Daily Current Affairs
Here we have updated 10th March 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
தமிழகச் செய்தி
- பட்டு உற்பத்தித் திறனை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட, மாநில அளவில் சிற்நது விளங்கும் விவசாயிகள், நூற்பாளர்களுக்கு ரொக்கப்பரிசுகளை தமிழக முதல்வர் வழங்கினார்.
- மாநில அளவில் சிறந்த பட்டு விவசாயிக்கான பரிசு
- முதல் பரிசு – ரமேஷ் (திருப்பூர் மாவட்டம்)
- 2-ம் பரிசு – மு.சமுத்திரம் (தென்காசி மாவட்டம்)
- 3-ம் பரிசு – ப.சங்கர் (தருமபுரி மாவட்டம்)
- சிறந்த பட்டு நூற்பாளருக்கான பரிசு
- முதல் பரிசு – இரா.பெருமாள் (திருப்பூர் மாவட்டம்)
- 2-ம் பரிசு – சு.சேகர் (கிருஷ்ணகிரி மாவட்டம்)
- 3-ம் பரிசு – நா.முரளிகிருஷ்ணன் (திருப்பூர் மாவட்டம்)
- சிறந்த பலமுனை பட்டு நூற்பாளருக்கான பரிசு
- முதல் பரிசு – மு.ஜெயபால் (தருமபுரி மாவட்டம்)
- 2-ம் பரிசு – வே.மோகனராஜ் (கரூர் மாவட்டம்)
- 3-ம் பரிசு – ஜே.வேதவள்ளி (தருமபுரி மாவட்டம்)
- மாநில அளவில் சிறந்த பட்டு விவசாயிக்கான பரிசு
- சென்னை எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் உலக சிறுநீரக தின விழாவில் விவசாயப் பணியாளர்களுக்கு சிறுநீரக பாதிப்புகளைக் கண்டறியும் ஆய்வு விரைவில் தொடங்க உள்ளது என தமிழக மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
- உலக சிறுநீரக தின விழா – 09.03.2023
- உலகில் சிறுநீரக பாதிப்பால் பாதிக்கப்பட்ட 85 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளன.
- 3ல் ஒரு பங்கு நோயளிகள் இந்தியா மற்றும் சீனாவில் உள்ளன.
- தமிழ் மொழி வளர்ச்சிக்காக பாண்டிய மன்னன் சடையவர்மன் சுந்தர பாண்டியன் ஆகியோர் பெயரில் தேசிய தமிழ் வளர்ச்சி கவுன்சில் அமைக்கக் கோரிய மனுவிற்கு 4 வாரங்களுக்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு.
- 1990-ம் ஆண்டு உருது, சிந்தி, ஹிந்தி, சமஸ்கிருதம் போன்ற மொழிகளின் மேம்பாட்டுக்காக தேசிய கவுன்சில் அமைக்கப்பட்டுள்ளது.
- மார்ச் 9-ல் சென்னை நந்தனம் அரசு மேல்நிலைப்பள்ளியில் “புன்னகை சிறார்களின் பல் பாதுகாப்புத் திட்டம்” மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தொடங்கப்பட்டது.
- மருத்துவ மாணவர்களுக்கு மனநலன் காக்கும் “மனம்” என்ற சிறப்புத் திட்டம் 22 டிசம்பர் 2022 தொடங்கப்பட்டுள்ளது
- தமிழகத்தில் இணை நோய்களின் தாக்கம் இல்லாத 53% பேருக்கு நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு பாதிப்பு இருப்பது மக்கள் நல்வாழ்வுத்தறை ஆய்வில் தெரிய வந்துள்ளது.
- 2022-ல் தமிழகம் முழுவதும் உள்ள சிறுநீரக பாதிப்பு குறித்த தகவல்களைத் திரட்டுவதற்கான கள ஆய்வை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
- தமிழகத்தில் 8.7% பேர் நாள்பட்ட சிறுநீரக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்
- கால்நடை, மீன்வளத்துறைகள் சார்பில் ரூ.312.37 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை தமிழக முதல்வர் திறந்து வைத்துள்ளார்.
- சென்னை மாவட்டம் மாதவரத்தில் தேசிய கால்நடை குறிக்கோள் பணித்திட்டதின் கீழ், கால்நடை இறைச்சி உடல் அங்கப் பயன்பாட்டு ஆலை ஏற்படுத்தப்பட்டுள்ளது
- நீலகிரி மாவட்டத்தில் உறை விந்து உற்பத்தி நிலையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
- செயற்கை மணலுக்கான தரத்தை உறுதி செய்ய இந்திய தர நிர்ணய அமைவனத்தின் (பி.ஐ.எஸ்) சான்று கட்டாயம் வேண்டுமென தமிழக அரசு வெளியிட்ட தனிக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Bureau of Indian Standards (BIS) – 23.12.1986.
- தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கான பயணிகள் குறை மற்றும் புகார் தீர்வு உதவி எண் –1800 599 1500 மற்றும் பொது இணையதளம் www.arasubus.tn.gov.in ஆகியவற்றை தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தொடங்கி வைத்தார்.
தேசிய செய்தி
- மகாராஷ்டிர பட்ஜெட்டில் மகளிருக்கு அரசுபேருந்தில் பாதி கட்டணம், பத்திரபதிவில் கட்டணத்தில் மகளிருக்கு 1% தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
- மார்ச் 10-ல் அகில இந்திய முஸ்லீம் லீக் கட்சி தொடங்கி 75ஆண்டுகள் ஆனதால் தனது பவளவிழா கொண்டாடுகிறது.
- தொடங்கப்பட்ட ஆண்டு – 1906
- உருவான இடம் – வங்கதேச தலைநகர் டாக்கா
- தொடங்கியவர் – நவாப் சலீம் முல்லாகான்
- நடத்தியவர் – முகமது அலி ஜின்னா
- பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு தலைவர் – காயிதே மில்லத்
- இந்திய யூனியன் முஸ்லீம் கட்சி என பெயர் மாற்றம் – 1949
- முதல் மாநாடு – ராஜாஜி மகால், சென்னை
- பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் முஸ்லீம் சமுகம் இணைக்கப்பட்டு 3.5% தனி இட ஒதுக்கீடு பெற காரணமாயிருந்தது.
- சின்னம் – ஏணி
உலகச் செய்தி
- நேபாளத்தின் புதிய அதிபராக நேபாளி காங்கிரஸ் கட்சியின் ராம்சந்திர பெளடேல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
முக்கிய தினம்
- சர்வதேச பெண் நீதிபதிகள் தினம்