Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 9th March 2023

Daily Current Affairs

Here we have updated 9th March 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

தமிழகச் செய்தி

  • ஆன்லைன் ரம்மி போன்ற இணையவழி சூதாட்ட தடை மசோதாவை ஆளுநர் என்.ரவி திருப்பி அனுப்பி உள்ளார்.
    • இணையவழி சூதாட்டத்தை தடை செய்வது மற்றும் இணைய வழி விளையாட்டுகளை முறைப்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்வதற்கு நீதிபதி கே.சந்துரு தலைமையில் தமிழக அரசால் குழு ஒன்று அமைக்கப்பட்டது.
    • இக்குழு பல்வேறு தரப்பினரின் கருத்துகளை கேட்டு ஏற்கனேவ உள்ள விதிகளின் படி அவற்றை கட்டுப்படுத்த இயலாது என்பதால் புதிதாக சட்டம் இயற்ற பரிந்துரைகளை வழங்கியது. இந்தப் பரிந்துரைகள் அடிப்படையில் தமிழக அரசு அவசர சட்டம் இயற்றி அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பட்டு ஆளுநர் ஒப்புலுக்கு அக்.1ல் அனுப்பியது
    • அக்.3ல் அவசர சட்டம் அரசிதழில் வெளியானது.
    • அக.17-ல் அவசர சட்டம் சட்டப்பேரவையில் சட்டமாக கொண்டு வர முடிவு.
    • குரல் வாக்கெடுப்பு மூலம் சட்டப்பேரவை சட்டம் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.
    • ஆளுநர் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதா குறித்து பல்வேறு விளக்கங்களை கேட்டார்.
    • தமிழக அரசு சார்பில் விளக்கங்கள் அளிக்கப்பட்டது.
    • டிச.2-ல் சட்டத்துறை அமைச்சர்  எஸ்.ரகுபதி ஆளுநரை சந்தித்து சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்குமாறு வலியுறுத்தினார்.
    • இணைய வழி விளையாட்டு நிறுவன பிரதிநிதிகள் ஆளுநரை சந்தித்தனர்.
    • சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு 5 மாதங்கள் ஆகிய நிலையும் ஆளநர் எவ்வித முடிவையும் எடுக்காமல் தற்போது சட்ட மசோதாவை திருப்பி அனுப்பியுள்ளார்.
  • சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் பேருந்தில் இயங்கும் நடமாடும் இதய பரிசோதனை மையத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.
    • இப்பேருந்து வாரந்தோறும் செய்வாய், வியாழக்கிழமைகளில் மாநகராட்சிக்குட்பட்ட குறிப்பிட்ட நகர்ப்புற சுகாதார மையங்களில் முகாம்கள் மூலமாக கர்ப்பிணிகள் மற்றும் பொதுமக்களுக்கு இதய நோய் தொடர்பான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.
  • “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் கொளத்தூர் தொகுதியில் ரூ.71.81 கோடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு சிகிச்சை பிரிவு கொண்ட கட்டித்திற்கு அடிக்கல் நாட்டினார்.
  • சென்னையில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் நடைபெற்ற சர்வதேச மகளிர் திருவிழா-வில் தமிழக முதல்வர் பங்கேற்றுள்ளார்.
    • பெண்களுக்காக கட்டணமில்லா பேருந்து பயணம் (08.05.21), புதுமைப் பெண் திட்டம் (05.09.22) கொண்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
  • இலக்கியம், சமூக பணிகளில் சிறப்பாக சேவை செய்து வரும் ஆர்.கமலம் சின்னசாமிக்கு “ஒளவையார் விருது”-தமிழக அரசால் வழங்கப்பட்டது
    • 90வயதாகின்ற அவர் 43 நூல்களை எழுதியுள்ளார்.
    • பாரட்டுச் சான்றிதழ், 8 கிராம் தங்கப்பதக்கம், ரூ.1 லட்சத்திற்கான காசோலையை அவருக்கு வழங்கப்பட்டது.
  • தமிழக அரசு சேலத்தை சேர்ந்த ம.இளம்பிறைக்கு “பெண் குழந்தை விருது” வழங்கியது.
    • அடுக்குமாடி குடியிருப்புகளில் மின்தூக்கி பழுதானபோது, அதை சரிசெய்ய புது கருவியை கண்டுபிடித்தற்காக வழங்கப்பட்டது.
    • இவருக்கு ரூ.1லட்சத்திற்கான காசோலை, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
  • பெண் குழந்தைகள், மகளிர் நலன் பாதுகாப்பை திறம்பட செயல்படுத்தியதிற்காக திருவள்ளூர் மாவட்டம் முதல் பரிசு பெற்றது. அப்பரிசினை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் பெற்றுக்கொண்டார்.
    • நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ், நாமக்கல் ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் ஆகியோர் முறையே 2வது, 3வது பரிசுகளை பெற்றுக்கொண்டனர்.

