Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 6th March 2023

Daily Current Affairs

Here we have updated 6th March 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

தமிழகச் செய்தி

  • சென்னை கிண்டி பாம்பு பண்ணையில் இருந்து 10 கங்கை நீர் (கரியால்) முதலைகள் குஜராத்தின் ஜாம் நகரின் கீரின்ஸ் விலங்கியல் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்திற்கு விரைவில் அனுப்பபட உள்ளன.
    • சென்னை பாம்புப் பண்ணை அறக்கடளை சார்பில் 1972-ஆம் ஆண்டு கிண்டியில் பாம்புப் பண்ணை தொடங்கப்பட்டது.
    • இம்முதலைகள் வட இந்தியா, நேபாளம், வங்கதேசம் ஆகிய இடங்களில் இருக்கும் நதிகளில் மட்டும் காணப்படுகிறது.
    • அதிகபட்சமாக 6மீ நீளம் வளரக்கூடியவை.
    • ஒடிசா மாநில உயிரியில் பூங்காவிலிருந்து 1993-ல் சென்னை பாம்பு பண்ணைக்கு முதலைகள் கொண்டு வரப்பட்டது.
  • மார்ச் 6-ல் நடைபெறும் தோள்சீலை பேராட்டத்தின் 200வது ஆண்டு நிறைவு விழாவில் பங்கேற்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கன்னியாகுமாரி வருகின்றார்
    • இவ்விழாவில் கேரள முதல்வர் பினராயி விஜயனும் கலந்து கொள்கிறார்.
    • இந்த பானை ஓடுகளில் குவிரன் ஆதன், ஆதன் போன்ற தனி நபர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
    • கீழடியில் கிடைக்கப் பெற்ற பொருள்கள் நகர நாகரிகத்துக்கான கூறுகளை வெளிப்படுத்தியுள்ளன.
  • மார்ச் 5-12 வரை கோவை வ.உ.சி மைதானத்தில் தேசிய அளவிலான மகளிர் சுயஉதவிக் குழு உற்பத்தி பொருள்களின் சாரஸ் கண்காட்சி நடைபெறுகிறது.
  • மார்ச் 10-ல் 1,000 இடங்களில் காய்ச்சலுக்கான சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
    • இன்ஃப்ளூயன்ஸா-ஏ வகை வைரஸ் பரவலே காய்ச்சலுக்கு காரணம் என மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது.
  • காய்ச்சல் பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் நடமாடும் மருத்துவக் குழுக்களை அனுப்ப அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குநர் உத்தரவு இட்டுள்ளார்.
    • இன்ஃப்ளூயன்ஸா-ஏ வகை தொற்று 50%பேருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • ஆர்எஸ்வி வைரஸ் தாக்க பாதிப்பு 37.5%பேருக்கு இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
  • “கள ஆய்வில் முதல்வர்” என்ற திட்டத்தின் கீழ் மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை, தேனி மாவட்டங்களின் காவல்துறை உயர் அலுவலர்களுடனான சட்டம்-ஒழுங்கு தொடர்பான ஆலோசனை கூட்டம் மதுரை ஆட்சியர் அலுவகலத்தில் நடைபெற்றுள்ளது.
    • கள ஆய்வில் முதல்வர் – 01.02.2023
  • பொதுப்பெயர் கொண்ட மருந்துகளையே (ஜென்ரிக் மருந்துகள்) பரிந்துரை செய்ய வேண்டும் என்று மருத்துவர்களை ஆளுநர் ஆர்.என்.ரவி கேட்டுக் கொண்டார்.
    • பிரதமரின் மக்கள் மருந்தகத் திட்டதின் 5வது ஆண்டு திட்டத் தொடக்க தினத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.
    • பொதுமக்களுக்கு மலிவு விலையில் மருந்துகள் கிடைக்கும் வகையில் நாடு முழுவதும் 9 ஆயிரம் மலிவு விலை மக்கள் மருந்தகங்கள் தொடங்கபட்டுள்ளன.
  • தமிழகம் முழுவதும் குடும்ப அட்டைகள் தாயரிக்கும் பணிகள், தனியாரிடமிருந்து மத்திய அரசின் தேசிய தகவலியல் மையத்திடம் அளிக்கப்பட உள்ளது.
    • தமிழகத்தில் 2 கோடியே 23 லட்சத்திற்கு அதிகமான குடும்ப அட்டைகள் புழக்கத்தில் உள்ளன.
    • இந்த அட்டைகள் மூலம் மாநிலத்தில் 6,99,40,958-க்கும் மேலானோர்கள் பயன்பெறுகிறார்கள்.
    • இதற்கான இணையதளம் – tnpds.gov.in
    • தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் – 1972ல் உருவாக்கப்பட்டது.

