Daily Current Affairs
Here we have updated 06th December 2022 current affairs notes. This notes will helpful for those who are preparing competative exams like TNPSC, TRB and Police Exams.
தமிழக செய்தி
- வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் தமிழ்நாட்டில் “அயலகத் தமிழர் வாரியம்” அமைக்கப்படும் என சிறுபான்மையினர் நலன் மற்றம் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்பிறப்பித்துள்ளது.
- சிறுபான்மையினர் நலன் மற்றம் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் – செஞ்சி K.S.மஸ்தான்
- டிசம்பர் 7ல் தமிழகத்தில் “அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம்” கீழ் 2-ம் கட்டாமாக கூரை, ஓலை போன்ற நிலையற்ற தன்மை கொண்டுள்ள வீடுகளில் வசிப்போர் விவரங்கள் கணக்கெடுப்பு தொடங்க உள்ளது.
- கத்தார் பிஃபா கால்பந்து போட்டிக்காக கத்தார் தமிழர்கள் கலாச்சார பேரவை உருவாக்கிய “குன்ஷாகிரான்” என்னும் தீம்பாடலை கத்தார் நாடு தனது தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பி கெளரவம் வழங்கியுள்ளது.
- இசையமைப்பாளர் – சாம் ஜோசப்
- பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டவர்களை மீட்க தமிழகத்தில் “ஆப்ரேஷன் புது வாழ்வு” என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
- உயர்நீதிமன்ற மதுரை கிளையில் லலிதா என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- சோப்தார் பணியில் நியமிக்கப்பட்ட முதல் பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார்
தேசிய செய்தி
- குஜராத் இறுதி கட்டத் தேர்தலில் 61% வாக்கு பதிவாகியுள்ளன.
- உலகளாவிய விமானப்போக்குவரத்து பாதுகாப்பு தரவரிசையில் 187 நாடுகளில் இந்தியா 85.49% புள்ளிகளுடன் 48வது இடம் பிடித்துள்ளது.
- முதலிடம் – சிங்கப்பூர்
- இரண்டாவது இடம் – ஐக்கிய அரபு அமீரம்
- மூன்றாவது இடம் – தென்கொரியா
- இந்தியா தலைமையில் நடைபெறும் 2023-ல் ஜி-20 மாநாட்டிற்கான வியூகம் அமைக்கும் அனைத்துக் கட்சி கூட்டம் தில்லியில் நடைபெற்றது.
- இலங்கை பால் பொருள்களுக்கு இறக்குமதியை சார்ந்திருப்பதை குறைத்து அந்நாட்டின் பால் தொழில் வளம் மற்றும் பால் உற்பத்தியை அதிகரிக்க இந்தியா தொழில் நுட்ப உதவிகளை வழங்க உள்ளதாக இலங்கை அதிபர் தெரிவித்துள்ளார்.
- நாட்டின் ஆறாவது வந்தேபாரத் இரயில் பிலாஸ்பூர் (சத்தீஸ்கர்) – நாக்பூர் (மகராஷ்டிரா) வழித்தடங்களுக்கு இடையே டிசம்பர் 11-ல் தொடங்கவுள்ளது
- 2022ம் ஆண்டில் வெளிநாடுகளில் இருந்து தாயகத்திற்கு அதிக பணம் அனுப்புவதில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளதென உலக வங்கி அறிக்கை தெரிவித்துள்ளது.
- இந்தியா, வங்கதேசத்தின் அண்டைப் பகுதிகளுக்கு இடையேயான கலாச்சார உறவுகளை கொண்டாடும் “சில்ஹெட்-சில்சார் திருவிழா” அசாமின் பராக் பள்ளதாக்கில் நடைபெறுகிறது.
- இவ்விழாவினை வடக்கு பிராந்திய மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி மற்றும் வங்கதேச வெளியுறவு அமைசர் A.K. அப்துல் மொமன் டிசம்பர் 2-ல் தொடங்கி வைத்தார்.
- “ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு” வரிசையில் கீழ் “ஒரு மாவட்டம் ஒரு விளையாட்டு” திட்டத்தினை உத்திரபிரதேசம் முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தார்.
- நவம்பர் 29 முதல் டிசம்பர்1 வரை நடைபெற்ற உலகாளாவிய வங்கி உச்சிமாநாட்டில் “Banker’s Bank of the Year Award – 2022” ஐ கனரா வங்கி பெற்றுள்ளது.
உலக செய்தி
- 2022-ம் ஆண்டுக்கான “மிஸ் எர்த்” போட்டியில் தென் கொரியாவின் “மீனா சூ சோய்” முதலிடம் பிடித்துள்ளார்.
- 2வது இடம் – ஷெரீதான் மோர்ட்லொக் (மிஸ் எர்த் எயார்) ஆஸ்திரேலியா
- 3வது இடம் – நதீன் அயூப் மிஸ் (எர்த் வோட்டர்) பாலஸ்தீனியம்
விளையாட்டு செய்தி
- பாட்மின்டன் ஆசியக் கோப்பை போட்டியில் மகளிர் 17வயதுப் பிரிவில் உனாட்டி ஹூடா இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.
- தாய்லாந்து, நாதபுரியில் நடைபெறுகிறது.
- மகளிர் 17வயது பிரிவில் முதல் முறையாக இறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற இந்தியர் ஆவார்
முக்கிய தினம்
- அம்பேத்கரின் மஹாபரிநிர்வான் திவாஸ் (டிசம்பர் 6)