தேசிய செய்தி

  • மார்ச்-8ல் ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி ஆல்பனேசி நான்கு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.
    • குஜராத்தில் உள்ள நரேந்திரமோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்தியா-ஆஸ்திரேலியா நான்காவது டெஸ்ட் தொடரை இந்திய பிரதமருடன் பார்வையிட உள்ளார்.
  • திரிபுரா முதல்வராக மாணிக் சாஹா 2வது முறையாக பதவியேற்றார்.
  • மார்ச் 8-ல் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாஸாவும், இந்திய ஆய்வு நிறுவனமுமான இஸ்ரோவும் இணைந்து அமெரிக்காவில் கூட்டாக உருவாக்கிய “நிஸார்” என்ற புவி கண்காணிப்பு செய்கைகோளை இஸ்ரோவிடம் அமெரிக்க விமானப்படை ஒப்படைத்தது.
    • கலிஃபோர்னியாவில் உள்ள நாஸாவின் ஜெட் உந்துவிசை ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது.
    • 2,800 கிலோ எடை கொண்டது
    • “நாஸா இஸ்ரோ சிந்தடிக் அபெர்ட்சர் ரேடார் (நிஸார்) செயற்கைக்கோள் அமெரிக்க விமானப்படை யின்சி-17 விமானம் மூலம் பெங்களூருக்கு கொண்டு வரப்பட்டு இஸ்ரோவிடம் ஒப்படைக்கப்பட்டது.
  • ஏர் இந்தியா நிறுவனத்தில் 1,825 விமானிகளில் 15%பேர் பெண் விமானிகள் பணியாற்றுவதன் மூலம் உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான பெண் விமானிகளைக் கொண்ட நிறுவனமாக ஏர் இந்தியா திகழ்கிறது
  • பாக்டீரியாவல் உருவாக்கும் “ஸ்க்ரப் டைப்ஸ்” நோய்க்கான சிகிச்சையை இந்திய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
    • ஒரியன்டியா சுட்சுகாமுஷி என்ற பாக்டீரியாவால் பரவுகிறது
  • உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கை 2022-ல் இந்தியா 135வது இடம் பிடித்துள்ளது.
  • ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் குடும்பத்தலைவர் பெண்களுக்கு கூடுதலாக 50 நாள்கள் பணிகள் அதிகரிக்கப்பட்டது.
    • 25.05.2005 – தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம்
    • 2009 காந்தியடிகள் பிறந்த நாளான (02.10.2009) அன்று மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் என பெயர் மாற்றப்பட்டது

உலகச் செய்தி

  • உலகில் பெண்களுக்கு எதிரான அடக்குமுறை ஆப்கானிஸ்தானில் நடைபெறுவதாக ஆப்கானிஸ்தானுக்கான ஐ.நா. சிறப்பு பிரதிநிதி ரோஸா ஒடுன்பயவோ தெரிவித்துள்ளார்.

முக்கிய தினம்

  • உலக சிறுநீரக தினம்
    • கருப்பொருள் : “Kidney Health for Everyone – Preparing for the Unexpected, Supporting the Vulnerable”

Mar 07 Current Affairs  |  Mar 08 Current Affairs

Leave a Comment