Daily Current Affairs
Here we have updated 10th December 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
நினைவுத் தூண்
- குன்னூர், நஞ்சப்ப சத்திரத்தில் முப்படை தளபதி பிபின்ராவத் நினைவுத் தூண் திறக்ககப்பட்டுள்ளது.
- குன்னூர் ஹெலிக்காப்டர் விபத்தில் இறந்த பிபின் ராவத், பிபின் ராவத்தின் மனைவி மதுலிகா ராவத் மற்றும் 14 ராணுவ வீரர்களின் நினைவாக திறக்கப்பட்டுள்ளது
வந்தே பாரத் ரயில்
- நாட்டின் 50வது வந்தே பாரத் ரயிலின் தயாரிப்பு பணி விரைவில் முடிக்கப்பட்டு டிசம்பர் மாத இறுதிக்குள் வந்தே பாரத் ரயிலை ரயில்வே வாரியத்துக்கு அனுப்ப உள்ளதாக சென்னையிலுள்ள ஐசிஎஃப் திட்டமிட்டுள்ளது.
- முதல் வந்தே பாரத் ரயில் சேவையானது டெல்லி-வாரணாசி இடையே துவக்கப்பட்டுள்ளது
உயர்மட்ட குழு
- எண்ணூர் கழிமுக எண்ணெய் கசிவு தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள நிர்வாக ஆணைய தலைமையில் 9பேர் கொண்ட உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
- இக்குழுவினை தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்துள்ளது.
- தேசிய பசுமை தீர்ப்பாயம் – 2010
பொருளாதார பட்டியல்
- 2014 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் உலக பொருளாதார பட்டியலில் இந்தியா 11வது இடத்திலிருந்து 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
- 2027-ல் 3வது இடத்திற்கு முன்னேறுமென மோர்கன் ஸ்டான்லி பன்னாட்டு வங்கி மற்றும் நிதிச்சேவை நிறுவனம் கணித்துள்ளதாகவும்
- இருண்ட சூழலில் விடிவெள்ளி இந்தியா என்று சர்வதேச நாணய நிதியம் வர்ணித்துள்ளாதாகவும் தெரிவித்துள்ளார்.
மகாலெட்சுமி திட்டம்
- அரசுப்பேருந்துகளில் பெண்கள், திருநங்கைகள் இலவசமாக பயணிக்க தெலுங்கானாவில் மகாலெட்சுமி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது
- தெலங்கானா முதலவர் – ரேவந்த் ரெட்டி
- தெலுங்கானா சட்டப்பேரவை தொகுதிகள் – 119
தொடர்புடைய செய்திகள்
- தமிழக அரசுப்பேருந்துகளில் பெண்கள், திருநங்கைகள் இலவசமாக பயணிக்க விடியல் பயணம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
- கர்நாடாக மாநிலத்தில் அரசுப்பேருந்துகளில் பெண்கள், திருநங்கைகள் இலவசமாக பயணம் செய்யும் சக்தி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இன்ஃபினிட்டி அமைப்பு மாநாடு
- குஜராத் மாநிலம் காந்தி நகரின் கிஃப்ட் சிட்டியில் இன்ஃபினிட்டி ஃபோரம் எனப்படும் சர்வதேச நிதிச் சேவை மையங்களின் ஆணைய அமைப்பு 2-வது ஆண்டு மாநாடு நடைபெற்றுள்ளது.
- பூஜ்ஜிய கரியமில வாயு இலக்காக 2070 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அர்ஜுன் முண்டா
- மத்திய பழங்குடியின அமைச்சரான அர்ஜுன் முண்டாவிற்கு வேளாண் அமைச்சகத்தின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
- உணவு பதப்படுத்துதல் துறையின் இணை அமைச்சராக ஷோபா கரந்த்லாஜே நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- பழங்குடியினர் விவகாரத்துறை இணை அமைச்சராக பாரதி பவார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- மத்திய ஜல்சக்தித்துறை இணை அமைச்சராக ராஜீவ் சந்திரசேகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அந்நியச் செலாவணி
- டிசம்பர் 1 வரை இந்திய நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 60,400 கோடி டாலராக உயர்ந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ஜவாத் நினைவு பரிசு 2023
- உருது-ஆங்கில மொழிபெயர்ப்புக்காக வழங்கப்படும் ஜவாத் நினைவு பரிசு பூர்ணா ஸ்வாமியின் பலாஸ்தீனி கவிதை மொழிபெயர்ப்புக்கு வழங்கப்பட்டுள்ளது.
போர் நிறுத்த தீர்மானம் ரத்து
- காஸாவில் உடனடியாக போரை நிறுத்த வலியுத்தும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் வரைவுத் தீர்மானமானது ரத்து செய்யப்பட்டுள்ளது.
- அமெரிக்க நாடானது தனது வீட்டோ அதிகாரத்தின் மூலம் இந்த தீர்மானத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
- வரைவுத் தீர்மானத்தில் பொதுமக்கள் மீதான ஹமாஸ்தாக்குதல் குறித்த கண்டனம் தெரிவிக்கப்படவில்லை என்பதற்காக ரத்து செய்யப்பட்டுள்ளது.
உலக மனித உரிமைகள் தினம் (International Human Rights Day) – டிசம் 10
- கருப்பொருள்: “அனைவருக்கும் சுதந்திரம், சமத்துவம் மற்றும் நீதி”
- 12.10.1993-ல் இந்தியாவில் மனித உரிமைகள் சட்டம் இயற்றப்பட்டது.
- தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைமையகம் – டில்லி
- 17.04.1997-ல் இந்தியாவில் தமிழ்நாட்டில் தான் முதன் மனித உரிமைகள் ஆணையம் தொடரப்பட்டது.
சர்வதேச விலங்கு உரிமைகள் தினம் (International Animal Rights Day) – டிசம் 10
December 8 Current Affairs | December 9 Current Affairs