Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 8th November 2022

Daily Current Affairs

தமிழக செய்தி

 • ஒன்பதாம் நூற்றாண்டைச் சார்ந்த 1000 ஆண்டுகளுக்கு முந்தைய சமண மத தீர்த்தங்களரரான மகாவீரரின் இரண்டு சிற்பங்கள் சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே கிள்ளக்குடி கிராமத்தில் கண்டுபிடிக்கப்படுள்ளது.
 • 2021 – தேசிய புளோரன்ஸ் நைட்டிங்கேல் விருது விருதுநகரை சார்ந்த செவிலியர்களான ஈ.மங்கம்மாள், எஸ்.செல்வி ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது
 • நவம்பர் 7-ல் 373 கோடியே 22 லட்சம் ரூபாய் மதீப்பிட்டில் உருவாக்கப்பட்ட 14 புதிய மின் நிலையங்களை தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.
  • 130 கோடியே 18 லட்சம் ரூபாய் மதீப்பிட்டில் அமைக்கப்பட உள்ள 8 புதிய 110 கி.வோ துணை மின் நிலையங்கள் அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

தேசிய செய்தி

 • பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் வகுப்பினர்க்கான 10% இட ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் நவம்பர் 7-ல் தீர்ப்பு அளித்துள்ளது.
  • அரசியல் அமைப்பு சட்டத்தின் 103-வது பிரிவில் ஜனவரி 8, 2019-ல் கொண்டு வந்த திருத்த மசோதாவிற்கு முன்னாள் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் (ஜனவரி 12, 2019) ஒப்புதல் அளித்துள்ளார்
 • இந்தியாவில் நவம்பர் 15-ல் பழங்குடியினர் தினம் (ஜன்ஜாதியா கெளரவ் திவாஸ்) கொண்டாடப்படுகிறது.
  • பிர்சா முண்டாவின் பிறந்த நாளான நவம்பர் 15-ஐ 2021-ல் “ஜன்ஜாதியா கெளரவ் திவாஸ்” தினமாக அறிவித்தது.
 • வேத கால கணக்கீட்டின் அடிப்படையில் “உலகின் முதல் வேதகடிகாரம்” மத்திய பிரதேசத்தின் உஜ்ஜியினியில் அமைக்கப்பட உள்ளது.
  • நாளின் 24 மணி நேரமும் முஹுரத்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
 • ஸ்ரீ கே.வி.காமத் RIL இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • Reliance Strategic Investment Limited (RSIL) இயக்குனராகவும், தலைவராகவும்  ஸ்ரீ கே.வி.காமத் நியமிக்கபட்டள்ளார்.
 •  Global System for Mobile Communication Association (GSMA) எனப்படும் உலகாளாவிய மொபைல் நெட்வொர்க் ஆபரேட்டர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உலகாளவிய அமைப்பு  பாரதி எர்டெல்லின் CEO கோபால் விட்டலை இரண்டு ஆண்டு காலத்திற்கு (2013 ஜனவரி 1 முதல்) துணைத் தலைவராக தேர்ந்தெடுத்துள்ளது.
 • நிலவின் இருண்ட மறுபக்கத்திற்கு இஸ்ரோவின் புதிய விண்கலத்தை ஜப்பான் விண்வெளி ஆய்வு மையத்துடன் இணைந்து அனுப்ப பேச்சுவார்த்தை நடைபெறுகிது.

உலக செய்தி

 • உலக வானிலை அமைப்பு (WMO – World Meteorological Organization) வெளியிட்டுள்ள நவம்பர் 2022 அறிக்கையில் 2015 முதல் 2022 வரையுள்ள எட்டு ஆண்டுகள் வெப்பமான எட்டு ஆண்டுகளாக பதிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளது.
  • தொழில்துறைக்கு முந்தைய (1850-1900) சராசரியை விட 2022-ம் ஆண்டு உலகளாவிய சராசரி வெப்பநிலை 1.15 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 • சீனா தற்போது புதிதாக விண்வெளியில் ஆராய்ச்சி மையத்தை அமைக்கவுள்ள  நிலையில் விண்வெளியில் வளர்ச்சி மற்றும் உடலியல் மாறுபாடு பற்றிய ஆராய்ச்சி நடத்தக் குரங்குகளை விண்வெளி மையத்திற்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது
 • 1,600 ஒளியாண்டுகள் தொலைவில் அமைய உள்ள சூரியனை விட 10 மடங்கு அதிகம் உள்ள கருந்துளை ஐரோப்பிய விண்வெளி கழகத்தின் கயியா விண்கலத்தின் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 • பிரெஞ்சு எழுத்தாளர் ரெனே நாபா “ஆசியாவின் அணுவாயுதமாக்கல்” (De La Nuclearisaion De I’Asie)என்ற தலைப்பில் பிரெஞ்சு மற்றும் ஆங்கிலத்தில் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.
  • பாகிஸ்தான் மற்றும் சீனாவின் இணைப்பால் ஏற்படும் அணுசக்தி அவசரநிலை மற்றும் அச்சுறுத்தல் குறி்த்து புத்தகம் விவரிக்கிறது.

விருதுகள்

 • நவம்பர் 7-ல் 2021 – தேசிய புளோரன்ஸ் நைட்டிங்கேல் விருதுகளை 51 உறுப்பினர்களுக்கு குடியரசுத்தலைவர் ஸ்ரீமதி திரெளபதி முர்மு வழங்கினார்.
  • செவிலியர்கள் & நர்சிங் தொழில் வல்லுநர்கள் சமுதாயத்திற்கு ஆற்றிய சேவைகளை பாராட்டும் வகையில் இவ்விருதுகள் வழங்கப்படுகிறது.
  • இவ்விருதுகள் 1973-ல் மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது.
 • நவம்பர் 9-ல் உத்தரகாண் கவுரப் சம்மான் விருது – 2022 வழங்கப்பட உள்ளது.
  • தேசிய பாதுகாப்பு ஆலோசகர் – அஜித்தோவர், கவிஞர் பிரசூன் ஜோஷி மற்றும் மூன்று நபர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

விளையாட்டு செய்தி

 • ஐசிசியின் அக்டோபர் மாத சிறந்த வீரராக விராட்கோலி தேர்வானார்.
  • அக்டோபர் மாத சிறந்த வீராங்கனையாக நிடா டார் (பாகிஸ்தான்)

முக்கிய தினம்

 • உலக கதிரியக்க தினம்
  • 1895-ல் X-கதிர்கள் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.
 • தமிழ் அகராதியல் நாள் விழா
  • “தமிழ் அகராதியியலின் தந்தை” வீரமாமனிவர் பிறந்த நாளான நவம்பர் 8 தமிழ் அகராதியல் நாள் விழாவாக கெண்டாடப்படுகிறது
  • இவ்விழாவில் 2021-ம் ஆண்டுக்கான “தூயதமிழ்ப் பற்றாளர் விருது”, “தூயதமிழ் ஊடக விருது”, “நற்றமிழப் பாவலர் விருது” போன்ற விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.
  • 58 அறிஞர்களின் செறிவார்ந்த கட்டுரைகள் அடங்கிய 2022-ம் ஆண்டுக்கான “அகராதி ஆய்வு மலரும் வெளியிடப்பட்டள்ளது.

Nov 5 – Current Affairs | Nov 6 – Current Affairs

 

Leave a Comment