Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 10th October 2023

Daily Current Affairs

Here we have updated 10th October  2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

தீர்மானம் நிறைவேற்றம்

Vetri Study Center Current Affairs - Implementation of resolution

  • உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் படி தமிழகத்திற்கான காவிரி நீரை கர்நாடக அரசு திறந்து விட மத்திய அரசானது உத்தரவிட வேண்டும் என்ற தனித் தீர்மானம் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேறியுள்ளது.

முதல்வர் பெண் சக்தி பிரச்சாரம் (Mukhyamantri Mahila Sashaktikaran Abhiyan)

Vetri Study Center Current Affairs - Mukhyamantri Mahila Sashaktikaran Abhiyan

  • மகாராஷ்டிராவிலுள்ள பெண்களுக்களுக்காக புதிய தொழில் தொடங்குதல், தொழில் தொடங்க வங்கிக்கடன் பெறுதல், உற்பத்தி பொருள்களை சந்தைபடுத்தல் தொடர்பான பயிற்சி அளிக்கும் திட்டமானது மகராஷ்டிராவில் தொடங்கப்பட்டுள்ளது.
  • இத்திட்டமானது 2024 அக்டோபர் 1 வரை அமலில் இருக்கும்

கூட்டு இராணுவப்போர் பயிற்சி

Vetri Study Center Current Affairs - Sampriti Joint Army Combat Exercise

  • இந்தியா-வங்கதேசம் இடையே 11வது சம்ப்ரிதி கூட்டு இராணுவப் போர் பயிற்சியானது (Sampriti Joint Army Combat Exercise) மேகாலயா, உம்ரோய்யில் நடைபெற்றுள்ளது.

இந்தியா-தான்சானியா ஒப்பந்தம்

Vetri Study Center Current Affairs - India-Tanzania Agreement

  • எண்மயமாக்கல், கலாச்சாரம், விளையாட்டு, கடல்சார் தொழில்கள், வர்த்தக கப்பல் பயண தகவல் பரிமாற்றம் போன்ற 6 ஒப்பந்தங்களானது இந்தியா-தான்சானியா இடையே கையெழுத்தாகியுள்ளன.
  • தான்சானிய நாட்டின் முதல் அதிபரான சாமியா சுலுஹு ஹசன் இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள போது கையெழுத்தாகி உள்ளன.
  • மேலும் இந்தியா-தான்சானியா இடையே பாதுகாப்பை ஒத்துழைப்பினையும் மேற்கொள்ள பேச்சு வார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு

Vetri Study Center Current Affairs - Nepal Prize for Economics

  • பெண் பொருளாதார நிபுணரும், ஹார்வர்ட் பல்கலைக் கழக பேராசிரியருமான க்ளாடியா கோல்டினுக்கு (அமெரிக்கா) பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
  • தொழிலாளர் சந்தையில் பெண்களின் பங்களிப்பு, பணியிடத்தில் பாலின இடைவெளி தொடர்பான புரிதல்களை மேம்படுத்தும் ஆய்வுக்காக நோபல் பரிசு வழங்கப்பட உள்ளது.
  • 2021-ல் பணிச்சூழல் மற்றும் குடும்பம் – சம வாய்புக்கான பெண்களின் நூற்றாண்டு கால போராட்டம் என்ற தலைப்பிலான ஆய்வு நூலை வெளியிட்டுள்ளார்.
  • 1968-ல் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு உருவாக்கப்பட்டுள்ளது. 92 பொருளாதார நிபுணர்கள் நோபல் பரிசு பெற்றுள்ளனர்.
  • இவ்விருதினை பெறும் 3வது பெண்மணி ஆவார்

உலகளாவிய இந்தியர் விருது

Vetri Study Center Current Affairs - Global Indian Award

  • எழுத்தாளரும், சமுக சேவகருமான சுதா மூர்த்திக்கு உலகளாவிய இந்தியர் விருது வழங்கப்பட்டுள்ளது.
  • கனடா இந்தியா அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டுள்ளது.

கத்தார் கிராண்ட் ஃப்ரீ (Qatar Grand Prix)

Vetri Study Center Current Affairs - Qatar Grand Prix

  • ரெட்புல் அணியின் வீரரான மேக்ஸ் வெர்ஸ்டாபென் கத்தார் கிராண்ட் ஃப்ரீ போட்டியின் 17வது ரேசில் சம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். இந்த சீசனில் இவர் பெறும் 14வது வெற்றி ஆகும்.
  • மேலும் 2023 ஆண்டுக்கான நடப்பு சாம்பியனாக மாறியுள்ளார். 2021, 2022, 2023 என மூன்று ஆண்டுகளாக சாம்பியான மாறியுள்ளார்.
  • 2வது இடத்தை  ஆஸ்கார் பியாஸ்திரியும் (மெக் லாரென் அணி), மூன்றாவது இடத்தை லாண்டோ நோரிஸுயும் (மெக் லாரென் அணி) பிடித்துள்ளனர்.

உலக மன நல தினம் (World Mental Health Day)Oct 10

Vetri Study Center Current Affairs - World Mental Health Day

  • கருப்பொருள்: “Mental Health is a Universal Human Right”.

தேசிய தபால் தினம் (National Post Day)Oct 10

Vetri Study Center Current Affairs - National Post Day

  • உலக தபால் தினம் (World Postal Day) – Oct 09

மரண தண்டனைக்கு எதிரான உலக தினம் (World Day against the Death Penalty)Oct 10

October 08 Current Affairs | October 09 Current Affairs

Leave a Comment