Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 11th March 2023

Daily Current Affairs

Here we have updated 11th March 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

தமிழகச் செய்தி

  • மார்ச் 18-20வரை துபையில் ஒன்பதாவது உலகத் தமிழர் பொருளாதர மாநாடு நடைபெறும் என உலகத் தமிழர் பொருளாதார நிறுவன தலைவர் வி.ஆர்.எஸ்.சம்பத் தெரிவித்துள்ளார்.
  • அசோக் லேலண்ட் நிறுவனம் பெண்கள் மட்டும் பணியாற்றும் பிரத்யேக உற்பத்தியகத்தைமுதல் முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது.

தேசிய செய்தி

  • மார்ச் 10-ல் பேறுகால சர்க்கரை நோய் விழிப்புணர்வு அமைப்பு சார்பில் கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் சர்க்கரை நோய் பாதிப்பு குறித்த 17-வது தேசிய கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது.
    • வடக்கு தில்லி சர்க்கரை நோய் மருத்துவ மையத்தின் இயக்குநர் ராஜீவ் சாவ்லாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
  • “இன்ஃப்ளூயன்ஸா-ஏ வகை வைரஸ்”-ல் ஏற்படும் “ஹெச்3என்2 பருவ காய்ச்சலுக்கு” இருவர் பலி
  • புதுதில்லியில் நடந்த தேசிய பேரிடர் அபாயக் குறைப்பு  கருத்தரங்கின் 3வது அமர்வில் பேரிடர் மீட்புப் பணிகளில் சிறந்து பணியாற்றிய வீரர்களுக்கு “சுபாஷ் சந்திர போஸ் ஆப்தபிரபந்தன்” விருதுகளை பிரதமர் வழங்கியுள்ளார்.
    • நாட்டில் முதன் முறையாக 2001-ல் குஜராத்தில் பேரிடர் மேலாண்மை சட்டம் இயற்றப்பட்டது.
    • 2005-ல் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டமும், பின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையமும் அமைக்கப்பட்டது.
  • மார்ச் 10-ல் இந்தியா, அமெரிக்கா இடையே செமி கண்டக்டர் (குறை மின்கடத்தி) விநியோக முறை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
    • உலகில் அதிநவீன செமிகண்டக்டர்களில் 93% தைவானில் தயாரிக்கப்படுகிறது.
  • அரசியல் ரீதியில் நிதி முறைகேடு புகார்களில் சிக்கும் நபர்களையும் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்ட (பிஎம்எல்ஏ) கண்காணிப்பில் கொண்டு வரும் வகையில் திருத்தங்களை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
  • மார்ச் 10-ல் இந்திய விமானப் படையில் பயன்பாட்டுக்காக 6 டோர்னியா விமானங்களைக் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் (ஹெச்ஏஎல்) மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • இந்திய கடற்படையின் பிரம்மாண்ட கூட்டுப் போர் பயிற்சியான டிரோபெக்ஸ் 2003 இந்தியப் பெருங்கடலில் தொடங்கியது.
  • இந்தியாவில் பட்டம் பெற்றிருந்தால் ஆஸ்திரேலியாவில் அங்கீகரிக்கபடும் என அந்நாட்டின் பிரதமர் அறிவித்துள்ளார்.
    • இந்தியாவின் 17வது மிகப் பெரும் வர்த்தக கூட்டமைப்பாக ஆஸ்திரேலியா திகழ்கிறது.
  • யாவ்ஷாங் திருவிழா மணிப்பூரில் நடைபெறுகிறது.
  • நியூயார்ககின் மன்ஹாட்டன் ஃபெடரல் மாவட்ட நீதிமன்றத்தின் முதல் இந்திய-அமெரிக்க நீதிபயாக அருண் சுப்ரமணியன் தேர்ந்தெடுக்கப்ட்டுள்ளார்.

உலகச் செய்தி

  • சீன அதிபராக 3வது முறையாக ஷி ஜிபின்பிங் தேர்வு.
    • சீனாவின் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனரான மா சேதுங்குக்குப் பிறகு மூன்றாவது முறையாக பதவி வகிக்கும் ஒரே தலைவர் இவரே.
    • துணை அதிபராக ஹான் ஷெங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • 2024-ம் ஆண்டிற்கான 6வது பிம்ஸ்டெக் உச்சி மாநாடு (BIMSTEC) தாய்லாந்தில் நடைபெற உள்ளது
    • BIMSTEC – Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Corporation.
    • இந்தியா, இலங்கை, வங்கதேசம், மியான்மர், தாய்லாந்து, நேபாளம், பூடான் ஆகிய நாடுகள் இதில் இடம் பெற்றுள்ளன.
  • 5வது ஆசியான்-இந்தியா வணிக உச்சி மாநாடு 2023 கோலாம்பூரில் நடைபெற்றுள்ளது

Mar 09 Current Affairs  |  Mar 10 Current Affairs

Leave a Comment