Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 08-09th February 2023

Daily Current Affairs

Here we have updated 08-09th February 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

தமிழகச் செய்தி

 • பிப்ரவரி 7-ல் செந்தமிழ் சொற்பிறப்பியில் அகரமுதலித் திட்ட இயக்குநரும், சொல்லாராய்ச்சி வல்லுநனருமான தேவநேயப் பாவணர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
 • சென்னையில் சால்மோனெல்லா டைஃபி மூலம் பரவும் டைபாய்டு காய்ச்சல் அதிகமாக பரவுகிறது.
 • திருவள்ளூர் மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைத்தார். இதனால் 1,04,347 மாணவிகள் பயன் பெறுவர்.
  • இத்திட்டத்தின்படி 6 முதல் 12 வரை படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டமாகும்.
  • இத்திட்டம் சென்னையில் 2022 செப்டம்பர் 5-ல் தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக 1,16,342 மாணவிகள் பயன் அடைந்துள்ளன.
 • சென்னை ஐஐடி சார்பில் தனிநபர், தொழில் முறை மேம்பாடு (Personal & Proposanel Development) என்னும் படிப்பு அறிமுகம் செய்யப்பட்டது.
 • சென்னை உள்பட 35 இடங்களில் வனத்தீ கட்டுப்பாட்டு மையங்கள் ஏற்படுத்தப்படும் என்ற தலைமைச் செயலார் வெ. இறையன்பு தெரிவித்துள்ளார்.
  • கடந்த 2022-ல் 1500 வனத்தீ நிகழ்வுகள் ஏற்பட்டுள்ளன. அவற்றில் 91% பெரிய அளவிலான தீ நிகழ்வுகள் 24 மணி நேரத்தில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
 • புதுமைப் பெண் திட்டத்தால் உயர்கல்வி மாணவர்கள் சேர்க்கை கடந்த ஆண்டை விட 27% அதிகரித்துள்ளது என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
  • இத்திட்டம் சமூக நலன், மகளிர் உரிமைத்துறை சார்பில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது

தேசிய செய்தி

 • நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள துருக்கி பகுதிகளுக்கு மீட்புப் பணிககளை மேற்கொள்ள இரு விமானங்களில் மீட்பு உபகரணங்கள், மருத்துவ குழுக்களை இந்தியா அனுப்பி வைத்துள்ளது.
 • மத்திய துணை ராணுவப் படைகளில் 83,000-க்கும் அதிகமான காலிபணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF), எல்லைப் பாதுகாப்புப் படை (BSF), மத்திய தொழிலக பாதுகாப்புப் படை (IDBB) சசஸ்திர சீமாபல் (SSB), இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை (IDBB) மற்றும் அஸ்ஸாம் ரைபிள் படை ஆகியவை இவற்றில் அடங்கும்.
 • அமெரிக்ககாவின் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள “உலகின் தலைசிறந்த மாணவர்” பட்டியலில் தொடர்ந்து 2-வது ஆண்டாக இந்திய வம்சாவளி மாணவி நடாஷா பெரியநாயகம் இடம் பெற்றுள்ளார்.
 • பெங்களூரில் நடைபெற்ற இந்திய எரிசக்தி வாரத்தில் இந்தியன் ஆயில் நிறுவனம் தயாரித்துள்ளபாலியெஸ்டர் (ஆர்-பெட்) மற்றும் பருத்தியால் தயாரிக்கபட்பட்ட சீருடைகளை பிரதமர் மோடி அறிமுகம் செய்துள்ளார்.
  • பிளாஸ்க் பாட்டிலிகளின் மறுசுழற்சியில் இந்த ஆடை உருவாக்கப்பட்டுள்ளது.
 • வங்கிகளுக்கான குறுகிய காலக் கடன்கள் மீதான வட்டிவிகிதத்தை (ரெப்போ ரேட்) இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) 0.25% உயர்த்தி 6.50%மாக நிர்ணயித்துள்ளது.
 • வாடகைத் தாய்க்கும், அவர் மூலம் பிறக்கும் குழந்தைக்கும் மரபணுரீதியாக தொடர்பில்லை என்று வாடகைத் தாய் சட்டம் கூறுவதாக மத்திய அரசு உச்சநீதி மன்றத்தில் தெரிவித்துள்ளது.
  • வாடகைத் தாய் ஒழுங்காற்று சட்டம் – 2021
  • இனபெருக்க உதவி தொழில் நுட்ப ஒழுங்காற்று சட்டம் – 2021 ஆகியவற்றின் சில பிரிவுகளுக்கு எதிராகவும் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

உலகச்செய்தி

 • துருக்கி, சிரியாவில் நிகழந்த நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 7,000-ஐ கடந்தது.
 • செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தளமான “சாட் ஜி.பி.டி”-க்கு போட்டியாக “பார்ட்” என்னும் தளத்தை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
  • சாட் ஜி.பி.டி – 2022 செப்டம்பரில் அறிமுகம் செய்யப்பட்டது.
 • விக்கிபீடியாவுக்கு விதிக்கப்பட்ட தடையை பாகிஸ்தான் விலக்கிக் கொண்டது.

விளையாட்டுச் செய்தி

 • பிப்ரவரி 8 முதல் சென்னையில் 21வது ஆசிய ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன் ஷிப் போட்டி நடைபெறுகிறது.
 • சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் பிஞ்ச் ஓய்வு.

Feb 05-06 Current Affairs  |  Feb 07 Current Affairs

Leave a Comment