தேசிய செய்தி

  • மார்ச் 5-ல் ஒலியின் வேகத்தை விட அதிகமான வேகத்தில் செல்லும் பிரமோஸ் ஏவுகணையை இந்திய கடற்படை அரபிக்கடலில் சோதித்துள்ளது.
    • இந்திய-ரஷ்ய கூட்டுத் தாயரிப்பில் உருவாக்கப்பட்டது.
    • ஒலியின் வேகத்தை விட மூன்று மடங்கு வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது.
  • இந்திய சிறுநீரகவியல் மருத்துவர்கள் சங்கத்தின் (ஐஎஸ்என்) தென்னிந்திய தலைவராக மருத்துவர் செளந்தரராஜன் தேர்வானார்.

உலகச் செய்தி

  • மார்ச் 5-ல் உலகின் பெருங்கடல்கள் மற்றும் அதன் பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாக்கும் உடன்படிக்கையை ஐ.நா. உறுப்பு நாடுகள் மேற்கொண்டுள்ளன.
    • நியூயார்க் நகரில் நடைபெற்ற இவ் உடன்படிக்கையில் இந்தியா உட்பட 200 உறுப்பு நாடுகள் கையொப்பம் இட்டுள்ளன.
    • 2030-ம் ஆண்டுக்குள் பெருங்கடல்களின் 30% பாதிப்பு பாதுகாக்கப்பட்ட பகுதியாக மாற்றப்படும்.
  • பாதுகாப்புத்துறைக்கு அதிக நிதி ஒதுக்கும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா ரூ.66.67லட்சம் கோடி (816பில்லியன் டாலர்கள்) ஒதுக்கீடு செய்து முதலிடத்தை பெற்றுள்ளது.
    • அதற்கு அடுத்தபடியாக சீனாஉள்ளது.
    • இந்தியாவை விட சீனா மூன்று மடங்கு அதிகமாக ஒதுக்கீடு செய்துள்ளது.
    • இந்தியா ஒதுக்கீடு செய்த பட்ஜெட் ரூ.5.94 லட்சம் கோடி
  • இந்தியாவுக்கு அதிக அளவில் கச்சா எண்ணெய் வழங்கும் நாடுகள் பட்டியலில் ரஷியா 5வது மாதமாக தொடர்ந்து முதலிடம் பிடித்துள்ளது.

விளையாட்டுச் செய்தி

  • இந்திய மகளிர் டென்னிஸ் ஜாம்பவான் சானியா மிர்ஸா டென்னிஸிலிருந்து ஓய்வு பெற்றார்.
    • இவர் தான் தொடங்கிய ஹைதரபாத் லால்பகதூர் சாஸ்திரி மைதானத்திலே தனது டென்னிஸ் வாழ்க்கையை நிறைவு செய்தார்.
  • சவுதி அரேபிய தலைநகர் ரியாதில் நடைபெற்ற சந்தோஷ் கோப்பைக்கான தேசிய கால்பந்து சாம்பியன் போட்டியின் இறுதி ஆட்டத்தில் கர்நாடாக அணி சாம்பியன் பட்டம் வென்றது.
    •  54 ஆண்டுகளுக்கு பிறகு கர்நாடக அணி சாம்பியன் பட்டம் வென்றது.
    • முதன் முறையாக வெளிநாட்டில் சந்தோஷ் கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்றுள்ளது.
  • கோவாவில் நடைபெற்ற உலக கண்டென்டர் (டபிள்யுடிடி) டேபிள் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் சீனா சாம்பியன் பட்டம் வென்றது.

Mar 04 Current Affairs  |  Mar 05 Current Affairs

Leave a Comment