Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 08th December 2022

Daily Current Affairs

Here we have updated 08th December 2022 current affairs notes. This notes will helpful for those who are preparing competative exams like TNPSC, TRB and Police Exams.

தமிழக செய்தி

  • தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறி புதுவை மற்றும் ஸ்ரீஹரிகோட்டோ இடையே கரையை கடக்க உள்ளது. புயல் முன்னெச்சரிக்கை காரணமாக மீட்பு உபகரணங்களுடன் தேசிய பேரிடர் மீட்டுப்படையினர் சென்னைக்கு விரைந்துள்ளனர்
    • இப்புயலுக்கு “மாண்டஸ்” என பெயரிடப்பட்டுள்ளது.
    • “மாண்டஸ்” என்ற பெயரை ஐக்கிய அரபு அமீரகம் பரிந்துள்ளது.
    • தேசிய பேரிடர் மீட்புப்படை 23 டிசம்பர் 2005-ல் உருவாக்கப்பட்டது.
  • நவம்பர் 7-ல் ஆசிரியர் தகுதித் தேர்வின் முதல் தாளுக்கான முடிவு வெளியானது.
    • இலவச கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின்படி அனைத்து வகையான பள்ளிகளுலும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்பணியில் சேர தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற வேண்டும்.
    • முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராகவும் இரண்டாம் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் பட்டதாரி ஆசியர்களாகவும் பணி புரியலாம்.
    • தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் TET தேர்வு நடத்தப்படுகிறது.
    • தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் – 1988ல் உருவாக்கப்பட்டது.
    • இலவச கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் – 2009ல் உருவாக்கப்பட்டது.
  • அனைவருக்கும் வீட்டு வசதி” திட்டத்தின் கீழ் “தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியம்” (TNUHDB) மூலம் ரூ.40590 கோடியில் கட்டப்பட்ட 4,644 குடியிருப்புகளை தமிழக முதல்வர் தொடங்கிவைத்தார்.
    • TNUHDB – Tamil Nadu Urban Habitat Development Board
    • தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியம் – தமிழ்நாடு குடிசை பகுதிகள் (மேம்படுத்தல் மற்றும் இசைவு) சட்டத்தின் 1971 (Act 1971) மூலம் உருவாக்கப்பட்டது.
  • பத்மஸ்ரீ விருது பெற்ற பிரபல ஓவியரும், எழுத்தாளருமான மனோகர் தேவதாஸ் தனது 89வது வயதில் காலமானார்.

தேசிய செய்தி

  • டிசம்பர் 7ல் சர்வதேச விதிகளுக்குட்பட்டு வகுக்கப்பட்ட கடற்கொள்ளை தடுப்பு மசோதா மீது மக்களவையில் விவாதம் நடத்தப்பட்டது.
    • இம்மசோதாவானது ஐ.நா. கடல்விதிகள் சட்டத்தின்படி மத்திய அரசால் இயற்றப்பட்டது.
    • 2019-ல் மக்களவையில் அறிமுகப்படுத்துப்பட்டது.
  • உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியால் “உச்சநீதிமன்ற செயலி 2.0” தொடங்கி வைக்கப்பட்டது.
    • நீதித்துறை அதிகாரிகள் & மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களின் சிறப்பு அதிகாரிகளும் உச்சி நீதிமன்ற வழக்கு விசாரணை நடவடிக்கை குறித்த தகவல்களை நிகழ் நேரத்தில் அறிந்து கொள்ளும் வகையில் செயல்படுத்தப்பட்டள்ளது.
    • உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிடி.ஒய்.சந்திரசூட்
  • இந்திய ரிசர்வ் பேங்கிடமிருந்து (RBI) மற்ற வங்கிகள் பெறும் குறுகிய கால கடனுக்கான வட்டிவிகிதம். 0.35% உயர்த்தப்பட்டு 6.25%மாக நிர்ணயிக்கப்பட்டள்ளது.
    • நாட்டின் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் 2022-மே மாதத்தில் இருந்து 5வது முறையாக வட்டிவிகிதத்தை RBI உயர்த்தியுள்ளது.
    • RBI – Reserve Bank of India
    • உருவாக்கம் – 1935
    • நாட்டுடைமை – 1949
    • தலைமையகம் – 1935-ல் கல்கத்தா பின் 1937-லிருந்து மும்பைக்கு மாற்றப்பட்டது
  • ஒருங்கிணைந்த தில்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 250 வார்டுகளில் 134 வார்டுகளை கைப்பற்றியுள்ளது.
  • ஃபோர்பஸ் இதழ் வெளியிட்டுள்ள உலகின் அதிகாரமிக்க பெண்கள் பட்டியலில் நிர்மலா சீதாராமன் உட்பட 6 இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர்.

உலக செய்தி

  • டிசம்பர் 7ல் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தை ரஷ்ய பொருளாதார நிபுணர் ஆன்ட்ரே செர்க்கியேவிச் நிக்கிடின் பார்வையிட்டுள்ளார்.
  • 2022-ல் அதிகமாக தேடப்பட்ட சொற்களை Google வெளியிட்டடுள்ளது. முதலிடம் பெற்றள்ள 10 வார்த்தைகள்
    1. வோர்டில் – ஆன்லைன் வார்த்தை விளையாட்டு
    2. India vs England
    3. உக்ரைன்
    4. ராணி எலிசபெத்
    5. Ind vs SA
    6. Wrold Cup (உலகக்கோப்பை
    7. India vs West Indies
    8. iPhone 14
    9. Jeffery Dahmer
    10. Indian Premier League

விளையாட்டு செய்தி

  • உலக சாம்பியன் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றார் மீராபாய் சானு.
    • இதன் மூலம் உலக சாம்பியன் போட்டியில் இவர் வென்ற 2வது பதக்கமாகும்.
  • மும்பையினை சார்ந்த 16வயதுள்ள ஆதித்யா மிட்டல் இந்தியாவின் 77-வது கிராண்ட் மாஸ்டராக உருவானார்.
    • ஆதித்யா மிட்டல் ஸ்பெயினில் நடைபெற்ற பிரெகாட் ஓபன் செஸ் போட்டியில் ஸ்பெயின் வீரர் பிரான்சிஸ்கோ வலேஜா பொன்ஸுடன் நடந்த போட்டியில் டிரா செய்ததன் மூலம் 77-வது கிராண்ட் மாஸ்டராக உருவானார்.

Dec 06 – Current Affairs | Dec 07 – Current Affairs

Leave a Comment