Daily Current Affairs
Here we have updated 10th December 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாள்
- உ.வே.சா-வின் பிறந்த நாளான பிப்ரவரி 19 தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக கொண்டாடப்பட உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- காலம்: 19.02.1855 – 28.04.1942
- சிறப்பு பெயர்: தமிழ்தாத்தா, புலமைப்பெருங்கடல்
- 1932 – டாக்டர் பட்டம் (சென்னை பல்கலைக்கழகம்)
- 1942 – உ.வே.சா.நூலகம் (சென்னை – திருவான்மியூர்)
- அஞ்சல் தலை – 2006
- வாழ்க்கை வரலாறு – என்சரிதம் (ஆனந்த விகடன் இதழ்)
வைக்கம் போராட்டம்
- டிசம்பர் 12-ல் வைக்கம் போராட்டத்தின் வெற்றி நூற்றாண்டு நிறைவு விழா வைக்கம் நகரில் நடைபெறுகிறது.
நந்தவனம் பாரம்பரிய பூங்கா
- நந்தவனம் பாரம்பரிய பூங்காவானது மகாபலிபுரத்தில் அமைக்கப்பட உள்ளது.
சஞ்சய் மல்ஹோத்ரா
- ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- ரிசர்வ் வங்கியின் 26வது ஆளுநராக பணியேற்க உள்ளார்.
- 25வது ரிசர்வ் வங்கியின் ஆளுநராக பணியாற்றிய சக்திகாந்ததாஸ் பணி ஓய்வு பெற உள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
- RBI தொடங்கப்பட்ட ஆண்டு – 01.04.1935
- RBI நாட்டுடமையாக்கப்பட்ட ஆண்டு – 1949
- தலைமையகம் – 1935-ல் கல்கத்தா பின் 1937-லிருந்து மும்பைக்கு மாற்றப்பட்டது.
டங்ஸ்டன் சுரங்கம்
- மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்படுவதை எதிர்த்து தனித் தீர்மான தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
ஆபரேஷன் திரை நீக்கு
- தமிழகத்தில் இணையவழி குற்றங்களை தடுக்க ஆபரேஷன் திரை நீக்கு தொடங்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- இந்தியாவில் சைபர் செக்யூரிட்டி ஹெல்ப்லைன் : 1930
- முதியோர்கள் உதவி எண்: 14567
- குழந்தைகள் உதவி எண்: 1098
எல்ஐசி பீமா சகி திட்டம்
- எல்ஐசி பீமா சகி திட்டம் ஹரியானாவின் பானிபட் நகரில் தொடங்கப்பட்டுள்ளது.
புகை பழக்கம்
- புகை பழக்கத்திற்கு அடிமையானவர்கள் நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடம் பிடித்துள்ளது.
- இந்தியாவில் புகையிலை பயன்பாடு: 27கோடி
- ஆண்கள் : 42.4%
- பெண்கள் : 14.2%
தொடர்புடைய செய்திகள்
- உலக புகையிலை எதிர்ப்பு தினம் : மே 31
முக்கிய தினம்
மனித உரிமைகள் தினம் (Human Rights Day) டிசம்பர் – 10
- கருப்பொருள்: Our Rights, Our Future, Right Now
- உலக மனித உரிமைகள் அமைப்பானது டிசம்பர் 10, 1948-ல் உருவாக்கப்பட்டதன் நினைவாக கொண்டாடப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
- 12.10.1993-ல் இந்தியாவில் மனித உரிமைகள் சட்டம் இயற்றப்பட்டது.
- தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைமையகம் – டில்லி
- 17.04.1997-ல் இந்தியாவில் தமிழ்நாட்டில் தான் முதன் மனித உரிமைகள் ஆணையம் தொடரப்பட்டது.
நோபல் பரிசு தினம் (Nobel Prize Day) டிசம்பர் – 10
சர்வதேச விலங்கு உரிமைகள் தினம் (International Animal Rights Day) டிசம்பர் – 10