Daily Current Affairs
Here we have updated 5th March 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
தமிழகச் செய்தி
- குலசேகரப்பட்டினத்தில் அமைய உள்ள ராக்கெட் ஏவுதளம் மூலம் தென் இந்தியா பெரிதும் வள்ச்சியை அடையும் என இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.சிவன் தெரிவித்துள்ளார்.
- இந்த ராக்கெட் ஏவுதளத்தில் சிறிய எஸ்எஸ்எல்வி ரக ராக்கெட்டுகள் ஏவப்பட உள்ளன.
- விண்ணுக்கு மனிதனை அனுப்பும் சுகன்யான் திட்டத்திற்கான பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளது.
- சந்திரயான்-3 விண்ணில் செலுத்துப்படுவதற்கு தயாராகி வருகிறுது.
- சூரியன் தொடர்பான ஆராச்சியை மேற்கொள்வதற்காக ஆதித்யா விண்கலமும் தயாராகி வருகிறது என தெரிவித்துள்ளார்
- மார்ச் 5-ல் சிவகங்கை மாவட்டம் கீழடியில் உருவாக்கப்பட்டுள்ள அகழ் வைப்பகத்தை தமிழக முதலவர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
- கீழடி அகழாய்வில் 1000-க்கும் மேற்பட்ட குறியீடுகளும், 60-க்கும் மேற்பட்ட தமிழ் பொறிப்புக் கொண்ட பானை ஓடுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
- இந்த பானை ஓடுகளில் குவிரன் ஆதன், ஆதன் போன்ற தனி நபர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
- கீழடியில் கிடைக்கப் பெற்ற பொருள்கள் நகர நாகரிகத்துக்கான கூறுகளை வெளிப்படுத்தியுள்ளன.
- தி.மு.க ஆட்சியில் கல்விக்கும், மருத்துவத்திற்கும் முக்கியத்துவம் தரப்படும் என்று இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- நகரப்பேருந்தில் மகளிருக்கான இலவச பயணத் திட்டத்தில் (08.05.2021) 250கோடி முறை பயணித்துள்ளனர்
- மதிய உணவுத் திட்டதில் 1½லட்சம் குழந்தைகள் பயனடைந்துள்ள நிலையில் காலை சிற்றுண்டி திட்டத்தில் (15.09.2022) 2லட்சம் பேர் பயனடைந்து வருகின்றன.
- புதுமைப் பெண் திட்டத்தில் (05.09.2022) கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கி வருகிறது.
- இந்தியாவிலேயே முன்னோடியாக “நம்மை காக்கும் 48” என்ற மகத்தான திட்டத்தையும் வழங்கி வருகிறோம்.
- நெரூர், குளித்தலை உள்ளிட்ட இடங்களில் ரூ.1,450 கோடியில் கதவணை கட்டும் திட்டம்-யும் அறிவித்துள்ளார்
தேசிய செய்தி
- நாட்டின் வளர்ச்சியுடன் பொருளாதாரம் மற்றும் உள்கட்டமைப்பை ஒருங்கிணைக்கும் முக்கிய கருவியாக உத்வேகம் (கதி சக்தி) தேசிய செயல் திட்டம் உள்ளது என பிரதமர் அறிவிப்பு.
- கதி சக்தி – 01.02.2022
- சந்திரகுப்த மெளரியரால் தொடங்கப்பட்டு பின்னர் அசோகரால் முன்னெடுக்கப்பட்டு அதன் பிறகு ஷேர்ஷா சூரியால் மேம்படுத்தப்பட்ட “உத்தரபாதை” கட்டமைப்பு உதாரணமாக குறிப்பிட்டதுடன், அதனை ஆங்கிலேயர்கள் தான் ஜி.டி.சாலை என பெயர் மாற்றியதாக பிரதமர் கூறியுள்ளார்.
- 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழகத்தின் கல்லணை இன்னும் பயன்பாட்டில் உள்ளதையும், நீர்வழியாக கொல்கத்தாவுடன் பனாராஸ் படித்துறைகள் இணைக்கப்பட்டுள்ளதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.
- முதன் முறையாக ஆஸ்திரேலிய பிரதமர் இந்தியா வருகை தர உள்ளார்.
- அகமதாபாத்தில் நடைபெறும் 4வது இந்திய-ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் தொடரை பிரதமர் ஆல்பனேசி – பிரதமர் மோடி பார்வையிட உள்ளனர்.
- தில்லியில் நடைபெற்ற ரெய்சினா பேச்சுவார்த்தையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றுள்ளார்.
- ஹைதராபாத் பேகம்பேட் விமானநிலையத்தில் ரூ.400கோடி மதிப்பில் விமான போக்குவரத்து ஆராய்ச்சி அமைப்பை (சிஏஆர்ஓ) மத்திய அரசு அமைக்க உள்ளது.
