Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 5th November 2022

Daily Current Affairs

தமிழக செய்தி

 • தமிழக சிறைத்துறை டிஜிபியாக அம்ரேஷ பூஜாரி பொறுப்பேற்றார்
 • கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி விருது பெற்ற க.நெடுஞ்செழியன் காலமானார்.
  • ஆசீவகமும் ஐயனார் வரலாறும், பதினென்கீழ்கணக்கு நூல்களின் மெய்யியல் போன்ற சில நூல்களையும் எழுதியுள்ளார்

தேசிய செய்தி

 • கர்நாடக காவல்துறையால் வாகன திருட்டுக்கான முழு அளவிலான “மின்னணு முதல் தகவல் அறிக்கை (Online FIR) தாக்கல் செய்யும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
  • வாகனப் பதிவுக்கான வாகன தரவுத் தளத்தையும் மின்னணு கையொப்பங்களுக்கான ஆதார் அமைப்பும் இணைப்பதான மூலமாக இம்முறை செயல்படுகிறது.
 • US News & World Report என்ற வலைதளம் வெளியிட்டுள்ள “2022 – சிறந்தநாடுகள் பட்டியிலில் இந்தியா 31வது இடம் பிடித்துள்ளது.
  • முதலிடம் – ஸ்விட்சர்லாந்து
  • இரண்டாமிடம் – ஜெர்மெனி
  • மூன்றாமிடம் – கனடா
 • US News & World Report வலைதளம் வெளியிட்ட “உலகின் மிக மலிவான உற்பத்தி விலை காணப்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் இடம் பிடித்துள்ளது.
  • இரண்டாமிடம் – சீனா
  • மூன்றாமிடம் -வியந்நாம்
 • இந்திய குடியரசு தலைவர் தேசிய நெடுஞ்சாலை 10-ல் உள்ள ரங்போவில் மேற்கு வங்கத்தையும் சிக்கிமையும் இணைக்கும் அடல் சேது வழிப்பாதையை திறந்து வைத்தார்.
 • டெல்லியில் பிரதமர் மோடி “மத்திய லஞ்ச ஒழிப்பு துறையின் புகார் மேலாண்மை அமைப்பின் இணைய முகப்பினை” துவங்கி வைத்தார்.
 • கங்கா உத்சவின் ஆறாவது பதிப்பினை டெல்லியில் மத்திய அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி துவங்கி வைத்தார்.
  • நாட்டின் நதிகளை கொண்டாடுவதும், நதிகள் புத்துயிர் பெறுவதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை பரப்புவது கங்கா உத்சவ் 2022-ன் முக்கிய நோக்கமாகும்
 • ஆத்ம நிர்பார்தவுக்கு உத்வேகம் அளிக்கும் ஐந்து மேக்-2 திட்டங்களுக்கான திட்ட அனுமதி ஆணைகளுக்கு  இந்திய ராணுவம் ஒப்புதல் அளித்துள்ளது.
 • PSLVC-12 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட ரிசார்ட்-2 செயற்கைகோள் (இந்தியாவின் முதல் உளவு செயற்கைகோள்) பூமிக்கு திருப்புகிறது.
  • எல்லைகளில் தீவிரவாதிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்கவும் உளவு பணிக்காகவும் ஏப்ரல் 2009-ல் விண்ணில் செலுத்தப்பட்ட ரிசார்ட்-2  பதிமூன்றரை ஆண்டுகள் கழித்த நிலையில் தனது கட்டுபாட்டினை இழந்து புவியீர்ப்பு விசை பகுதிக்குள் நுழைந்தது.
  • இந்தோனேஷியாவின் ஜகர்தா அருகே இந்தியப் பெருங்கடலில் விழும் என கணிக்கப்பட்டுள்ளது.
 • மேகலாயா மாநிலத்தை சேர்ந்த ஐரீன் டாக்கர் வடகிழக்கு இந்திய அழகியாக தேர்வாகியுள்ளார்
  • நடைபெற்ற இடம் : நாகலாந்து தலைநகர் கோஹிமா

உலக செய்தி

 • பதினொறு ஆண்டுகளுக்கு முன் வெடித்து சிதறிய பெரிய நட்சத்திரத்தை (சூரியனை விட 8 மடங்கு) ஈ.எஸ்.ஓ. என்ற ஐரோப்பிய ஆய்வகத்தின் வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • இந்த நட்சத்திரம் பால்வழி மண்டலத்தில் பூமியில் இருந்து 800 ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது.

விளையாட்டு செய்தி

 • ஆசிய ஸ்குவாஷ் போட்டியில் செளரவ் கோஷல், ரமீத் டாண்டன், அபய்சிங் அடங்கிய இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது
  • இந்திய அணி தங்கம் வெல்லது இதுவே முதன் முறையாகும்.

முக்கிய தினம்

 • உலக சுனாமி விழிப்புணர்வு தினம் – 2022
  • கருப்பொருள் : “Early Warning and Early Action Before Every Tsunami.”
  • 2015-ல் ஐ.நா. சபை சுனாமி விழிப்புணர்வு தினத்தை அறிவித்தது

Nov 3 – Current Affairs | Nov 4 – Current Affairs

 

Leave a Comment