Daily Current Affairs
Here we have updated 10th February 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
தமிழகச் செய்தி
- தமிழகத்தில் முதன் முறையாக மதுரை மத்திய சிறையில் உள்ள சிறைவாசிகளுக்கு ஒலி, ஒளி வசதியுடன் கூடிய எண்ம (டிஜிட்டல்) நூலகம் அமைக்கப்பட உள்ளது.
- அரசுப் பள்ளிகளில் இலக்கிய மன்றம், வானவில் மன்றம் உள்ளிட்ட பல்வேறு மன்ற செயல்பாடுகளின் கீழ் நடைபெறும் போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்து செல்லப்பட உள்ளனர்.
- தமிழக அரசுப் பள்ளிகளில் வானவில் மன்றம், இலக்கிய மன்றம், விநாடி-வினா மன்றம், சிறார் திரைப்படம் உள்ளிட்ட செயல்பாடுகளில் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
- பிப்ரவரி 13 முதல் பள்ளி, வட்டாரம், மாவட்ட அளவில் பல்வேறு போட்டிகள் நடத்தப்படும்.
தேசிய செய்தி
- பிப்ரவரி 10ல் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்திலிருந்து புவி கண்காணிப்பு செயற்கைகோள் உள்பட 3 செயற்கைக்கோளுடன் விண்ணில் ஏவப்பட உள்ளது.
- பிப்ரவரி-1ன் படி உச்சநீதிமன்றத்தில் 69,511 வழக்குகளும், நாட்டிலுள்ள உயர்நீதிமன்றங்களில் 59,57,477 வழக்குகளும் நிலுவையில் உள்ளன.
- நாட்டில் மொத்தம் 25 உயர்நீதிமன்றங்கள் உள்ளன.
- அலகாபாத் நீதிமன்றத்தில் அதிகபட்சமாக 10.30 லட்சம் வழக்குகளும், சிக்கிம் உயர்நீதிமன்றத்தில் குறைந்தது 171 வழக்குகளும் நிலுவையில் உள்ளன.
- தேசிய அளவில் அனைத்து நீதிமன்றங்களிலும் 4.32 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன.
- ஆப்கானிஸ்தான் தொடர்பான் சூழல் குறித்து விவாதிக்க “அண்டை நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களுக்கான 5வது கூட்டம்” ரஷ்யாவில் நடைபெறுகிறது. கூட்டத்தில் கலந்து கொள்ள தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கலந்து கொள்கிறார்.
- 2011-2022 வரையில் 16,63,440 பேர் இந்தியக் குடியுரிமையை துறந்துள்ளன என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
- பிப்ரவரி 9ல் நாடு முழுவதும் டிஜிட்டல் பரிவர்தத்தனைகளை ஊக்குவிப்பதற்காக “டிஜிட்டல் பேமெண்ட்ஸ் உத்சவ்”யை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தொடங்கி வைத்தார்.
- 2022-23ம் ஆண்டுக்கான மிஷன் அந்த்யோதயா சர்வே தொடக்கம்.
- உத்திரபிரதேசத்தில் “குடும்பத்திற்கு ஒரு வேலை” என்ற திட்டத்தை செயல்படுத்த ஒரு யூனிட்டாக குடும்பங்களை அடையாளம் காண “குடும்ப ஐடி – ஒரு குடும்பம் ஒரு அடையாளம்” என்ற இணையதளம் தொடக்கம்
விளையாட்டுச் செய்தி
- பிப்ரவரி 10 முதல் ஐசிசியின் 8வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென்னாப்பிரிக்காவில் நடைைபெறுகிறது.
உலகச்செய்தி
- உலக பருப்பு தினம் – (பிப்ரவரி – 10)
- கருப்பொருள் : “நிலையான எதிர்காலத்திற்கான பருப்பு வகைகள்”