- பிரதமர் விரைவு சக்தி பெருந்திட்டம், ஜி20 தலைமைப் பொறுப்பு, கல்வி, புதிய கண்டுபிடிப்பு, நோய்களை எதிர்த்து போராடுதல் ஆகியவை இந்தியாவின் சாதனைகள் என பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
- பிரதமர் விரைவு சக்தி பெருந்திட்டம் – 13.10.2021.
- நானோ தொழில்நுட்ப அடிப்படையிலான திரவ டிஏபி உரத்தை அறிமுகம் செய்யவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என மத்திய ரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்துள்ளார்.
- டிஏபி – டை-அமோனியம் பாஸ்பேட்
- நானோ டிஏபியை தயாரிக்கும் நிறுவனம் – இந்திய விசாயிகள் உர கூட்டு நிறுவனம்.
- 2021-ல் இந்திய விசாயிகள் உர கூட்டுறவு நிறுவனம் (இப்கோ) நானோ திரவ யூரியாவை அறிமுகம்செய்ததை தொடர்ந்து நானோ டிஏபி உரத்தை அறிமுகம் செய்ய உள்ளது.
- மேலும் நானோ பொட்டாஷ், நானோ ஜிங்க், நானோ காப்பர் உரங்களையும் அறிமுகப்படுத்த இஃப்கோ திட்டமிட்டுள்ளது.
- நாட்டில் யூரியா உரத் தேவை 35 மில்லியன் டன்னாக உள்ள நிலையில் 25 மில்லியன் டன் உற்பத்தி செய்யப்படுகிறது. மீதமுள்ள உரம் இறக்குமதி மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது.
- பாதுகாக்கப்பட்ட தேசிய விலங்காக பசுவை அறிவிக்க அலகாபாத் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
- மகாராஷ்டிர மாநிலத்தில் சந்திராபூர் மற்றும் யவத்மால் மாவட்டங்களை இணைக்க நெடுஞ்சாலையில் உலகில் முதல் மூங்கில் சாலையோர தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.
- தற்சார்பு இந்தியா இலக்கை எட்டும் முயற்சியாக வாண்-வரோரா நெடுஞ்சாலையில் 200மீ நீளத்துக்கு உலகின் முதல் மூங்கில் சாலை விபத்து தடுப்பு அமைப்பு நிறுவப்பட்டுள்ளது.
- இதன் பெயர் – பாகுபலி
- பேம்புசா பல்கூவா என்ற மூங்கில் வகை பயன்படுத்தப்பட்டு அதன் மீது கிரியோசோட் எண்ணெய் மற்றும் மறுசுழற்சி செய்யப்பட்ட உயர் அடர்த்தி பாலி எத்திலீன் ஆகியவை பூசப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.
- கரியமில வாயு, மீதேன் உள்ளிட்ட பசுமை குடில் வாயுக்களின் அளவு தொடர்ந்து அதிகரிக்குமானால், இந்தியாவின் சென்னை, கொல்கத்தா உள்பட ஆசியாவின் சில முக்கிய நகரங்கள் கடல் நீர் மட்டம் உயர்வால் இந்த நூற்றாண்டுக்குள் பாதிக்கப்படும் என “நேச்சர் க்ளைமேட் சேஞ்ச்” இதழில் வெளியான ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பாதிப்புக்குள்ளாக வாய்ப்புள்ள நகரங்கள் சென்னை, கொல்கத்தா, பாங்காங் (தாய்லாந்து), மணிலா (இந்தோனேசியா), யாங்கோன் (மியான்மர்), ஹோ சி மின் சிட்டி (வியத்நாம்)
உலகச் செய்தி
- மார்ச் 3ல் சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா நகரில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டம் நடைபெற்றுள்ளது.
- ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையம் என்பது ஐ.நா.சபை கட்டமைப்பிற்குள் 1946 முதல் செயல்படும் ஆணையமாகும்.
- ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையம் இதன் பெயர் 2006-ல் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
விளையாட்டுச் செய்தி
- துபை டூட்டி ப்ரி டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஆடவர் ஒற்றையர் பிரிவில் ரஷ்ய வீரர் டேனில் மெத்தேவ் சாம்பியன் பட்டம் வென்றார்.
- தாய்லாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை பெண்கள் ஸ்னூக்கர் போட்டியில் தமிழக வீராங்கனை அனபமா ஒற்றை பிரிவில் தங்கம் வென்றுள்ளார்.
- இவர் இந்திய அணிக்காக 2வது முறையாக தங்கம் வென்றுள்ளார்.