Daily Current Affairs
Here we have updated 10th July 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம்
- உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி டாக்டர் செளமியா சுவாமிநாதன் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் முதன்மை ஆலேசாகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- எச்.ஐ.வி. காசநோய் உள்ளிட்ட நோய்களுக்கான ஆராய்ச்சியில் சிறப்பாக செயல்பட்டதற்காக சவுமியா சுவாமிநாதனுக்கு யஷ்வந்த் ராவ் சவ்வான் தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- உலகளவில் காசநோய் ஒழிப்பு இலக்கு – 2030
- இந்தியாவில் காசநோய் ஒழிப்பு இலக்கு – 2025
- காசநோய் இல்லா தமிழ்நாடு – 2025
கீழடி அகழாய்வு
- சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்ற அகழாய்வில் மூங்கில் கம்புகள் ஊன்றுவதற்கான குச்சிகள், இரு பானைகளின் விளிம்புகள் கண்டறியப்பட்டுள்ளன
மருங்கூர் அகழாய்வு
- சமீபத்தில் ராஜராஜ சோழன் கால செம்பு காசுகள் கண்டறியப்பட்ட கடலூர் மாவட்டம் மருங்கூரில் நடைபெற்ற அகழாய்வில் வட்டச்சில்லுகள் கண்டறியப்பட்டுள்ளன.
கோலட்மேன் சுற்றுச்சூழல் பரிசு
- சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் சிறப்பாக பங்காற்றியதற்காக அசோக் சுக்லா-விற்கு கோலட்மேன் சுற்றுச்சூழல் பரிசு 2024 வழங்கப்பட்டுள்ளது.
பெண் எம்.பி.க்கள்
- நடைபெற்று முடிந்த 18வது லோக்சபா தேர்தலில் 74 பெண் எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
- மேலும் மத்திய அமைச்சரவையில் 7 பெண்கள் அமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
- அதிக பெண் எம்.பி.க்கள் – 17வது லோக் சபா (78 நபர்கள்)
- குறைந்த பெண் எம்.பி.க்கள் – 6வது லோக் சபா (19 நபர்கள்)
சஞ்சய் மிஸ்ரா
- ஓய்வு பெற்ற நீதிபதியான சஞ்சய் மிஸ்ரா ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் (GSTAT) புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்
- GSTAT – Good Service Tax Appellate Tribunal
மத்திய அமைச்சரவை ஒப்புதல்
- உயர் கடல்களில் கடல் பல்லுயிர் பெருக்கத்தின் நீண்ட காலப் பாதுகாப்பை நோக்கமாக கொண்டு தேசிய அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட பல்லுயிர் ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கோல்ட்மேன் ஆர்டர் ஆஃப் செயின்ட் ஆண்ட்ரூ அப்போஸ்தலர் விருது
- ரஷ்யாவின் உயரிய விருதான கோலட்மேன் ஆர்டர் ஆஃப் செயின்ட் ஆண்ட்ரூ அப்போஸ்தலர் விருதினை (Order of st Andrew he Apostle) ரஷ்ய பிரதமர் விளாமிதிர் புதின் வழங்கியுள்ளார்.
சென்டினல் அணு ஏவுகணை
- கண்டம் விட்டு கண்டம் பாயும் சென்டினல் அணு ஏவுகணையை நார்த்ரோப் க்ரம்மன் என்பவர் உருவாக்கியுள்ளார்
சென்னை-விளாடிவோஸ்டாக் கடல்வழி பாதை ஒப்பந்தம்
- 2019-ல் கையெழுத்தான சென்னை-விளாடிவோஸ்டாக் கடல்வழி பாதை ஒப்பந்தம் பற்றி ரஷ்யாவில் இந்திய பிரதமர் பேச உள்ளார்.
- சென்னை-விளாடிவோஸ்டாக் கடல்வழி பாதை தூரம் – 10,458 கி.மீ.
- தூரத்தை கடக்க ஆகும் நாட்கள் – 24
- இப்பாதையானது வங்காள விரிகுடா, தாய்லாந்து, சீனா, பிலிப்பைன்ஸ், தென்கொரியா, ஜப்பான் வழி செயல்கிறது.
பிலிகிரி ரங்கநாதசுவாமி கோயில் புலிகள் காப்பகம்
- பிலிகிரி ரங்கநாதசுவாமி கோயில் புலிகள் காப்பகத்தில் ஜம்போ எனப்படும் பெண் யானை இறந்துள்ளது.
- இக் காப்பகம் கர்நாடகா மாநிலத்தில் அமைந்துள்ளது.
முக்கிய தினம்
- உலகளாவிய ஆற்றல் சுதந்திர தினம் (Global Energy Independence Day) – ஜூலை 10