Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 7th March 2023

Daily Current Affairs

Here we have updated 7th March 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

தமிழகச் செய்தி

  • மார்ச் 6ல் “கள ஆய்வில் முதல்வர்” என்ற திட்டத்தின் கீழ் மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட ஆட்சியர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
    • கிராமப்புற மக்களின் வருமானம் அதிகரிக்கவும், வாழ்வாதாரத்தை உயர்த்தவும் செயல்படுத்தப்பட்டு வரும்  திட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது
    • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த திட்டம் ஆகியவற்றில் நல்ல முன்னேற்றம் ஏற்பட வேண்டும் எனவும் கடந்த ஆண்டுக்கான அண்ணா மறுமலர்ச்சித் திட்டப் பணிகள் அதிக நிலுவையில் உள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டது.
    • கள ஆய்வில் முதல்வர் – 01.02.2023
    • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் – 02.10.2009
      • 25.05.2005 முதல் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் என்ற பெயரில் கொண்டு வரப்பட்டது. 2009 காந்தியடிகள் பிறந்த நாளான (02.10.2009) அன்று மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் என பெயர் மாற்றப்பட்டது
    • கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த திட்டம் – 23.5.2022

தேசிய செய்தி

  • திரிபுராவின் முதல்வராக மாணிக் சாஹா மீண்டும் தேர்வானார்
    • பிப்ரவரி 16-.ல் 60 தொகுதி கொண்ட திரிபுராவில் நடைபெற்ற தேர்தலி வெற்றி பெற்றதை தொடர்ந்து திரிராவின் ஆளுநர் சத்யதேவ் நாராயண் ஆர்யாவிடம் ஆட்சியமைக்க உரிமை கோரினார்
  • மேகாலய முதல்வராகிறார் கான்ராட் சங்கமா
  • மார்ச்-8ல் உலகமெங்கும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.
    • 1975-ம் ஆண்டை ஐ.நா. சபை சர்வதேச பெண்கள் ஆண்டுஎன அறிவித்தது.
    • 1977-ம் ஆண்டை முதல் உலகம் முழுவதும் மார்ச் 8-ம் நாள் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
  • உலகில் உள்ள 193 நாடுகளில் நாடாளுமன்றங்களில் பெண்கள் இடம் பெற்று இருக்கும் எண்ணிக்கையில் நமது நாடு 148வது இடத்தை பிடித்துள்ளது என சர்வதேச நாடாளுமன்றங்களின் கூட்டமைப்பு (இன்டர் பார்லிமென்டரி யூனியன்) அறிவித்துள்ளது.
    • இந்திய நாடாளுமன்றத்தின் மக்களைவையின் 542 உறுப்பினர்களில் தற்போது 78 உறுப்பினர்கள் உள்ளன.
    • சுதந்திரதிற்கு பிறகு முதல் மக்களவையில் பெண்கள் பிரதிநிதித்துவம் 24-ஆக இருந்தது.
    • கடந்த ஆண்டுகளில் நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் பெண்களுக்கான 33% இட ஒதுக்கீடு கொண்டு வருவதற்கான மசோதா மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
    • 1992-ல் அரசியல் சாசனத்தின் 73வது சட்டத்திருத்தின்படி பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளின் பொறுப்புகளில் தாழ்த்தப்பட்ட மலைவாழ் மூன்றில் ஒரு பங்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
    • பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும், பாரனில் பெண்கள் நடத்த வந்தோம் என்ற மகாகவி பாரதியார் கனவு கண்டுள்ளார்.
  • சுகாதாரம்-மருத்துவ ஆராய்ச்சி என்ற தலைப்பில் தில்லியில் நடைபெற்ற பட்ஜெட் பிந்தைய கருத்தரங்கில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
    • “ஒரே பூமி, ஓரே சுகாதாரம்” என்ற கொள்கையை முன்னெடுத்து இந்திய செயல்பட்டு வருகிறது என கூறியுள்ளார்.
    • “ஆயுஷ்மான் பாரத் சுகாதாரக் காப்பீட்டுத் திட்டத்தின்” மூலமாக மருத்துவ சிகிச்சையை மலிமாவன மாற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்கிறது.
    • நாடு முழுவதும் உள்ள 9,000 மக்கள் மருந்தகங்கள் வாயிலாக மக்களுக்கு மருந்துகள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது.
    • இ-சஞ்சீவினி வசதி மூலமாக 10 கோடிக்கும் அதிகமானோர் தொலைநிலை மருத்துவ ஆலேசனைகளைப் பெற்றுள்ளன.
    • தூய்மை இந்தியா, உஜ்வலா, ஜல்ஜீவன், போஷன் உள்ளிட்ட பல்வேறு சுகாதாரம் சார்ந்த திட்டங்களும் அரசால் செயல்படுதப்பட்டு வருகிறது.

விளையாட்டுச் செய்தி

  • மார்ச் 25-முதல் சீனியர் மகளிருக்கான 27வது தேசி கால்பந்து போட்டி தொடங்குகிறது.
  • எஃப் 1 கார்பந்தயத்தில் நடப்பாண்டு சீசனின் முதல் பந்தயமான பஹ்ரைன் கிராண்ட் ப்ரீயில், ரெட் புல் டிரைவரும், நெதர்லாந்து  வீரருமான மேக்ஸ் வெர்ஸ் முதலிடம் பிடித்ததார்.

Mar 05 Current Affairs  |  Mar 06 Current Affairs

Leave a Comment