட “சியோம் பாலம்” திறக்கப்பட்டுள்ளது.
  • கோவாவின் மேபா பகுதியில் அமைந்துள்ள கோவா சர்வதேச பசுமை விமான நிலையத்திற்கு மறைந்த பாதுகாப்புத்துறை அமைச்சரான மனோகர் பாரிக்கர் பெயர் சூட்ட மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • இருப்பிடச் சான்றிதழ் இல்லாமல் ஆதாரில் முகவரி மாற்றம் செய்யும் “குடும்பத் தலைவர் முறை”யை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) அறிமுகப்படுத்தியுள்ளது.
    • UIDAI – Unique identification Authority of india
    • 18 வயதுக்கு மேற்பட்டோர் குடும்பத்தலைவராக செயல்படலாம்
  • அகில இந்திய வானொலி தூர்தர்சன் உள்ளடக்கிய பிரசார் பாரதியின் உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் நவீனமயமாக்கலுக்கு ரூ.2,539 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
    • பிரசார் பாரதி என்பது .
  • ஜனவரி 30ல் ஜி-20 மாநாடு புதுச்சேரியில் நடைபெற உள்ளது.
  • ஆயுர்வேதத்தில் ஆராய்ச்சி மேம்பாட்டை அதிகரிக்கஸ்மார்ட்” திட்டத்தினை இந்திய மருத்துவக் கல்விக்கான தேசிய ஆணையம் (NCISM) மற்றும் ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சில் (CCRAS) ஆகிய இரு நிறுவனங்கள் தொடங்கியுள்ளன.

உலக செய்தி

  • ஜனவரி 4ல் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான பிரெய்லி எழுத்து முறையை உருவாக்கிய லூயி பிரெயல்  (பிரான்ஸ்) பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
  • சீனா தனது முதல் ஹைட்ரஜன் ரயில் சேவை தொடங்கியுள்ளது. இதன் மூலம் ஆசியாவிலே முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையை தொடங்கி நாடு என்ற பெருமையை பெற்றுள்ளது.
    • உலகில் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவை தொடங்கிய நாடு – ஜெர்மனி
  • ஜனவரி 4-ல் பிரிட்டனிலிருந்து பிரிந்த மியான்மர் நாட்டின் 75வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
    • ராணுவ ஆட்சியாளர் – மின் ஆங் லியாங்

விளையாட்டு செய்தி

  • ரஞ்சிகோப்பை போட்டியில் ஜெய்தேவ் உனத்கட் முதல் ஓவரிலே ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்

Jan 03 Current Affairs | Jan 04 Current Affairs

Leave a Comment