Daily Current Affairs
Here we have updated 06th January 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competative exams like TNPSC, TRB and Police Exams.
தமிழக செய்தி
- தமிழகத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6.20 கோடியாக உயர்ந்துள்ளது. ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் என தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
- மொத்த வாக்காளர்கள் – 6,20,41,179
- பெண் வாக்காளர்கள் – 3,15,43,286
- ஆண் வாக்காளர்கள் – 3,04,89,866
- மூன்றாம் பாலினத்தவர் – 8,027
தேசிய செய்தி
- ஜனவரி 05-06 வரை மத்திய ஜல்சக்தி அமைச்சகம் சார்பில் மத்தியபிரதேச மாநிலம் போபாலில் மாநில நீர்வளத்துறை அமைச்சர்களின் முதலாவது தேசிய மாநாடு நடைபெறுகிறது.
- மத்திய ஜல்சக்தி அமைச்சகம் – 2019
- புதிய நாடாளுமன்றத்தின் நுழைவின்போது பயன்படுத்துவதற்காக எம்.பி.களுக்கு “ஸ்மார் கார்டு” அடிப்படையிலான புதிய அடையாள அட்டைகள் தயாரிக்கும் பணியை மக்கள் தலைமைச் செயலகம் தொடங்கியுள்ளது.
- சமுத்ரயான் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டில் 3 ஆய்வாளர்களை கடலில் 500மீ ஆழத்துக்குள் அனுப்பி ஆய்வு நடத்த இந்தியா திட்டமிட்டுள்ளது.
- பார்வையற்றோருக்கான பிரெய்லி மாதிரி மின் கட்டணத்தை BSES அறிமுகப்படுத்தி உள்ளது.
- இந்திய ரயில்வேயின் வாரணாசி கான்ட் ரயில் நிலையத்திற்கு FSSAI சரியான உணவு நிலையம் என்ற விருதினை அளித்துள்ளது.
முக்கிய தினம்
- உலக போர் அனாதை தினம்