Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 10th February 2024

Daily Current Affairs

Here we have updated 10th February 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

யானை உயிரிழப்பு தடுத்தல்

Vetri Study Center Current Affairs - Elephant Death

  • ரயில் பாதைகளில் ஏற்படும் யானை உயிரிழப்பினை தடுக்க AI தொழில்நுட்பத்தை தமிழ்நாடு பயன்படுத்தியுள்ளது.
  • இந்தியாவில் இத்தொழில் நுட்பத்தினை பயன்படுத்திய முதல் மாநிலம் தமிழ்நாடு ஆகும்.

தொடர்புடைய செய்திகள்

  • உலக யானைகள் தினம் – Aug 12
  • தமிழ்நாட்டில் யானைகளின் எண்ணிக்கை 2961-ஆக உள்ளது.
  • புலிகள் திட்டம் மற்றும் யானைகள் திட்டம் இணைக்கப்பட்டு புலிகள் மற்றும் யானைகள் திட்டப்பிரிவு உருவாக்கப்பட்டது.
  • “திட்டம் கஜா கோதா (Project Gajah Kotha)” அசாமில் செயல்படுத்தப்படுகிறது
  • அசாமின் காசிரங்கா தேசிய பூங்காவில் கஞ்உத்சவ் (யானைகள் திருவிழா) நடைபெற்றுள்ளது.
  • இந்தியாவின் பாரம்பரிய விலங்கு – யானை (2010)
  • கர்நாடாகாவில் யானைகள் அதிகம் உள்ளன.
  • அசாமில் அதிகமாக யானைகள் இரயில் அடிப்பட்டு இறக்கின்றன.

பீகார்

  • பீகார் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையமும், ஐஐடி பாட்னாவும் இணைந்து விவசாயிகளுக்காக நிதிஷ் (NITISH) என்ற கருவியை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
  • வரவிருக்கும் மின்னல், வெள்ளம், வெப்ப அலைகள் மற்றும் குளிர் அலைகள் குறித்து பயனர்களுக்கு எச்சரிக்க இக்கருவி பயன்படுகிறது.

நாடாளுமன்ற தேர்தல்  2024

Vetri Study Center Current Affairs - Voters

  • இந்தியாவில் மொத்தமாக 96,88,21,929 வாக்காளர்கள்  உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • கடந்த தேர்தலை விட 6% வாக்காளர்கள் அதிகமாக உள்ளன.
  • புதிதாக 2 கோடி இளம் வாக்காளர்கள் இணைக்கப்பட்டுள்ளன.
  • உலகிலேய அதிக வாக்காளர்களை கொண்ட நாடாக இந்தியா உள்ளது.

பாரத ரத்னா விருது

Vetri Study Center Current Affairs - Bharat Ratna Award

சமீபத்தில் 3 பேருக்கு பாரத ரத்னா விருதானது அறிவிக்கப்பட்டுள்ளது.

1954 முதல் வழங்கப்படும் பாரத ரத்னா விருதாளர்களின் எண்ணிக்கை 53ஆக உயர்ந்துள்ளது.

1. சரண் சிங்

    • இந்தியாவின் 5வது பிரதமர்
    • இவரது பிறந்த நாள் விழாவானது தேசிய விவசாயிகள் தினமாக (டிசம்பர்  23) கொண்டாடப்படுகிறது

2. பி.வி.நரசிம்ம ராவ்

    • 1971- ஆந்திர முதல்வர்
    • 1991-96 வரை இந்திய பிரதமர் (நேரு குடும்பத்தை சாராத காங்கிரஸ் பிரதமர்)

3. எம்.எஸ்.சுவாமிநாதன்

    • இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை

தொடர்புடைய செய்திகள்

  • இதற்கு முன் பீகாரின் முன்னாள் முதலமைச்சரான கர்பூரி தாக்கூர் (ஏழைகளின் நாயகன்), எல்.கே.அத்வானி ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
  • 1954-ல் முதல் பாரத ரத்னா விருது மூதறிஞர் ராஜாஜி, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், சி.வி.ராமன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

தேசிய பழங்குடியினர் திருவிழா

  • தேசிய பழங்குடியினர் திருவிழா புதுதில்லியில் நடைபெற உள்ளது.

நரேந்திர குமார் யாதவ்

  • கட்டுடல் இந்தியா இயக்கத்தின் (Fit India Movement) பிராண்ட் அம்பாசிஸ்டராக நரேந்திர குமார் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பஞ்சு மிட்டாய் தடை

  • பஞ்சு மிட்டாயில் கலர் கூட்டுவதற்காக ரோடமைன் – பி என்ற வேதிபொருள் சேர்க்கப்படுவதால் புதுச்சேரியில் இப்பொருளுக்கு தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

இரட்டை சதம்

Vetri Study Center Current Affairs - Pathum Nissanka

  • ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் பதுன் நிசங்கா (இலங்கை) 210 ரன்கள் அடித்துள்ளார்.
  • இதன் மூலம் முதல் இரட்டை சதம் அடித்த இலங்கை வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

டேவிட் வார்னர்

  • அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளிலும் 100 ஆட்டங்களுக்கு மேல் பங்கேற்ற முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை டேவிட் வார்னர் படைத்துள்ளார்.
  • உலக அளவில் இச்சாதனை புரிந்த 3வது வீராக திகழ்கிறார்.
  • விராட்கோலி, ராஸ்டெய்லர் இவருக்கு முன் இச்சாதனையை புரிந்துள்ளனர்.

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம்  (தமிழ்நாடு) – பிப்ரவரி 09

தேசிய குடற்புழு நீக்க தினம்  (National Deworming Day) – பிப்ரவரி 10

Vetri Study Center Current Affairs - National Deworming Day

  • ஆண்டுக்கு இருமுறை இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • பிப்ரவரி 10, ஆகஸ்ட் 10
  • கருப்பொருள்: Eliminate STH: Invest in a healthier future for children.

உலக பருப்பு தினம் (World Pulses Day) – பிப்ரவரி 10

Vetri Study Center Current Affairs - World Pulses Day

  • கருப்பொருள்: Pulses: Nourishing Soils and People.

February 8 Current Affairs  | February 9 Current Affairs

Related Links

Leave a Comment