Daily Current Affairs
Here we have updated 07th January 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competative exams like TNPSC, TRB and Police Exams.
தமிழக செய்தி
- தமிழகத்தினை சேர்ந்த 16 வயதுடைய பிரனேஷ் இந்தியாவின் 79வது கிராண்ட் மாஸ்டராக உருவெடுத்துள்ளார்.
- தமிழகத்தில் தருமபுரி மாவட்டத்தின் காரிமங்கலத்தில் முதன் முறையாக குற்றவாளிகளை எளிதில் அடையாளம் காண “அதிநவீன டிரோன் கேமரா” அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
- இதன் உதவியால் 7 கிலோ மீட்டர் தூரம் வரை போக்குவரத்து நெரிசல் விபத்துகளை கண்டுபிடிக்க முடியும்
தேசிய செய்தி
- மேற்கு வங்க அரசு பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவுத் திட்டத்தில் ஜனவரி முதல் ஏப்ரல் வரை கோழிக்கறி, பழங்கள் வழங்க முடிவெடுத்துள்ளது.
- பஞ்சாபின் மொகாலியிலுள்ள தேசிய வேளாண்-உணவு உயிரி தொழில் நுட்ப நிறுவனத்தில் (NABI) தேசிய ஜீனோம் எடிட்டிங் & பயிற்சி மையத்தினை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் திறந்து வைத்தார்.
- துல்லியமான இந்திய நேரத்தினை தொலைத்தொடர்பு நிறுவனங்கள், இணையதள சேவை வழங்கும் நிறுவனங்கள் உள்ளிட்டவை பயன்படுத்துவதை கட்டாயமாக்குவதற்கான கொள்கை வெளியிடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
- பிரிட்டனின் லண்டன் நகரில் உள்ள கீரின்வீச் கோடுகளை அடிப்படையாக கொண்டே உலக நேரம் கணக்கிடப்படுகிறது.
- “ஆபரேசனல் டிஸ்ட்டிரிக்” திட்டத்தின் படி ஆஸ்பிரேசனல் பிளாக்ஸ் திட்டத்தினை மத்திய அரசு தொடங்க திட்டம் வகுத்துளள்து.
- BSNL நிறுவனம் தனது 5G சேவையை 2024-ல் வழங்க முடிவு செய்துள்ளது.
- BSNL – Bharat Sanchar Nigam Limited
- அனைவரையும் வரவேற்கும் மற்றும் உள்ளடக்கிய உலகத்தினை உருவாக்க நாம் எவ்வாறு ஒன்றிணைவது என்பதை வெளிப்படும் விதமாக கோவாவில் ஊதா விழா நடைபெறுகிறது.
- ஜனவரி 13ல் வாரணாசி-திப்ரூகர் இடையிலான “கங்கா விலாஸ்” நதி சுற்றலா கப்பலினை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
- ஒடிசாவின் ரூர்கேலாவில் 261கோடி செலவில் அமைக்கப்பட்ட பிர்சா முண்டா நவீன ஹாக்கி மைதானத்தினை ஒடிசா முதல்வர் திறந்து வைத்துள்ளார்
- ஒடிசா முதல்வர் – நவீன் பட்நாயக்
- கேரள மாநில வரலாறு மற்றும் பாரம்பரிய அருங்காட்சியகத்துடன் இணைந்து ஆவணக் காப்பகத்துறையால் உலகின் முதல் பனை ஓலை கையெழுத்து பிரதி அருங்காட்சியம் கேரளாவில் திறக்கபட்டுள்ளது.
- 2023 செப்டம்பர் மாதத்திற்கு பிறகு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
- ஜனவரி 8-14வரை குஜராத் சர்வதேச காத்தாடி விழா-2023 கொண்டாடப்படுகிறது.
முக்கிய தினம்
- ஸ்டார்ட்அப் இந்தியா இன்னோவேஷன் வாரம் – 2023.