Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 05-06th February 2023

Daily Current Affairs

Here we have updated 05-06th February 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

தமிழகச் செய்தி

 • திருச்சியை சேர்ந்த மாணவியான வி.ஏ.ஜென்னி பிரான்ஸினா “ராக்ஷா மந்திரி” விருதினை பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
  • இவ்விரு மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தால் வழங்கப்படுகிறது.
  • தமிழகம் 12 ஆண்டுகளுக்கு பிறகு இவ்விருதினை பெற்றுள்து.
  • பிஷப் ஹீபர் கல்லூரியல் பி.எஸ்.சி வேதியியல் இளநிலை மூன்றாம் ஆண்டு மாணவியான இவர் தேசிய மாணவர் படையின் கேடட் கீழ் அதிகாரியாக (சியுஓ) இவ்விருதை பெற்றுள்ளார்.
 • பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் (78) காலமானர்.
  • இவர் 19 மொழிகளில் 10,000 மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
  • மூன்று முறை தேசிய விருது பெற்றுள்ளார். அண்மையில் இவருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டிருந்தது.
 • “தமிழ்நாடு தன்னுரிமை கழகம்” என்னும் புதிய கட்சியை எழுத்தாளர் பழ.கருப்பையா தொடக்கம்.
 • பேருந்தின் தடம், பயண நேரத்தினை பயணிகள் அறியும் விதமாக அரசு விரைவுப் பேருந்துகளில் “சென்னை பஸ் செயலி” என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தேசிய செய்தி

 • ஜனநாயக சீர்திருத்த சங்க ஆய்வின்படி மக்களைவைக்காக 2009 முதல் 2019 வரை தேர்வு செய்யப்பட்ட 71 எம்.பி.க்களின் சொத்து மதிப்பு 286% அதிகரித்துள்ளது.
 • பிப்ரவரி 18-ல் GST கவுன்சில் 49வது கூட்டம் தில்லியில் நடைபெற உள்ளது.
  • 279A விதியின் கீழ் GST கவுன்சில் உருவாக்கப்பட்டது.
 • கடந்த 5 ஆண்டுகளில் ரூ.193 லட்சம் கோடி மதிப்பிலான ராணுவ தளவாடங்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன மத்திய அரசு அறிவிப்பு
 • 2024 மக்களவை தேர்தலில்ர்விம் (தொலைவிட வாக்குபதிவு இயந்திரம்) பயன்படுத்தப்படாது என மத்திய அரசு தகவல்.
  • Remote Electronic Voting Machine (RVM) – புலம்பெயர் தொழிலாளர்கள் வாக்களிக்களிக்க தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியது.
 • 2022-23 நிதியாண்டில் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவிலிருந்து அதிக ஏற்றுமதி செய்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடம்
 • இஸ்ரோ-நாஸா கூட்டு முயற்சியல் உருவாக்கப்பட்ட நிஸார் செயற்கைக்கோள் இம்மாதத்தின் இறுதியில் இந்தியா வருகிறது.
  • பூமியின் நிலம் மற்றும் பணிப் பரப்பை துல்லியமாக கண்காணிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.
  • 2014-ல் தொடங்கப்பட்ட இச் செயற்கைகோள் 2,800 கிலோ எடை கொண்டது.
 • சிக்கிம் மாநிலத்தில் “மேரோ ருக்; மேரோ சந்ததி”திட்டத்தின் கீழ் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் 100 மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
 • அஸ்ஸாம் மாநிலத்தின் பர்பேட்டாவில் உலக அமைதிக்கான “கிருஷ்ணகுரு ஏக் நாம் அகண்ட கீர்த்தன்” என்ற நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
  • GST – Goods and Services Tax
  • அறிமுகப்படுத்தப்ட்ட ஆண்டு – 01.07.2017
 • மொரார்ஜி தேசாய் பிரதமாக (1977-1979) இருந்த காலத்தில் சட்ட அமைச்சராக இருந்த சாந்தி பூஷண் காலமானார்.
 • நாட்டின் 148வது விமான நிலையமாக கர்நாடக மாநிலத்தில் சிவமொக்கா விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது .
 • பத்மஸ்ரீ விருது பெற்ற தெலுங்கு திரைப்பட இயக்குநர் கே.விஸ்வநாத் காலமானர்.
  • இவர் 1992-ல் பத்மஸ்ரீ விருதும், 2016-ல் தாதா சாகேப் பால்கே விருது பெற்றுள்ளார்

உலகச்செய்தி

 • வியாழன் கிரகத்தின் 12 புதிய நிலாக்கள் அமெரிக்க வானியல் அறிஞர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • 92 நிலாக்களுடன் வியாழன் கிரகம் முதலிடம் பிடித்துள்ளது.
  • 83 நிலாக்களுடன் முதலிடத்திலிருந்த சனி கிரகம் 2வது இடம்-திற்கு தள்ளப்பட்டது.

விளையாட்டுச் செய்தி

 • சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனம் (ஐபிஏ) வெளியிட்டுள்ள தரவரிசை பட்டியலில் இந்தியா 3வது இடம் பிடித்துத்துள்ளது.
  • முதலிடம் – கஜகஸ்தான்
  • இரண்டாவது இடம்  – உஸ்பெகிஸ்தான்

முக்கிய தினம்

 • பெண் பிறப்புறுப்பு சிதைவுக்கான பூஜ்ய சகிப்புத்தன்மைக்கான சர்வதேச தினம். (பிப்ரவரி 06)
  • கருப்பொருள் : “Partnership with men and boys to transform Social and Gender Norms to End Female Genital Mutilation”

Feb 02 Current Affairs | Feb 03-04 Current Affairs

Leave a Comment