Daily Current Affairs
Here we have updated 10th November 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
புகார் எண்
- தமிழ்நாடு அரசு பேருந்துகளை குறைகளை தெரிவிக்க 149 என்னும் எண் (Transport Complaint Number) அறிமுகம் செய்யப்பட்டள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- 1962 – கால்நடை ஆம்புலன்ஸ் இலவச எண்
- 14417 – பள்ளிகல்வித்துறை இலவச எண்
- 14567 – மூத்த குடிமக்களுக்கான இலவச எண்
ஆதித்யா எல்-1
- சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆராய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய ஆதித்யா எல்-1 விண்கலம் சூரிய கதிர்வீச்சின் அலையை பதிவு செய்து தரவுகள் வெளியிட்டுள்ளது.
- இவ்விண்கலத்தில் உள்ள ஹெல்1 ஓஎஸ் எனும் எக்ஸ்ரேஸ்பெக்ட்ராே மீட்டர் கருவியானது சூரிய கதிர்வீச்சின் ஒளி அலையை பதிவு செய்துள்ளது.
- ஏற்கனவே அமெரிக்காவின் ஜிஓஇஎஸ் விண்கலம் வழங்கிய தரவுகளுடன் ஒத்து போகிறது.
- பெங்களூர் யூ.ஆர்.ராவ் செயற்கைக்கோள் மையம் இந்த கருவியை தயாரித்துள்ளது.
யுபிஐ பரிவர்த்தனை
- இந்திய அரசின் யுபிஜ பரிவர்த்தனையை மலேசிய அரசு ஏற்று கொள்ள உள்ளது
- 2016-ல் இந்திய அரசு யுபிஐ கட்டமைப்பை நடைமுறைப்படுத்தியுள்ளது.
இட ஒதுக்கீடு
- பீகார் மாநிலம் இட ஒதுக்கீட்டை 75%-மாக அதிகரித்துள்ளது.
- பீகாரில் முதல் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- இந்தியாவில் அதிகமாக இட ஒதுக்கீடு அளிக்கும் மாநிலம் – சத்திஸ்கர் (82%)
நெல் ரகம் அறிமுகம்
- அதிக மகசூல் தரும் குறுகிய கால நெல் ரகமான பூசா-2090 (PUSA-2090) ஐஏஆர்ஐ (IARI) அறிமுகம் செய்துள்ளது.
- IARI – Indian Agricultural Research Institute – 01.04.1905
QS உலக பல்கலைக்கழக தரவரிசை 2024
- பிரிட்டரின் QS உலக பல்கலைக்கழக தரவரிசை பட்டியியலில் 148 இந்திய உயர் கல்வி நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளன.
- 133 சீன உயர்கல்வி நிறுவனங்களும், 96 ஜப்பான் உயர்கல்வி நிறுவனங்களும் இப்பட்டியலில் இடம் பிடித்துள்ளன.
- QS – Quacquarelli Symonds
- இந்திய அளவில் மும்பை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது.
காசநோய்
- உலகளாவிய காசநோய் பாதிப்பு அறிக்கை 2023-ஐ உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது.
- இதன்படி 2022-ல் உலக அளவில் 75லட்சம் பேர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- காசநோய் பாதிப்பு குறைப்பு விகிதிதத்தில் இந்தியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் முன்னிலை வகிக்கின்றன.
அனுஷா ஷா (Anusha Shah)
- பிரிட்டனின் கட்டடப் பொறியாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனுஷா ஷா தேர்வாகியுள்ளார்
- இவர் முதல் இந்திய வம்சாவளி பிரிட்டன் கட்டடப் பொறியாளர் ஆவார்.
தேசிய விளையாட்டு போட்டி 2023 – கோவா
- 37வது தேசிய விளையாட்டு போட்டியில் மகாராஷ்டிரா அணியானது (228 பதக்கங்கள்) ஒட்டு மொத்த சாம்பியன் ஷிப்பை வென்றுள்ளது.
- சர்வீஸ் அணி இரண்டாவது இடமும், ஹரியானா மூன்றாவது இடமும் பிடித்துள்ளது.
- தமிழ்நாடு (77 பதக்கங்கள்) 10வது இடத்தை பிடித்துள்ளது.
38-வது தேசிய விளையாட்டு போட்டி
- 38-வது தேசிய விளையாட்டு போட்டியை உத்திரகாண்ட் மாநிலம் நடத்த உள்ளது.
அமைதி மற்றும் வளர்ச்சிக்கான உலக அறிவியல் தினம் (World Science Day of Peace and Development) – Nov 10
- கருப்பொருள்: “Building Trust in Science”
உலக பொது போக்குவரத்து தினம் (World Public Transport Day) – Nov 10
உலக நோய்த்தடுப்பு நாள் (World Immunization Day) – Nov 10
November-8 Current Affairs | November-9 Current Affairs