“Daily Current Affairs
Here we have updated 07th February 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
தமிழகச் செய்தி
- பிப்ரவரி 8-6 வரை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக பகுதியில் வனஉயிரினக் கணக்கெடுப்பு நடைபெற உள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேசிய செய்தி
- அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல் நகரில் நடைபெற்ற 65வது கிராம விருது வழங்கும் விழாவில் இந்திய இசையமைப்பாளர் ரிக்கி கேஜ் 3வது முறையாக கிராமி விருதினை வென்றுள்ளார்
- கிராமி விருது 1959முதல் வழங்கப்பட்டு வருகிறது.
- 2015, 2022ல் விருதுகளை வென்றுள்ளார்
- டிவைன் டைட்ஸ் வித் ராக் – லெஜெண்ட் கோப்லேண்ட் என்ற நூலிற்காக வழங்கப்பட்டது.
- அதிகமுறை இவ்விருதினை வென்று சாதனை படைத்துள்ளார்.
- கடந்த மக்களவை (2019) தேர்தலில் 30 கோடி பேர் வாக்குகளிவில்லை என தேர்தல் ஆணையம் அறிவிப்பு.
- 91.20 கோடி வாக்காளர்களில் 67.40% மட்டுமே வாக்களித்துள்ளனர்
- தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் செயல்படும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு நிதி குறைப்பு
- பிரதமர் ஆவாஸ் யோஜனா, ஜல்ஜீவன் மிஷன் திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்படுள்ளதன் காரணமாக நிதி குறைக்கப்பட்டு உள்ளது மத்திய அரசு அறிவிப்பு.
- ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் “ராஜஸ்தான் மஹாகேல்” விளையாட்டு விழா தொடக்கம்.
- மத்திய பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் விமானவியல் நிறுவனம், தும்கூரில் 615 ஏக்கர் பரப்பளவில் அமைத்துள்ள ஹெலிக்காப்டர் உற்பத்தி தொழிற்சாலை நாட்டிற்கு அர்பணிப்பு.
- தமிழக அரசு பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி வழங்க ரூ.18.38 கோடியை “ராணி லட்சுமிபாய் தற்காப்புக் கலைபயிற்சிக் திட்டம்” கீழ் மத்திய கல்வி அமைச்சகம் ஒதுக்கீடு செய்துள்ளது.
- உச்சநீதிமன்றத்தில் 5 புதிய நீதிபதிகள் தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
- பங்கஜ் மித்தல் – ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி
- சஞ்சய் கரோல் – பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி
- பி.வி.சஞ்சய் குமார் – மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி
- அசானூதீன் – பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி
- மனோஜ் மிஸ்ரா – அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ஆகிய ஐவரும் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றுள்ளனர்.
- மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு கொல்கத்தாவின் செயிண்ட் சேவியர்ஸ் பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.
- சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை – ரூ.2.70 லட்சம் கோடி
- இரயில்வே துறை – ரூ.2.40 லட்சம் கோடி
- நுகர்வோர் விவகாரம், உணவு & பொது விநியோகத் துறை – ரூ.2.06 லட்சம் கோடி
- பிப்ரவரி 10-ல் புவிக் கண்காணிப்பு செயற்கைக் கோளான இஓஎஸ்-07உடன் எஸ்எஸ்எல்வி – டி2 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் ஏவப்படுகிறது.
உலகச் செய்தி
- துருக்கி மற்றும் சிரியா பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2,600க்கு மேற்பட்டோர் இறந்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளன.
- நிலநடுக்கம் ரிக்கெட் அளவுகளில் 7.8 அலகுகளாக பதிவாகியுள்ளது.
- அமிலாய்டோசிஸ்” என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் (79) காலமானார்.
- 1964-ல் பாகிஸ்தான் ராணுவத்தில் சேர்ந்து 1965, 1971 பாகிஸ்தான் இந்திய போர்களில் பங்கேற்றவர்.
- 2001 முதல் 2008 வரை பாகிஸ்தான் அதிபராக வகித்து 2010 அனைத்து பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியை உருவாக்கினார்.
- கார்கில் போருக்கு காரணமானவரும், 1999 லாகூர் அமைதி ஒப்பந்தத்திற்கு காரணமானவர்.
விளையாட்டுச் செய்தி
- அமெரிக்காவில் நடைபெற்ற பாஸ்டன் நியூ பேலன்ஸ் இன்டோர் கிராண்ட் ப்ரீ தடகள போட்டியில் இந்தியாவின் தேஜஸ்வின் சங்கர் தங்கம் வென்றுள்ளார்.
- பிப்ரவரி 10-26 வரை ஐசிசி மகளிர் டி20 உலககோப்பை கிரிக்கெட் போட்டி தென்னாப்பிரிக்காவில் நடைபெற உள்ளது.