Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 9th November 2022

Daily Current Affairs

தமிழக செய்தி

  • தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களின் 686.405 ச.கி.மீ பகுதியை காவிரி தெற்கு காட்டுயிர் காப்பகமாக  தமிழக அரசு அறிவித்துள்ளது.
    • இதன் மூலம் தமிழகத்தில் 17 காட்டுயிர் காப்பகமாக காவிரி தெற்கு காட்டுயிர் காப்பகம் உருவானது.
    • இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம் – கடவூர் தேவாங்கு சரணலாயம்.
  • இந்தியாவின் முதல் கடற்பசு பாதுகாப்பகம் தமிழ்நாட்டின் பாக்விரிகுடாவில் அமைக்கப்பட உள்ளது
  • நவம்பர் 7-ல் நடைபெற்ற கவிஞர் அழ.வள்ளியப்பா நூற்றாண்டு விழாவில் “குழந்தைகள் உலகம்” என்ற நூலை மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி வெளியிட்டுள்ளார்.

தேசிய செய்தி

  • ஓய்வு பெற்ற கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி ரிதுராஜ் அவஸ்தியை இந்திய சட்ட ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்தது மத்திய அரசு.
  • பெங்களூர் மெட்ரோ நிர்வாகத்திற்கு நிர்வாக பிரிவில் “சிலிக்கான் பள்ளத்தாக்கின் சிறந்த போக்குவரத்து விருது” வழங்கப்பட்டுள்ளது.
  • ஒலியியல் தன்மை மற்றும் மதீப்ப்பீட்டு வசதிக்கான “ஹல் மாட்யூல் ஆஃப் சப்மெரிசிபிள் தளத்தை” இந்திய கடற்படைக்காக கொச்சியில் உள்ள கடற்படை மற்றும் கடல்சார் ஆய்வகத்தில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) அறிமுகப்படுத்தியது.
  • மத்திய மாசுக்கட்டப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள மாசுபட்ட இந்திய நகரங்களின் பட்டியலில் 163 நகரங்களில் பீகாரின் கதிஹார் நகர் முதலிடம் பிடித்துள்ளது.
    • முதலிடம் – கதிர்கார் (AQI 360)
    • இரண்டாமிடம் – டெல்லி (AQI 354)
    • மூன்றாமிடம் – நொய்டா(AQI 328)
  • நவம்பர் 8-ல் 2023 – G 20 மாநாட்டிற்கான இந்தியாவின் சின்னம், கருப்பொருள் & இணைய தளத்தை இந்திய பிரதமர் வெளியிட்டுள்ளார்
    • டிசம்பர் 1-ல் G-20 நாடுகளுக்கு தலைமை பொறுப்பினை இந்தியா ஏற்க உள்ளது.
    • கருப்பொருள் – Vasudhaiva Kutumbakam : ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம்
    • 2022-ல் தலைமை பொறுப்பேற்றிருந்த நாடு – இந்தோனிசியா
    • நவம்பர் 15-16 வரை G20 மாநாடு-2022 நடைபெறும் இடம் – பாலி

விளையாட்டு செய்தி

  • பாரிஸ் மாஸ்டர் 1000 ஏடிபி டென்னிஸ் தொடரில் கூல்ஹோப் (நெதர்லாந்து) மற்றம் நில் ஸ்குப்ஸ்கி (இங்கிலாந்து) ஜோடி சாம்பியன் பட்டத்தை வென்றது.
    • ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் நார்வே வீரர் ஹோல்களர் ரூன் (19) முதன் முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்
  • நவம்பர் 6-ல் ஐக்கிய அரபு அமீரகத்தின் அல்ஐன நகரத்தில் “பாரா துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் தொடர்” தொடங்கியது.

முக்கிய தினம்

  • உத்திரகாண்ட் மாநிலம் உருவான தினம்
    • 2000 நவம்பர் 9-ல் வடக்கு உத்திரபிரதேசத்தில் இருந்து உத்திரகாண்ட் மாநிலம் 27வது மாநிலமாக உருவானது.
  • உலக சுதந்திர தினம்
    • கிழக்கு ஐரோப்பாவில் கம்யூனிச ஆட்சி முடிவு வந்தையும், பெர்லின் சுவர் இடிக்கப்பட்டதையும் நினைவு கூறத்தக்க வகையில் கொண்டாடப்படுகிறது.

Nov 7 – Current Affairs | Nov 8 – Current Affairs

 

Leave a Comment