Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 09th December 2022

Daily Current Affairs

Here we have updated 09th December 2022 current affairs notes. This notes will helpful for those who are preparing competative exams like TNPSC, TRB and Police Exams.

தமிழக செய்தி

  • கடல் அலைகளிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் “சிந்துஜா-1” என்ற கருவியை சென்னை ஐஐடி ஆய்வுக் குழுவினர் வடிவமைத்துள்ளனர்.
  • டிசம்பர் 8-ல் தமிழக சிறைகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் சிறைக் காவலர்களின் சீருடையில் கேமரா பொருத்தும் திட்டம் புழல் மத்திய சிறையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
  • அனைவருக்கும் வீட்டு வசதி” திட்டத்தின் கீழ் “தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியம்” (TNUHDB) மூலம் ரூ.40590 கோடியில் கட்டப்பட்ட 4,644 குடியிருப்புகளை தமிழக முதல்வர் தொடங்கிவைத்தார்.
    • TNUHDB – Tamil Nadu Urban Habitat Development Board
    • தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியம் – தமிழ்நாடு குடிசை பகுதிகள் (மேம்படுத்தல் மற்றும் இசைவு) சட்டத்தின் 1971 (Act 1971) மூலம் உருவாக்கப்பட்டது.

தேசிய செய்தி

  • குஜராத் சட்ட மன்றத் தேர்தலில் 182 தொகுதிகளில் 156 தொகுதிகளில் பா.ஜ.க. வென்று சாதனை படைத்துள்ளது.
    • இதற்கு முன் 1985-ல் 149 தொகுதியில் இந்திராகாந்தி அம்மையார் கால கட்டத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தது.
  • இமாச்சல பிரதேச தேர்தலில் காங்கிரஸ் கட்சி 40 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது.
  • மாற்றுத்திறனாளிகளுக்கென தனித்துறையை மகாராஷ்டிரா மாநில அரசு உருவாக்க உள்ளது.
  • 2024-டிசம்பர் வரை சாலையோர வியாபாரிகளுக்கான பிரதமரின் சார்பு நிதி (பிரதமரின் ஸ்வாநிதி) திட்டத்தினை நீட்டிப்பதாக மத்திய வீட்டு வசதி, நகர்ப்புற வறுமை ஒழிப்புத்துறை இணையமைச்சர் கெளசல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
    • பிரதமரின் ஸ்வாநிதி –  PM Svanidhi Scheme
    • சாலையோர வியாபாரிகள் சட்டம்2014
  • டிசம்பர் 9-ல் கோவாவின் பானஜியில் உலக அளவில் ஆயுஷ் மருத்துவ முறைகளின் செயல்திறன் மற்றும் வலிமையை வெளிபடுத்தும் நோக்கமாக 9வது உலக ஆயுர்வேத காங்கிரஸ் (WAC) & ஆரோக்யா எக்ஸ்போ 2022 தொடங்கியுள்ளது.
    • WAC – World Ayurveda Congress
  • 2023 பிப்ரவரி 20-23வரை “ரயில்வே பாதுகாப்பு உத்தி – எதிர்கால நோக்கம் மற்றும் பொறுப்புகள்” என்ற தலைப்புடன் “18-வது சர்வதேச ரயில்வே யூனியன் பாதுகாப்பு மாநாடு” ஜெய்ப்பூரில் (ராஜஸ்தான்) நடைபெற உள்ளது.
  • டிசம்பர் 7-ல் பல்கலைக்கழக வேந்தர் பதவியிலிருந்து ஆளுநரை நீக்கும் மசோதோ கேரளாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • Worldline india Digital Payment அறிக்கையின்படி இந்திய நகரங்களிலே அதிக எண்ணிகையிலான டிஜிட்டல் பணப் பரிமாற்றங்களை 2022 நிதியாண்டின் 3வது காலாண்டில் (ஜூலை-செப்டம்பர்) பெங்களூர் பதிவு செய்துள்ளது.
    • ஹைதரபாத், சென்னை, மும்பை, புனே, டெல்லி, கொல்கத்தா ஆகிய நகரங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.
  • ONGC நிறுவனத்தின் தலைவராக அருண்குமார் சிங் நியமிகப்பட்டுள்ளார்.
    • இவர் எண்ணெய் சுத்திகரிப்பு & சந்தைப்படுத்துதல் நிறுவனத்தின் முன்னாள் தலைவராவார்.
    • ONGC – Oil and Natural Gas Corporation Limited (1946)

உலக செய்தி

  • ரஷ்யா இந்தியாவின் 5வது வர்த்த கூட்டாளி ஆக உள்ளது.
    • இந்தியா-ரஷ்யா இருதரப்பு வர்த்தகம்  – 2250 கோடி டாடலர்
    • இந்தியாவிலிருந்து ரஷ்யாவுக்கான ஏற்றுமதி – 130 கோடி டாலர்
  • பெரு நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியாக டினா போலுவார்டே தேர்வானார்.

முக்கிய தினம்

  • சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம்
    • 2003 முதல் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
    • கருப்பொருள் : “UNCAC at 20: Uniting the World Against Corruption”

Dec 07 – Current Affairs | Dec 08 – Current Affairs

Leave a Comment