Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 10th November 2022

Daily Current Affairs

Here we have updated 10th November 2022 current affairs notes. This notes will helpful for those who are preparing competative exams like TNPSC, TRB and Police Exams.

தமிழக செய்தி

  • விஜயநகர மன்னன் அச்சுதேவன் காலத்தில் மணிபிரவாள முறையில் எழுதப்பட்ட சிவன் கோவில் கல்வெட்டுகள் திருப்பத்தூர் அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • சமீபத்தில் வெளியிடப்பட்ட தமிழக வரைவு வாக்காளர் பட்டியிலின்படி 6,18,26,182 வாக்காளர்கள் உள்ளன.
    • ஆண்கள் – 3,03,95,103 பேர்
    • பெண்கள் – 3,14,23,321 பேர்
    • மூன்றாம் பாலினத்தவர் – 7,758பேர்
  • தமிழக வரைவு வாக்காளர் பட்டிலில் அதிக வாக்காளரை கொண்ட தொகுதியாக சோழிங்கநல்லூர் தொகுதியும் குறைந்த வாக்காளரை கொண்ட தொகுதியாக சென்னை துறைமுக தொகுதியும் தேர்வாகியுள்ளது.
  • 15 நூற்றாண்டை சேர்ந்த விஜயநகர பேரரசு காலத்தினை சார்ந்த பழமையான எழுத்து பொறித்த கல்வெட்டு ராமநாதபுரம், பரமக்குடி அருகிலுள்ள கீழக்கொடுமலூரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தேசிய செய்தி

  • இந்தியாவில் 100 வயதை கடந்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2.49 லட்சம் பேர் ஆவர்.
    • 80 வயதை கடந்த வாக்காளர்களின் எண்ணிக்கை 1.80 கோடி பேர் ஆவர்.
  • இந்தியாவின் 50வது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக தனஞ்சய் ஒய் சந்திரசூட் பொறுப்பேற்றுள்ளார்.
    • இவருக்கு முன் பொறுப்பில் இருந்தவர் – U.U. லலித்
  • AIM (அடல் இன்னோவேஷன் மிஷன்), NITI ஆயோக் இன்று அடல் இந்தியா சேலஞ்ச் (ANIC) 2வது பதிப்பின்  இரண்டாம் கட்டத்தின் கீழ் பெண்களை மையமாகக் கொண்ட  சவால்களை அறிமுகப்படுத்துகிறது.
  • தூய்மையான கங்கைக்கான தேசிய இயக்கத்தால் (NMCG) 12வது வெபினார் பதிப்பு ஏற்பாடு செய்யபட்டுள்ளது.
    • கருப்பொருள் – பொது பங்கேற்பு
  • R.N.சிங் தெற்கு ரயில்வேயின் புதிய பொது மேலாளராக பதவியேற்றார்.
  • நவம்பர் 12 முதல் 16-க்குள் தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தால் (Skyroot Aerospace Pvt Ltd) தயாரிக்கப்பட்டுள்ள விக்ரம் எஸ்-ஐ (Vikram S-I) ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது.
    • விக்ரம் எஸ்-ஐ இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் என்ற பெருமையை பெற்றுள்ளது.
    • ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ஏவுதளத்தில் இருந்து செலுத்தப்படுகிறது.
    • இந்தியாவில் உருவாக்கப்பட்ட இலகு ரக ஹெலிகாப்படர் – பிரசண்ட்
    • பயணிகள் ட்ரோன் – வருணா

உலக செய்தி

  • Quacquarelli Symond அமைப்பு வெளியிட்டுள்ள 2023 ஆண்டுக்கான ஆசிய பல்கலைகழகங்களில் டாப் 200 தரவரிசை பட்டியலில் இந்தியாவின் 19 பல்கலைகழங்கள் இடம் பெற்றுள்ளன.
    • 40வது இடம் – மும்பை ஐ.ஐ.டி
    • 46வது இடம் – டெல்லி ஐ.ஐ.டி
    • 53வது இடம் – சென்னை ஐ.ஐ.டி
  • உலகிலேயே முதல் முறையாக வாய் வழியாக செலுத்தக் கூடிய கரோனோ தடுப்பு மருந்துக்கு சீனா அனுமதி அளித்துள்ளது.
    • கானிசினோ பயாலாஜிக்ஸ் நிறுவனம் இம்மருந்தினை தயாரித்துள்ளது.
    • இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி செர்வாவேக் தடுப்பூசி ஆகும்.
  • போர்பஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆசிய சக்தி வாய்ந்த 20 பெண்கள் பட்டியிலில் இந்திய பெண்கள் மூவர் இடம் பெற்றுள்ளனர்.
    • கொரனா ஊரடங்கில் தொழில் செயல்பாடுகள் முடங்கிய நிலையில் நெருக்கடிகளை எதிர்கொண்டு தங்கள் தொழிலை வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்றதன் அடிப்படையில் பட்டியலிட்டுள்ளது.
    • ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா நிறுவன தலைவர் – சோமா மண்டல்
    • எம்க்யூர் பார்மா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் – நமீதா தாப்பர்
    • ஹோனசா கன்ஸ்யூமர் நிறுவனத்தின் இணை நிறுவனர் – கஜல் அலக் ஆகியோர் ஆவர்.
  • இந்திய வம்சாவளியைச் சார்ந்த அருணா மில்லர் முதன் முறையாக அமெரிக்காவின் லெப்டினண்ட் கவர்னராக தேர்வானார்.

விளையாட்டு செய்தி

  • அமெரிக்காவின் போர்த்வொர்த் நகரில்  நடைபெற்ற பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் கரோலின் கார்சியா (பிரான்ஸ்) சாம்பியன் பட்டம் வென்றார்.
    • இரட்டையர் பிரிவில் வெரோனிகா குடெர்மித்தோவா (ரஷ்யா) எலிசி மெர்டன் (பெல்ஜியம்) இணை முதன் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
  • சர்வதேச பேட்மிண்டன் கூட்டமமைப்பு வெளியிட்டுள்ள தரவரிசை பட்டியலில் ஆண்கள் ஒற்றையர் வரிசையில் விக்டர் ஆக்சல்சென் (டென்மார்க்)  வீரர் முதலிடம் பிடித்துள்ளார்
    • இந்தியாவின் லக்சயா சென் 5வது இடமும், ஸ்ரீ காந்த் 11வது  இடமும், H.S.பிரனாய் 12வது இடமும் பிடித்தனர்.
  • பெண்கள் ஒற்றையர் வரிசையில் அகானே யமாகுச்சி (ஜப்பான்) வீராங்களை தொடர்ந்து முதலிடம் பிடித்துள்ளார்
    • இந்தியாவின் பி.வி. சிந்து 5வது இடம் பிடித்தார்.
    • இரட்டையர் பிரிவில் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி இணை 7வது இடம் பிடித்துள்ளது.
  • 2023-ல் இந்தியாவில் IBA (சர்வதேச குத்துச்சண்டை சங்கம்) மகளிர் உலக குத்துச்சண்டை நடைபெற உள்ளது.
    • IBA தலைவர் உமர்  கிரெம்லேவ், BFI தலைவர் அஜய் சிங் தலைமையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

முக்கிய தினம்

  • சர்வதேச கணக்கியல் தினம் (சர்வதேச கண்காளர்கள் தினம்)

Nov 8 – Current Affairs | Nov 9 – Current Affairs

 

Leave a Comment