Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 6th November 2022

Daily Current Affairs

தமிழக செய்தி

  • அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகிலுள்ள அணைக்குடம் கிராமத்தில் ஏரிக்கரையில் துணி துவைப்பதற்காக பயன்படுத்தப்பட்ட கல்லில் ஒரு பகுதி குத்துவிளக்கு போன்ற குறியீடும், அதன் அருகில் மற்றொரு குறியீடும் பொறிக்கப்பட்ட வரலாற்று குறியீடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தேசிய செய்தி

  • சபரிமலைக்கு நடைபயணமாக வரும் அய்யப்ப பக்தர்களை வனவிலங்களிடம் இருந்து பாதுகாக்கவும் மற்றும் பக்தர்களின் வசதிக்காக புதிய செல்போன் செயலியை உருவாக்க கேரள அரசு திட்டமிட்டுள்ளது.
  • நவம்பர் 5 மற்றும் 6 மாலையில் கர்தவ்யா பாதை மற்றும் இந்தியா கேட்டில் நவீன இந்திய சமுதாய தந்தையான ராஜா ராம்மோகன் ராயின் வாழ்க்கை பற்றிய நாட்டிய நாடகத்தினை ஒளிபரப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • தலைப்பு : யுக்புருஷ் ராஜா ராம் மோகன் ராய்
    • கருப்பொருள் : நாரி சம்மன்
  • டிசம்பர் 1 முதல் மங்களுர் விமான நிலையப் பெயர் “மங்களூரு சர்வதேச விமான நிலையம்” என பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.
    • மங்களூர் நகரத்தின் பெயர் “மங்களூரு” என மாற்றப்பட்டதன் காரணத்தினால் விமான நிலையத்திற்கும் பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.
  • நவம்பர் 5-ல் இமாச்சல பிரதேசம் கின்னவர் மாவட்த்தின் கல்பாவில் வசித்து வந்த சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளரான மாஸ்டர் ஷியாம் நேகி (106 வயது) காலமானர்
    • தேர்தல் ஆணையம் நேகியின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து “ஜனநாயகத்தில் விதிவிலக்கான நம்பிக்கை கொண்ட மனிதர்” எனப் பாராட்டியுள்ளது.
  • பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்ட 200மீ நீளமுள்ள 132 ஆண்டு பழமையான சுரங்கப்பாதை மும்பை நகரில் பைகுல்லா பகுதியில் மருத்துவமையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உலக செய்தி

  • நவம் 7 முதல் 9 வரை 2022-ஆம் ஆண்டுக்கான மிகப்பெரிய பயணக்காட்சி கண்காட்சி லண்டனின் நடைபெறுகிறது.
    • கருப்பொருள் : “The Future of Travel Starts Now”
  • இண்டிகோ நிறுவனம் தினசரி புறப்பாடுகளின் அடிப்படையில் 50% அதிகமான சந்தைப் பங்கை கொண்ட உலகின் ஏழாவது நிறுவனமாக மாறியுள்ளது.

முக்கிய தினம்

  • போர் மற்றும் ஆயுத மோதலில் சுற்றுச் சூழலை சுரண்டுவரை தடுக்கும் சர்வதேச தினம்

Nov 4 – Current Affairs | Nov 5 – Current Affairs

 

Leave a Comment