Daily Current Affairs
Here we have updated 5th April 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
தமிழகச் செய்தி
- மக்களுக்கு நீதி கிடைக்கச் செய்வதற்கான குறியீட்டில் தமிழகம் 2-வது இடம் (பெரிய மாநிலங்கள்) பிடித்துள்ளது.
- 1வது இடம் – கர்நாடாகா
- 3வது இடம் – தெலங்கானா
- 4வது இடம் – குஜராத்
- 5வது இடம் – ஆந்திரம்
- மக்களுக்கு நீதி கிடைக்கச் செய்வதற்கான சிறிய மாநிலங்கள் குறியீட்டில் சிக்கிம், அருணாச்சலப்பிரதேசம், திரிபுரா ஆகியவை முறையே முதன் மூன்று இடங்களை பிடித்துள்ளன.
- இந்திய நீதி அறிக்கையை (ஐஜேஆர்) டாடா அறக்கட்டளை 2019-ம் ஆண்டு முதல் வெளியிட்டு வருகிறது
தேசிய செய்தி
- ஏப்ரல் 04-ல் பேரிடர் மீட்பு உள்கட்டமைப்பிற்கான சர்வதேச கூட்டமைப்பின் இருநாள் மாநாடு தில்லியில் தொடங்கியது.
- சர்வதேச அளவில் மலட்டுத்தன்மை குறித்த உலக சுகாதார அமைப்பின் ஆய்வறிக்கையில் 18 வயதைக் கடந்தவர்களில் 17.5% பேர் மலட்டுத் தன்மையால் பாதிக்கப்படுகின்றன என தெரிவித்துள்ளது.
- அதிக வருமானம் கொண்ட நாடுகளில் 17.8% பேர் பாதிக்கப்படுகின்றன.
- நடுத்தர, குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் 16.5% பேர் பாதிக்கப்படுகின்றன.
- சாலை பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி உ.பி.சிங் தலைமையில் முதன் முறையாக சாலை பாதுகாப்பு வாரியம் அமைக்கப்படும் என்ற மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
- 3 ஆண்டுகளில் 40 கோடி பேருக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் இணைப்பு வழங்கி ஜல் ஜீவன் திட்டத்தில் சாதனை படைத்துள்ளதாக ஜல் ஜீவன் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- 2019-ஆம் ஆண்டு சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி ஜல் ஜீவன் இயக்கத்தை அறிவித்தார்.
- ஏப்ரல் 3-8வரை இந்திய-இலங்கை கடற்படை இடையிலான 10வது இருதரப்பு கடல்சார் பயிற்சியான SLINEX-2023 இலங்கையின் கொழும்புவில் நடைபெறுகிறது.
- இப்பயிற்சியில் இந்தியா சார்பில் இந்திய கப்பல்களான ஐஎன்எஸ் கில்தான் மற்றும் ஐஎன்எஸ் சாவித்திரி ஆகியவை கலந்து கொள்கின்றன.
உலகச் செய்தி
- திரவ ஹைட்ரஜனில் இயங்கும் உலகின் முதல் படகு “MF Hydra” எனும் பெயரில் நார்வே நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
- இப்படகினை நார்வே நாட்டின் நார்லெட் நிறுவனம் தயாரித்துள்ளது.
- உலகின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் மூலமாக இயங்கும் பறக்கும் படகு – தி ஜெட்
- உலகின் முதல் ஹைட்ரஜன் ரயிலை ஜெர்மெனி அறிமுகம் செய்தது.
- ChatGPT-யை தடைசெய்த இத்தாலி அரசு ஆங்கில மொழியை தடை செய்ய திட்டமிட்டுள்ளது.
- நாசாவின் ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் கீழ் கிறிஸ்டினோ கோச் என்ற பெண்மணியை நிலவுக்கு அனுப்ப உள்ளது.
- இதனால் நிலவுக்கு செல்லும் முதல் பெண் என்ற பெருமையை கிறிஸ்டினோ கோச் பெற்றுள்ளார்
- ஆர்ட்டெமிஸ் திட்டம் என்பது நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டமாகும்.
- நிலவுக்கு செல்லும் 4விண்வெளி வீரர்கள்
- ஜெர்மி ஹேன்சன்
- விக்டர் க்ளோவர் (முதல் கருப்பினத்தவர்)
- ரீட்வைஸ்மேன்
- கிறிஸ்டினா கோச் (முதல் பெண்)
- இங்கிலாந்திற்கும், முகலாய இந்தியாவிற்கு இடையிலான சிக்கலான உறவை ஆராயும் வகையில் “Courting India; England, Mughal India and the Orgins of Empire” என்ற தலைப்பில் நத்தினி தாஸ் என்பவரால் எழுதப்பட்டது.
- நந்தினி தாஸ் – லிவர்பூல் பல்கலைக்கழக ஆங்கில இலக்கிய பேராசிரியர்
விளையாட்டுச் செய்தி
- ஊக்கமருந்து பயன்படுத்திய புகார எதிரொலியாக காமன்வெல்த் சாம்பியன் சஞ்சிதா சானுவுக்கு தேசிய மருந்து தடுப்பு ஆணையம் (நாடா) 4 ஆண்டுகள் தடை விதித்துள்ளது.
- தடை செய்யப்பட்ட “ட்ரோஸ்டனோலோன் மெட்டபோலைட்” என்ற ஊக்க மருந்து பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.
முக்கிய தினம்
- தேசிய கடல்சார் தினம்.