Daily Current Affairs
Here we have updated 10th September 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
புவிசார் குறியீடு
- கன்னியாகுமரி மாவட்டத்தின் கிராம்புவிற்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
- தற்போதுவரை தமிழ்நாட்டில் 58 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
- புவிசார் குறியீட்டில் தற்போது முதலிடத்தில் உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- இந்தியாவின் “பொருள்கள் புவிசார் குறியீடுகள் (பதிவு மற்றும் பாதுகாப்பு) சட்டம் 1999 கொண்டு வரப்பட்டு 2003-ல் செப்டம்பர் 15-முதல் நடைமுறைக்கு வந்தது.
- உலகில் முதன் முறையாக டார்ஜிலிங் தேயிலைக்கு புவிசார் குறியீடு (2004) வழங்கப்பட்டது
தமிழ்ச்சங்க கலைவிழா
- அமெரிக்காவின் சிகாகோவில் தமிழ்ச்சங்க கலை விழா நடைபெற்றது.
GST கவுன்சில் கூட்டம்
- 54வது GST கவுன்சில் கூட்டமானது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- GST (Goods and Services Tax) – சரக்கு மற்றும் சேவை வரி – 01.07. 2017
- ஜி.எஸ்.டி அமல்படுத்தல் – 2016 – அரசியலமைப்புச் சடத்தின் 122வது சட்டத்திருத்தம்
- வரி விகிதங்கள் – 0%, 5%, 12%, 18%, 28%
- சரக்கு மற்றும் சேவை வரியை முதன் முதலில் அறிமுகப்படுத்திய நாடு – பிரான்ஸ்
ஆபரேஷன் பேடியா
- உத்திரபிரதேசத்தில் ஓநாய்களை கட்டுப்படுத்த ஆபரேஷன் பேடியா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- நமீபியாவில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக யானை, வரிக்குதிரை, காட்டெருமை, மான் போன்ற விலங்குகளை வேட்டையாட அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
தூய்மையான காற்று நகரம்
இந்தியாவின் தூய்மையான காற்று நகரப் பட்டியல்
10லட்சத்திற்கு அதிகமாக மக்கள் வாழும் பகுதி
- 1வது இடம் – சூரத் (குஜராத்)
- 2வது இடம் – ஜபல்பூர் (மத்தியபிரதேசம்)
3 முதல் 10லட்சம் வரை மக்கள் வாழும் பகுதி
- 1வது இடம் – பிரோசாபாத் (உத்திரப்பிரதேசம்)
3 லட்சத்திற்கு கீழ் மக்கள் வாழும் பகுதி
- 1வது இடம் – ரேபரேலி (உத்திரப்பிரதேசம்)
தேசிய மின் ஆளுகை விருது 2024
- பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் போஷான் டிராக்கர் முன்னெடுப்பிற்காக தேசிய மின் ஆளுகை விருது 2024-யை வென்றுள்ளது.
ஈரநில தீநுண்மி
- சீனாவில் ஈரநில தீநுண்மி (வெட்லேண்ட் வைரஸ் – வெல்ஸ்) என்னும் புதிய தீநுண்மி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- இக்கிருமி மூளை நரம்பு மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாகும்.
- ஒட்டுண்ணி பூச்சி கடிப்பதால் இக்கிருமி பரவுகிறது
இந்திரா பயிற்சி
- இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே இந்திரா கூட்டு இராணுவப் பயிற்சி நடைபெற்றுள்ளது.
குரங்கு அம்மை நோய் (Monkeypox)
- இந்தியாவில் குரங்கு அம்மை நோயால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார்.
- 14.08.2024-ல் உலக சுகாதார அமைப்பு அவசர நிலையாக குரங்கு அம்மை தொற்று நோயை அறிவித்துள்ளது.
- குரங்கு அம்மை நோய் 1958-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
கல்வி அவசர நிலை
- பாகிஸ்தான் நாட்டில் கல்வி அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
- குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் இருப்பதால் இந்நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
பராக்கா அணுமின் நிலையம்
- அரபு நாட்டின் முதல் அணுமின் நிலையமான பராக்கா அணுமின் நிலையம் அபுதாபியில் தொடங்கப்பட்டுள்ளது.
அல்ஜீரியா
- அல்ஜீரியா நாட்டின் அதிபராக அப்தெல் மடஜித் டேபிபோர்ன் தேர்வாகியுள்ளார்
யாகி புயல்
- அண்மையில் தென்சீனக்கடலில் உருவாகியுள்ள யாகி புயல் வியட்நாம் நாட்டினை உலுக்கியுள்ளது.
தடகள சாம்பியன்ஷிப் போட்டி
- 7 நாடுகள் கலந்து கொள்ளும் தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடைபெற உள்ளது.
பாராலிம்பிக் போட்டி
- பாரீஸில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் பதக்கப் பட்டியிலில் இந்தியா 29 பதக்கங்களுடன் (7 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலம்) 18வது இடத்தை பிடித்துள்ளது.
- இதுவரை நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டிகளிலே அதிக பதக்கங்களை இந்த முறைதான் வென்றுள்ளது.
- பாரா ஒலிம்பிக்கில் இதுவரை 60 பதக்கங்களை வென்றுள்ளது.
- முதலிடம் – சீனா
- இரண்டாமிடம் – பிரிட்டன்
- மூன்றாமிடம் – அமெரிக்கா
அமெரிக்கா ஓபன் டென்னிஸ் போட்டி
- ஆடவர் பிரிவில் ஜானிக் சின்னர் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
- பெண்கள் பிரிவில் சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
முக்கிய தினம்
சர்வதேச பிசியோதெரபி தினம் (World Physicals Therapy Day) – செப்டம்பர் 8
உலக தற்கொலை தடுப்பு தினம் (World Suicide Prevention Day) – செப்டம்பர் 10