Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 11th February 2023

Daily Current Affairs

Here we have updated 11th February 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

தேசிய செய்தி

  • பிப்ரவரி 10 முதல் 3 நாட்கள் நடைபெறும் உத்திரபிரதேச உலக முதலீட்டாளர் மாநாடு-ஐ பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
    • இம் மாநாட்டில் “இந்தியாவின் செழிப்பில் உலக வளமை அடங்கியுள்ளது. உலகின் பிரகாச எதிர்காலத்திற்கான் உத்தரவாதம் இந்தியாவிடம் இருக்கிறது” என மோடி தெரிவித்துள்ளார்.
    • மத்திய பட்ஜெட்டில் அறிமுகப்படுத்திய “ஸ்ரீ அன்னம்” என்ற திட்டத்தில் உள்ள சிறுதானியங்கள் ஊட்டசத்து நிறைந்தவை எனவும் கூறியுள்ளார்.
  • ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்திலிருந்து SSLV-D2 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
  • கடந்த 3 ஆண்டுகளில் ரூ2.58 லட்சம் கோடி மதிப்பிலான உள்நாட்டு பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவிப்பு.
    • 2019-20 நிதியாண்டு : ரூ.79,071 கோடி
    • 2020-21 நிதியாண்டு : ரூ.84,643 கோடி
    • 2021- 22 நிதியாண்டு : ரூ.94,846 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • சர்வதேச தரக் கட்டமைப்பு குறியீட்டில் அங்கீகாரம் வழங்கும் நடைமுறைகளில் இந்தியா 5வது இடம் பிடித்துள்ளது. ஜெர்மனி, அமெரிக்கா, சீனா, இத்தாலி அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன
    • தர நிர்ணயத்தில் இந்தியா 9வது இடம் பிடித்துள்ளது. சீனா, ஜெர்மனி, ஜப்பான், பிரிட்டன் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.
    • ஒட்டுமொத்த தரக்கட்டமைப்பு குறியீட்டில் 10வது இடம் பிடித்துள்ளது. ஜெர்மெனி, சீனா, அமெரிக்கா முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன.

உலகச்செய்தி

  • உலகிலேயே முதன் முறையாக உயிரி தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மோப்பம் பிடிக்கும் ரோபோக்களை இஸ்ரேல் அறிமுகப்படுத்தியுள்ளது.
  • யுனெஸ்கோ அமைதிக்கான விருதினை ஜெர்மெனியின் முன்னாள் அதிபர் ஏஞ்சலே மெர்கல் பெற்றுள்ளார்.
  • ஈரான் தனது முதல் சுரங்க விமான படைதளத்தை “ஈகிள் 44” என்ற பெயரில் உருவாக்கியுள்ளது.
    • ஆளில்லா விமானங்கள், அனைத்து விதமான போர் விமானங்களையும் நிறுத்த உதவுகிறது.

விளையாட்டுச் செய்தி

  • பிப்ரவரி 11ல் இந்தியாவில் முதல் எஃப்ஐஏ ஃபார்முலா இ கார் பந்தயம் தெலுங்கானவின் ஹைதரபாத் நகரில் உள்ள ஸ்ட்ரீட் சர்க்கியூட்டில் நடைபெறுகிறது..

முக்கிய தினம்

  • உலக நோயாளர் தினம் – (பிப்ரவரி – 11)
    • கருப்பொருள் : “standing beside those who suffer on a path of charity”
    • 1992-ல் போப் இரண்டாம் ஜான் பாலால் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு ஆறுதலையும் ஆதரவையும் வழங்கவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அனுசரிக்கப்பட்டது.

Feb 08-09 Current Affairs  |  Feb 10 Current Affairs

Leave a Comment