Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 8th March 2023

Daily Current Affairs

Here we have updated 8th March 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

தமிழகச் செய்தி

 • மார்ச் 7-ல் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள திமுக அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.
 • சர்வதேச மகளிர் தினத்தை (மார்ச்-8) முன்னிட்டு இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் சென்னை மகளிர் பிரிவு சார்பில் பெண் சாதனையாளர்களுக்கான விருது வழங்கும் விழாவில் மாநில நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டார்.
  • நாடு முமுவதும் உற்பத்தி தொழில்களில் ஈடுபட்டுள்ள பெண்களில் 42% பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என தெரிவித்துள்ளார்.
 • மூளை ரத்த நாளத்தில் ஏற்பட்ட ரத்த உறைவை நுண்துளை சிகிச்சை மூலம் அகற்றி, பக்கவாத பாதிப்பிலிருந்து இளைஞர் ஒருவரை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை மருத்துவர்கள் மீட்டுள்ளனர்.
  • “மெக்கானிக்கல் த்ரோம்பேக்டமி” எனப்படும் மூளை ரத்த நாளத்தில் உறைந்த ரத்தத்தினை அகற்றும் சிகிச்சையை அவருக்கு அளித்துள்ளனர்.
 • மார்ச் 7-ல் “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ், போட்டித் தேர்வுகள் பிரிவை தமிழகம் முழுவதும் உருவாக்கம் திட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
  • நான் முதல்வன் திட்டம் (2022 மார்ச் 1)

தேசிய செய்தி

 • மேகாலய முதல்வராக தேசிய மக்கள் கட்சித் தலைவர் கான்ராட் சங்மாவும், நாகலாந்து முதல்வராக தேசிய முற்போக்கு கட்சியின் தலைவர் நேபியூ ரியோவும் பதவி ஏற்றனர்.
  • நேபியூ ரியோ பதவி ஏற்பது 5வது முறையாகும்.
 • மார்ச் 8ல் திரிபுராவில் மாணிக் சாஹா தலைமையிலான அரசு பதவியேற்க உள்ளது.
 • இந்தியா விமானப்படையில் தாக்குதல் பிரிவுக்கு ஷாலிஸா தாமி என்ற பெண் அதிகாரியாக முதன் முதலாக நியமிக்கப்பட்டுள்ளார்
  • மேற்கு படைப் பிரிவுக்கான முதல் பெண் தளபதியாக நியமிக்கபட்டுள்ளார்.
  • இவர் இந்திய விமானப்படையின் முதல் பெண் விமான ஓட்டி பயிற்சியாளர்
 • இந்திய விமானப் படைக்கு 70 பயிற்சி விமானங்களை வாங்க ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்த்துடன் (ஹெச்ஏஎல்) ரூ.6,8000 கோடிக்கான ஒப்பந்தத்தை பாதுகாப்பு அமைச்சகம் மேற்கொண்டுள்ளது.
  • மேலும் ரூ.3,100 கோடியில் மூன்று பயிற்சி போர்க்கப்பல்களை வாங்கவும் “எல் அண்ட் டி” நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை பாதுகாப்பு அமைச்சகம் மேற்கொண்டுள்ளது.
  • எச்டிடி-40 வகை 70 பயிற்சி விமானங்களை 6 ஆண்டுகளுக்கு ஹெச்ஏஎல் நிறுவனமும், 2026 முதல் பயிற்சி போர் கப்பல்களை எல் அண்ட் டி நிறுவனமும் வழங்கும் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
  • இவ்வகை புதிய கப்பல்கள் சென்னை அருகே உள்ள காட்டுபள்ளி துறை முகத்தில் தயாரிக்கப்பட உள்ளன.
 • தனது மின்சாரத் தேவைக்கு முற்றிலும் சூரிய மின்சக்தியை பயன்படுத்தும் கிராமமாக ஒடிஸாவின் சுந்தர்கார் மாவட்டத்தில் உள்ள சகசாஹி கிராமம் திகழ்கிறது.
  • இக்கிராமத்தில் பழங்குடியினர் அதிகமாக வசிக்கின்றனர்.
 • நிலத்தில் இருந்து நடுத்தர தொலைவில் உள்ள வான் இலக்குகளை தாக்கி அழிக்கும் எம்ஆர்எஸ்ஏஎம் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
  • இந்தச் சோதனையை ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் போர்க் கப்பலிலிருந்து இந்திய கடற்படையினர் மேற்கொண்டனர்.
 • நாட்டில் அதிகபட்சமாக ஒடிசா மாநிலத்தில் 142 இடங்களில் காட்டுத் தீ சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன.
  • சிமிலிபால் தேசிய பூங்கா உள்ள மயூர்பஞ்ச் மாவட்டதில் அதிக எண்ணிக்கையிலான காட்டுத் தீ சம்பவகங்கள் பதிவாகியுள்ளன.
  • ஒடிசாவினை அடுத்து சத்தீஸ்கர் (58), ஆந்திரா (48), தெலுங்கானா (37), ஜார்க்கண்ட் மற்றும் கர்நாடகா (32), மகாராஷ்டிர (15) என பதிவாகியுள்ளது.

விளையாட்டுச் செய்தி

 • மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் 6வது உலகக்கோப்பை ஸ்கேட்டிங் போட்டி நடைபெற உள்ளது.
  • இப்போட்டிக்காக தேர்வாகி உள்ள 40 இந்திய வீராங்களைகளைக்கு திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டியில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

உலகச் செய்தி

 • 20 ஆண்டுகளுக்கு பிறகு ஜப்பான் உருவாக்கியுள்ள புதிய வரிசை ராக்கெட்டான ஹெச்3-ஐ முதல் முறையாக விண்ணில் செலுத்தும் முயற்சி தோல்வியடைந்தது.

முக்கிய தினம்

 • உலக மகளிர் தினம். (மார்ச் – 8)
  • கருப்பொருள் : “DigitALL : Innovation and technology for gender equality”

Mar 06 Current Affairs  |  Mar 07 Current Affairs

Leave a Comment