Daily Current Affairs
Here we have updated 10th January 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
பொங்கல் பரிசுத் திட்டம்
- தமிழகத்தில் அரசி குடும்ப அட்டைதார்களுக்கு ரூ.1,000 வழங்கும் பொங்கல் பரிசு திட்டத்தினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.
நலம் நாடி செயலி (Nalam Naadi)
- மாற்று திறனாளி மாணவர்களின் சிறப்பு பயிற்றுநர்களுக்காக நலம்நாடி என்ற செயலியானது வெளியிடப்படுள்ளது.
நவீன திரைப்பட நகரம்
- ரூ.500 கோடி செலவில் திருவள்ளூர், பூந்தமல்லியில் நவீன திரைப்பட நகரம் அமைய உள்ளது
விழுதுகள் திட்டம் (Vilutukal Thittam)
- தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விழுதுகள் திட்டத்தினை தொடங்கி வைத்துள்ளார்.
- உலகெங்கும் வாழும் தமிழக அரசுப் பள்ளிகளை சேர்ந்த முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணைத்து அரசுப் பள்ளிகளை வலுப்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கம் ஆகும்.
மத்தியபிரதேசம்
- இந்தியாவின் முதல் ஆராேக்கியமான, சுகாதாரமான உணவுத் தெருவானது மத்தியபிரதேசத்தில் தொடங்கப்பட்டது.
- உஜ்ஜயினிலுள்ள மகாகாளேஸ்வரர் கோயில் அருகே உருவாக்கப்பட்டுள்ளது.
- இத் தெருவிற்கு பிரசாதம் என வழங்கப்பட்டுள்ளது.
தலைமை வழக்கறிஞர்
- தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மின்சார பைக் டாக்ஸி
- அசாம் மாநிலத்தில் 100% மின்சார பைக் டாக்ஸி சேவையானது தொடங்கப்பட்டுள்ளது.
- இது இந்தியாவின் முதல் 100% மின்சார பைக் டாக்ஸி சேவை ஆகும்.
விதியின் நான்கு நட்சத்திரங்கள்
- இந்திய முன்னாள் ராணுவ தளபதி ஜெனராலான எம்.எம்.நரவனே தன் சுயசரிதை புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.
- இதற்கு விதியின் நான்கு நட்சத்திரங்கள் என பெயரிடப்பட்டுள்ளது.
- இந்தியாவின் 28வது ராணுவ தலைமை தளபதியாக பணியாற்றியுள்ளார்.
அர்ஜூனா விருது
- தமிழக செஸ் வீராங்கனையான வைஷாலிக்கு அர்ஜூனா விருதானது வழங்கப்பட்டுள்ளது.
- இவ்விருதினை பெறும் 3வது இந்திய பெண்மணி ஆவார்.
- இவர் இந்தியாவின் 84வது கிராண்ட்மாஸ்டர் ஆவார்.
- முகமுது சமி உள்பட 25 பேருக்கு அர்ஜூனா விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்தியா கடனுதவி
- இலங்கை மேற்கொள்ளும் அனுராதபுரம் – மாஹோ இடையிலான ரயில் பாதையை மேம்படுத்தும் பணிகளுக்கு இந்தியா ரூ.758 கோடி கடனுதவி வழங்கியுள்ளது.
- இலங்கையில் தமிழர்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்த தேசிய ஒற்றுமை அலுவலக மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆசிய ஒலிம்பிக் தகுதி சுற்று-இந்தோனேசியா
- 10மீ ஏர் பிஸ்டல் ரைஃபிள் கலப்பு அணிகள் பிரிவில் ருத்ராங்க்ஸ் பாட்டீல், மெஹூலி கோஸ் ஆகியோர் தங்கம் வென்று ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
- 10மீ ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் அர்ஜுன் சீமா, ரிதம் சங்கவான் ஆகியோர் வெள்ளி வென்றுள்ளனர்.
- ஜூனியர் 10மீ ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் இஷா அனில் தக்சேல், உமா மகேஷ் மத்தினேன ஆகியோர் தங்கமும், அபினவ் ஷா, அன்வி ரத்தோட் ஆகியோர் வெண்கலமும் வென்றுள்ளனர்.
கேப்ரியல் அட்டல்
- பிரான்ஸ் நாட்டின் புதிய பிரதமராக கேப்ரியல் அட்டல் (Gabriel Attal) அறிவிக்கப்பட்டுள்ளார். 34வது வயதான இவர் பிரான்ஸ் இளம் பிரதமர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
உலக ஹிந்தி தினம் (World Hindi Day) – Jan 10
January 7-8 Current Affairs | January 9 Current Affairs