Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 11th January 2023

Daily Current Affairs

Here we have updated 11th January 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

தமிழக செய்தி

  • ஜனவரி 11ல் இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்ட 2.21லட்சம் விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டுத் திட்டதின் கீழ் ரூ.318 கோடி இழப்பீட்டுத் தொகை வழங்கும் பணியை முதல்வர் தொடக்கி வைத்தார்.
    • 2016-17ஆம் நிதியாண்டில் இருந்து பயிர்காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
  • தமிழகத்தில் நூலகங்களை நிர்வகிக்க 15 பேர் அடங்கிய மாநில நூலகக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
    • தலைவர் – பள்ளிகல்வித்துறை அமைச்சர்
  • தமிழக முதல்வர் மு.ஸ்டாலின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டபேரவையிலிருந்து வெளியேறினார்.
    • தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் தனது உரையின் போது ஆளுநர் வெளியேறுவது இதுவே முதன் முறையாகும்.
    • ஆளுநர் உரையாற்றிய பின் பேரவை விதி 17-ஐ தளர்த்தி தமிழக முதல்வர் தீர்மானம் கொண்டு வந்தார்.
    • அரசியலமைப்பு சட்டம் 175 அல்லது 176பிரிவின்படி அவை கூடியிருக்கும்போது ஆளுநர் உரை நிகழ்த்துகையிலோ நிகழந்துவதற்கு முன்போ, பின்போ உறுப்பினர் எவரும் குறுக்கீடு செய்யக்கூடாது. அவ்வாறு குறுக்கீடு செய்தால் அடுத்து நிகழும் கூட்டத்தில் விதி 17-ன் கீழ்  நடவடிக்கை எடுக்கப்படும். இவ்விதியை தளர்த்தி தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
  • மாமல்லபுரம் அருகே புதிய துணை நகரம் உருவாக்கப்படும் என ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய செய்தி

  • 2022-ம் ஆண்டில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனுப்பிய பணம் ரூ.8 லட்சம் கோடியாக அதிகரத்துள்ளது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
  • மார்ச் 12ல் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெற உள்ள “95வது ஆஸ்கர் விழா”வில் 10இந்திய திரைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.
  • ஜனவரி 12ல் கர்நாடாகாவின் ஹுப்பாலியில் “26வது தேசிய இளைஞர் விழா”வை பிரதமர் தொடங்கி வைத்தார்.
    • கருப்பொருள் : Viksit Yuva – Viksit Bharat
  • பிப்ரவரி 16-18வரை மும்பையில் உலக மசாலா காங்கிரஸின் 14வது பதிப்பு நடைபெற உள்ளது.
    • 1990 மே 31 JJ மருத்துவமனையில் முதல் முறையாக லேப்ராஸ் கோபிக் அறுவை சிகிச்சை செய்ததன் மூலம் ஆசியாவிலேயே முதல் லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை செய்தவர் என்ற பெருமை பெற்றிருந்தார்.
  • ஜனவரி 19-23வரை 213வது ஆண்டு பெங்களூரு மலர் கண்காட்சி வால்பாக் தாவரவியல் பூங்காவில் நடைபெறுகிறது.
  • ஜனவரி 9ல் மத்தியபிரதேசம் இந்தூரில் 17வது பிரவாசி பாரதிய நிவாஸ் மாநாடு நடைபெற்றுள்ளது.
    • கருப்பொருள் : “Diaspora : Reliable partners for India’s progress in Amrit Kaal”

உலக செய்தி

  • அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையத்தின் (நாசா) தலைமை தொழில்நுட்ப நிபுணராக இந்திய-அமெரிக்கரான ஏ.சி.சரணியா நியமிக்கப்பட்டுள்ளார்.

Jan 08-09 Current Affairs | Jan 10 Current Affairs

Leave a Comment